வெறும் ரூ.45,000 விலையில் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்.. ஹீரோ அதிரடி விற்பனை

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் இந்தியாவில் எலெக்ட்ரிக் இருசக்கர வாகன தயாரிப்பு மற்றும் விற்பனையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லவிருக்கிறது. தற்போது இந்திய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை சந்தையில் நான்காம் இடத்தில் உள்ளது ஹீரோ. கடந்த சில மாதங்களில் இந்தியாவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை வெகுவாக அதிகரித்துள்ளது. அதில் ஹீரோவின் விடா பிராண்டு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களும் வாடிக்கையாளர்களிடம் தங்களுக்கான இடத்தைப் பிடித்துள்ளன.

தற்போது ஆண்டுக்கு சுமார் 3.3 லட்சம் எலெக்ட்ரிக் வாகனங்களை அந்நிறுவனம் தயாரித்து வரும் நிலையில், 2027ம் ஆண்டிற்குள் இதனை இரண்டு மடங்காக 6.6 லட்சம் வரை உயர்ந்த ஹீரோ திட்டமிட்டுள்ளது. இந்தியாவில் விடா பிராண்டின் மூலமாகவே எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களை ஹீரோ விற்பனை செய்து வருகிறது.

Hero Vida V2

எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பை உயர்த்துவது மட்டுமின்றி, புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல் ஒன்றையும் அந்நிறுவனம் வெளியிடவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்தியாவில் ரூ.1 லட்சம் விலைக்குள்ளான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்குத் தான் வாடிக்கையாளர்களிடம் அதிக டிமாண்டு இருந்து வருகறது. ஏற்கனவே 1 லட்சம் ரூபாய்க்குள்ளான விலையில் VX2 ஸ்கூட்டர் மாடலை விடா பிராண்டின் கீழ் ஹீரோ விற்பனை செய்து வரும் நிலையில், மற்றொரு விலை குறைவான எலெக்ட்ரிக ஸ்கூட்டரையும் வெளியிடவிருப்பதாகத் தெரிகிறது.

வரும் ஆகஸ்ட் மாதத்தையொட்டி இந்தப் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் வெளியீடு திட்டமிடப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகி வருகின்றன. தற்போது விற்பனையில் இருக்கும் சிறிய பேட்டரி பேக்குகளைக் கொண்ட மாடல்களைப் போல இல்லாமல் சற்று பெரிதாக 3.8 kWh பேட்டரி பேக் கொண்டதாக புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை ஹீரோ உருவாக்கி வருவதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

Hero Vida VX2 Knight Edition

இதுவரை இந்தியாவில் ஹீரோ விற்பனை செய்து வரும் அனைத்து எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களிலுமே ரிமூவபிள் பேட்டரி பேக் தேர்வகளே பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் நிலையான பேட்டரி பேக்கை அந்நிறுவனம் பயன்படுத்தவிருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால் பூட் ஸ்பேஸ் உள்ளிட்ட பிராக்டிகலான வசதிகளை புதிய ஸ்கூட்டரில் ஹீரோ சற்று கூடுதலாகக் கொடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறைவான விலை என்று சொல்லும் போது BaaS திட்டத்தைப் பற்றிப் பேசாமல் இருக்க முடியாது. எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் முதல் முறை வாங்கும் விலையை பெருவாரியாகக் குறைக்க BaaS (Batter as a Service) திட்டம் அமல்படுத்தப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ் பேட்டரிக்கு பயன்பாட்டு அடிப்படையில் வாடிக்கையாளர்கள் பணம் செலுத்தினால் போதும்.

ஏற்கனவே குறைவான விலையைக் கொண்டிருக்கும் VX2 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை BaaS திட்டத்தின் கீழ் இன்னும் குறைவாக ரூ.44,990 என்ற எக்ஸ்-ஷோரூம் விலையிலேயே வாடிக்கையாளர்கள் தற்போது வாங்க முடியும். அந்த வகையில் புதிதாக ஹீரோ வெளியிடத் திட்டமிட்டிருக்கும் ஸ்கூட்டர் மாடலையும் BaaS திட்டத்தின் கீழ் மேலும் குறைவான விலையிலேயே வெளியிட வாய்ப்புகள் இருக்கிறது.

எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களைத் தவிர்த்து லிங்க்ஸ் (Lynx) என்ற ட்ரையல் பைக் விடா உபெக்ஸ் (Vida Ubex) என்ற அர்பன் எலெக்ட்ரிக் பைக் ஆகிய மாடல்களையும் 2027ல் ஹீரோ வெளியிடத் திட்டமிட்டு வருகிறது. கடந்தாண்டு ஆட்டோ ஷோக்களில் இந்த பைக்குகளை ஹீரோ காட்சிப்படுத்தியது குறிப்பிடத்தக்கது. பெரியவர்களுக்கான எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் மட்டுமின்றி குழந்தைகளுக்கான டர்ட்.e K3 என்ற பைக் மாடலும் விடா பிராண்டின் கீழ் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: எலெக்ட்ரிக் இருசக்கர வாகன சந்தையில் அடுத்தகட்ட பாய்ச்சலுக்குத் தயாராகி வருகிறது ஹீரோ. எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள், எலெக்ட்ரிக் பைக்குகள் என்றும் வழக்கமாக யோசிக்காமல், ட்ரையல் பைக், குழந்தைகளுக்கான பைக் என 360 டிகிரி கோணத்திலும் யோசித்து வருகிறது. இது விடாவின் பிராண்டு வேல்யூவை நன்றாகவே உயர்த்தும். அடுத்த சில ஆண்டுகளில் டிவிஎஸ் மற்றும் பஜாஜுக்கு விடா கடும் போட்டி அளிக்கும் என்பது மட்டும் உறுதி.

Article Published On: Tuesday, May 5, 2026, 15:51 [IST]
English summary
Hero to launch new sub 1 lakh rupees electric scooter under vida brand
மேலும்... #hero motocorp #electric scooter #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+