32 வருஷம் ஆகியும் இன்னும் நிக்காம ஓடுது... உலகையே மிரள விட்ட இந்திய நிறுவனத்தின் தயாரிப்பு!

இந்தியாவில் ஒரு சில கார்களுக்கு வாடிக்கையாளர்கள் மனதில் தனி இடம் இருக்கும். ஹிந்துஸ்தான் அம்பாஸிடர், மாருதி 800, மாருதி ஆம்னி போன்ற வாகனங்களை இதற்கு உதாரணமாக கூற முடியும். கார்கள் உடன் சேர்த்து, ஒரு சில டூவீலர்களையும், இந்திய வாடிக்கையாளர்கள் தலையில் தூக்கி வைத்து கொண்டாடி வருகின்றனர்.

இந்தியாவின் ஆகச்சிறந்த டூவீலர்கள் என்ற ஒரு பட்டியலை தயாரித்தால், அதில் ஹீரோ ஸ்பிளெண்டருக்கு (Hero Splendor) நிச்சயமாக ஒரு இடம் இருக்கும். ஹீரோ ஸ்பிளெண்டர் பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு சுமார் 32 ஆண்டுகள் கடந்து விட்டன. கடந்த 1994ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ஹீரோ ஸ்பிளெண்டர் பைக், 32 ஆண்டுகளை கடந்த பின்னரும் கூட, தற்போதும் விற்பனையில் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது.

Hero Super Splendor Xtec Side Design

கடந்த 2025ம் ஆண்டு டிசம்பர் மாதத்திலும் கூட, இந்தியாவில் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட டூவீலர் என்ற பெருமையை, ஹீரோ ஸ்பிளெண்டர் பைக்தான் பெற்றுள்ளது. கடந்த 2025ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் இந்தியாவில் மிகவும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட டாப் 10 டூவீலர்களின் பட்டியல் (Top 10 Two Wheelers December 2025) தற்போது வெளியாகியுள்ளது.

ரஸ்லேன் தளத்தில் வெளியாகியுள்ள இந்த பட்டியலில், ஹீரோ ஸ்பிளெண்டர் முதல் இடத்தை பிடித்துள்ளது. கடந்த 2025ம் ஆண்டு டிசம்பர் மாதம் 2,80,760 ஹீரோ ஸ்பிளெண்டர் பைக்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இந்த பட்டியலில் 2வது இடத்தில் உள்ள ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டரின் விற்பனை எண்ணிக்கையோ வெறும் 1,81,604 மட்டுமே.

Hero Super Splendor Xtec

அதாவது 2வது இடத்தில் உள்ள ஹோண்டா ஆக்டிவாவை விட 99,156 ஹீரோ ஸ்பிளெண்டர் பைக்குகள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஹீரோ ஸ்பிளெண்டர் பைக் இந்திய சந்தையில் விற்பனையில் முதல் இடத்தை பிடித்திருப்பதுடன் மட்டுமல்லாது, விற்பனையில் சிறப்பான வளர்ச்சியை பதிவு செய்தும் அசத்தியுள்ளது.

அதாவது கடந்த 2024ம் ஆண்டு டிசம்பர் மாதம் 1,92,438 ஹீரோ ஸ்பிளெண்டர் பைக்குகள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டிருந்தன. ஆனால் கடந்த 2025ம் ஆண்டு டிசம்பர் மாதம், நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டபடி 2,80,760 ஹீரோ ஸ்பிளெண்டர் பைக்குகள் விற்பனையாகியுள்ளன. அதாவது கடந்த 2024ம் ஆண்டு டிசம்பர் மாதத்துடன் ஒப்பிடும்போது, 2025ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் 88,322 ஹீரோ ஸ்பிளெண்டர் பைக்குகள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன.

இது 45.90 சதவீத வளர்ச்சி ஆகும். ஹீரோ ஸ்பிளெண்டர் பைக்கின் விற்பனை கிட்டத்தட்ட அப்படியே இரட்டிப்பாகியுள்ளதை இதன் மூலம் நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. ஹீரோ ஸ்பிளெண்டர் பைக் 100 சிசி மற்றும் 125 சிசி செக்மெண்ட்களில், ஏராளமான வெர்ஷன்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதள தகவலின்படி தற்போதைய நிலையில், ஸ்பிளெண்டர் ப்ளஸ், ஸ்பிளெண்டர் ப்ளஸ் எக்ஸ்டெக், ஸ்பிளெண்டர் ப்ளஸ் எக்ஸ்டெக் 2.0 மற்றும் சூப்பர் ஸ்பிளெண்டர் எக்ஸ்டெக் உள்ளிட்ட வெர்ஷன்கள் விற்பனையாகி கொண்டுள்ளன. இதன் மூலம் பலதரப்பட்ட வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்து, விற்பனையில் அசைக்க முடியாத இடத்தில் ஹீரோ ஸ்பிளெண்டர் அமர்ந்துள்ளது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: சிறப்பான மைலேஜ், குறைவான பராமரிப்பு செலவு, சரியான விலை நிர்ணயம் மற்றும் நீண்ட வருடங்களுக்கு நீடித்து உழைக்கும் தன்மை போன்ற காரணங்களால்தான், ஹீரோ ஸ்பிளெண்டர் வாடிக்கையாளர்களின் மனம் கவர்ந்த டூவீலர்களில் ஒன்றாக மிக நீண்ட காலமாக இருந்து வருகிறது.

இது இந்திய அளவில் மட்டுமல்லாது, உலக அளவிலும் அதிகமாக விற்பனையாகி வரும் டூவீலர்களில் ஒன்று என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. ஒரு இந்திய நிறுவனத்தின் தயாரிப்பு, உலகிலேயே மிகவும் அதிகமாக விற்பனையாகி வரும் டூவீலர்களில் ஒன்றாக இருப்பது, நாம் அனைவரும் பெருமை கொள்ள வேண்டிய விஷயம்தான் என்பதில் துளியும் சந்தேகம் இல்லை.

More from DriveSpark

Article Published On: Saturday, January 24, 2026, 17:35 [IST]
English summary
Hero splendor sales report december 2025 45 90 per cent growth
மேலும்... #hero motocorp #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+