இந்த ஹீரோ ஸ்கூட்டர் இவ்வளவு மைலேஜ் கொடுக்குதா.? நம்பவே முடியலையே!

இந்தியாவில் ஹீரோ விற்பனை செய்து வரும் கவனிக்கத்தக்க ஸ்கூட்டர் மாடல்களுள் ஒன்று ஸூம் 160 (Xoom 160). ஸூம் என்ற பெயரிலேயே ஹீரோ விற்பனை செய்து வரும் மூன்று ஸ்கூட்டர்களில் ஒன்று இது. ஸூம் 125 மற்றும் ஸூம் 110 ஆகிய ஸ்போர்ட்டியான ஸ்கூட்டர்களையும் ஹீரோ இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது.

பெர்ஃபாமன்ஸ் ரீதியில் மேம்பட்ட யமஹா ஏராக்ஸ் மேக்ஸி ஸ்கூட்டருக்குப் போட்டியாக இந்த ஸூம் 160 ஸ்கூட்டர் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த ஹீரோ 160 சிசி மேக்ஸி ஸ்கூட்டர் போதுமான மைலேஜ் கொடுக்கிறதா? எவ்வளவு மைலேஜ் கொடுக்கிறது என்பதை இங்கே நாம் பார்க்கலாம்.

Hero Xoom 160

மைலேஜ் குறித்த விவரங்களைப் பார்ப்பதற்கு முன்னாள், இந்த ஸ்கூட்டரின் இன்ஜின் குறித்த விவரங்களைப் பார்க்கலாம். இந்த ஸூம் 160 மேக்ஸி ஸ்கூட்டரில், 156 சிசி, சிங்கிள் சிலிண்டர், லிக்விட்-கூல்டு இன்ஜினைக் கொடுத்துள்ளது ஹீரோ. இந்த இன்ஜினானது 14.6 hp பவர் மற்றும் 14 Nm டார்க்கை உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டுள்ளது.

இந்தியாவில் தற்போது விற்பனை செய்யப்படும் வரும் பவர்ஃபுல்லான இன்ஜின் கொண்ட மாஸ் மார்க்கெட் ஸ்கூட்டர்களில் ஒன்றாக இதனை நாம் கூறலாம். இந்தியாவில் யமஹாவின் ஏராக்ஸுக்கு அடுத்தபடியாக மெயின்ஸ்ட்ரீமாக லிக்விட்-கூல்டு இன்ஜினைக் கொண்டிருக்கும் ஒரே ஸ்கூட்டர் மாடல் இந்த ஹீரோ ஹூம் 160 தான் என்பது குறிப்பிடத்தக்கது.

Hero Xoom 160

சரி இப்போது மைலேஜுக்கு வருவோம். 110 சிசி ஸ்கூட்டர்களே குறைவான மைலேஜ் தான் கொடுத்து வரும் போது, மேக்ஸி ஸ்கூட்டரான இந்த ஸூம் 160-யில் அதிக மைலேஜை நாம் எதிர்பார்க்க முடியாது தான். அந்த வகையில் மற்ற கம்யூட்டர் ஸ்கூட்டர் மாடல்களை விட குறைவாக லிட்டருக்கு 40 கிமீ வரையிலான மைலேஜை சராசரியாக இந்த ஸூம் 160 ஸ்கூட்டர் கொடுக்கிறது.

நகரப் பயன்பாடு அல்லது நெடுஞ்சாலைப் பயன்பாடு எனப் எனப் பெரிய வேறுபாடுகள் இல்லை. இரண்டிற்கும் ஒரு சில கிலோமீட்டர்கள் தான் கூடுதலாக அல்லது குறைவாக இருக்கிறது. ஒட்டுமொத்தமாக 40 கிமீ வரையிலான மைலேஜை இந்த ஸ்கூட்டரில் வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

யமஹா ஏராக்ஸ் ஸ்கூட்டரானது 1.43 லட்சம் ரூபாய் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், இந்த ஸூம் 160 ஸ்கூட்டரானது 1.40 லட்சம் ரூபாய் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரே வேரியன்ட் மட்டுமே. நான்கு தனித்துவமான நிறங்களில் இருந்து ஒன்றைத் தேர்ந்தெடுக்கலாம்.

போட்டியாளரான ஏராக்ஸை விட கொஞ்சம் குறைவாக இந்த ஸூம் 160 விற்பனையாகி வருகிறது. ஏப்ரல் மாதம் யமஹா நிறுவனமானது 1,708 ஏராக்ஸ் ஸ்கூட்டர்களை விற்பனை செய்த நிலையில், ஹீரோ நிறுவனமானது 1,242 ஸூம் 160 ஸ்கூட்டர்களை விற்பனை செய்துள்ளது. வரும் ஆண்டுகளில் மேக்ஸி ஸ்கூட்டர்கள் வாடிக்கையாளர்களிடம் இன்னும் பிரபலம் ஆகும் போது இவற்றின் விற்பனை இன்னும் உயரலாம்.

தற்போது இரண்டு ஸ்கூட்டர்கள் மட்டுமே இருந்தாலும் இன்னும் இரண்டு ஸ்கூட்டர்கள் விரைவில் இந்தப் பிரிவில் இணையவிருக்கிறது. ஒன்று ஹோண்டாவினுடையது, மற்றொன்று டவிஎஸ்ஸுடையது. வெளிநாடுகளில் விற்பனை செய்து வரும் 160 சிசி, லிக்விட்-கூல்டு இன்ஜின் மேக்ஸி ஸ்கூட்டரை இந்தியாவில் வெளியிட ஹோண்டா திட்டமிட்டு வருகிறது. டிவிஎஸ் நிறுவனம் முற்றிலும் புதிதாக ஒரு லிக்விட்-கூல்டு இன்ஜின் 160 சிசி ஸ்கூட்டரை உருவாக்கி வருகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: அடுத்த சில ஆண்டுகளில் பிரதானமான பிரிவுகளில் ஒன்றாக இந்த 160 சிசி மேக்ஸி ஸ்கூட்டர் பிரிவு உருவெடுத்துவிடும் எனத் தெரிகிறது. நல்ல பெர்ஃபாமன்ஸ் கொடுப்பதால் சற்று குறைவான மைலேஜ் இதன் வாடிக்கையாளர்களுக்குப் பெரிய பிரச்சினையாக இருக்காது என்றே தெரிகிறது. தனக்கென தனி வாடிக்கையாளர் வட்டத்தை இந்த ஸ்கூட்டர்கள் உருவாக்கி வருகின்றன.

Article Published On: Sunday, June 14, 2026, 9:48 [IST]
English summary
Hero xoom 160 maxi scooter real world mileage details out
மேலும்... #hero motocorp #scooter #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out