அட்வென்சர் அம்சங்களுடன் கூடிய புதிய 125 ஸ்கூட்டரை இந்தியாவில் வெளியிடும் ஹீரோ
இந்தியாவில் புதிய ஸ்கூட்டர் ஒன்றின் டிசைனுக்கு காப்புரிமை பெற்றிருக்கிறது ஹீரோ மோட்டோகார்ப். இதனைப் புதிய ஸ்கூட்டர் என்று சொல்ல முடியாது. ஏற்கனவே விற்பனையில் இருக்கும் ஸ்கூட்டரில் சில கூடுதல் அம்சங்களைச் சேர்த்து இதனை வடிவமைத்திருக்கிறது. அந்த எந்த ஸ்கூட்டர்? என்ன மாதிரியான கூடுதல் அம்சங்களைச் சேர்த்திருக்கிறது ஆகிய விவரங்களை எல்லாம் இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.
நாம் இங்கே பேசிக் கொண்டிருப்பது ஹீரோவின் ஸூம் 125 (Xoon 125) ஸ்கூட்டரைப் பற்றித் தான். டிவிஎஸ் என்டார்க்கிற்குப் போட்டியாக ஸ்போர்ட்டியான வடிவமைப்பைக் கொண்டிருக்கும் ஸ்கூட்டர் தான் ஸூம் 125. இந்த ஸ்கூட்டரில் அட்வென்சர் டிசைனுக்கு ஏற்ற வகையில் சில அம்சங்களை சேர்த்து புதிய டிசைனாக பேட்டன்ட் செய்துள்ளது ஹீரோ.

கடந்தாண்டு நவம்பர் மாதம் ஐரோப்பாவில் உள்ள இத்தாலியின் மிலன் நகரில் நடைபெற்ற EICMA நிகழ்வில் ஸூம் 125 அட்வென்சர் ஸ்டைல் ஸ்கூட்டர் கான்செப்ட்களை ஹீரோ காட்சிப்படுத்தியிருந்தது. சற்று உயர்த்தி வைக்கப்பட்ட முன்பக்க ஃபெண்டர், ஏப்ரன் மற்றும் சேடு பேனல்களைச் சுற்றி கிராஷ் ப்ரொடெக்ஷன் பார்கள், அட்வென்சர் ஸ்கூட்டருக்கு ஏற்ற வகையில் பிளாக் பேட்டர்ன் கொண்ட நாபியான டயர்கள் ஆகிய அம்சங்கள் அந்த அட்வென்சர் ஸ்கூட்டர்களில் கூடுதலாக இருந்தன.
அதேபோன்ற அம்சங்களை தற்போது ஹீரோ பேட்டன்ட் செய்திருக்கும் ஸ்கூட்டரின் டிசைனிலும் நாம் பார்க்க முடிகிறது. சைடு பேனல்களுக்கான கிராஷ் ப்ரொடெக்ஷன் மட்டும் தற்போது செய்யப்பட்டிருக்கும் பேட்டன்ட் டிசைனில் இல்லை. மற்ற அனைத்து அம்சங்களும் அப்படியே இடம்பெற்றிருக்கிறது. இதனால் அட்வென்சர் அம்சங்களுடன் கூடிய புதிய ஸூம் 125 ஸ்கூட்டரை ஹீரோ வெளியிடவிருக்கிறத என்ற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.

இந்தக் கூடுதல் அம்சங்களானது, ஸூம் 125 ஸ்கூட்டரை இன்னும் சற்று ரக்கடான ஒன்றாகக் காட்டும். இந்த டிசைனை ஹீரோ பேட்டன்ட் செய்திருப்பதாலேயே இதனை அந்நிறுவனம் வெளியிடும் என்று நாம் எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை. ஆனால் பேட்டன்ட் செய்திருப்பதால் வெளியிடுவதற்கான வாய்ப்புகள் சற்று அதிகமாக இருக்கிறது என நாம் எடுத்துக் கொள்ளலாம்.
மேலும், EICMA நிகழ்வில் காட்டப்பட்ட ஸ்கூட்டரில் இருப்பது போல அக்ரஸிவ்வாக ஸ்கூட்டர் முழுவதும் அனைத்து கூடுதல் அம்சங்களையும் புதிய டிசைனில் ஹீரோ சேர்க்கவில்லை. பிராக்டிகலான, பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில், அதே நேரம் பார்ப்பதற்கும் மிகவும் அக்ரஸிவ்வாக இல்லாமல் இருக்கும் அம்சங்களை மட்டுமே சேர்த்திருக்கிறது. இதன் மூலம் இதனை விற்பனைக்குக் கொண்டு வர ஹீரோ விரும்புவதாகவே தெரிகிறது.
இந்தக் கூடுதல் அம்சங்களைக் கொடுக்கப்பட்டிருப்பதைத் தவிர்த்து மெக்கானிக்கலாக வேறு எந்த மாற்றமும் இருக்காது என்றே தெரிகிறது. ஸூம் 125 ஸ்கூட்டரில் 124.6 சிசி, சிங்கிள் சிலிண்டர், ஏர்-கூல்டு இன்ஜினை ஹீரோ பயன்படுத்தி வருகிறது. இந்த இன்ஜினானது 9.9 hp பவர் மற்றும் 10.4 Nm டார்க்கை உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: தற்போது விற்பனையில் இருக்கும் 125 சிசி ஸ்கூட்டர்களுக்குப் போட்டியாக, ப்ளூடூத் கனெக்டிவிட்டி மற்றும் நேவிகஷன் அம்சங்களுடன் கூடிய முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் உள்ளிட்ட அனைத்து விதமான வசதிகளையும் கொண்ட ஸ்கூட்டராகவே ஸூம் 125 இருக்கிறது. எனவே புதிய. அட்வென்சர் வடிவமைப்பு கொண்ட ஸூம் 125 ஸ்கூட்டர் ஹீரோ கூடுதல் வசதிகளை சேர்க்க வேண்டிய சேவை பெருமளவில் இல்லை.
எனினும் புதிய ஸ்கூட்டரை மதிப்புக்கேற்ற ஒன்றாக மாற்ற, வாடிக்கையாளர்கள் விரும்பக்கூடிய சில தனித்துவமான வசதிகளை ஹீரோ கொடுக்கலாம். இது போட்டியாளர்களுக்கு எதிராக ஸூம் 125-ஐ இன்னும் வலிமையான ஒரு போட்டியாளராக முன்னிறுத்தும். ஹீரோ என்ன செய்கிறது என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications