ஆதிசேஷன்னா பொட்டு வெச்சுட்டு பொங்கல் சாப்பிட்றவன்னு நெனச்சயா! ராயல் என்பீல்டை காலி பண்ண போகும் ஹீரோ!

ஹீரோ மோட்டோகார்ப் (Hero MotoCorp) நிறுவனம் இந்திய சந்தையில் புதிய பைக் ஒன்றை விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. அது ஹீரோ எக்ஸ்பல்ஸ் 421 (Hero Xpulse 421) ஆகும். அட்வென்ஜர் (Adventure) ரகத்தை சேர்ந்த இந்த பைக் குறித்து நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான தகவல்களின் தொகுப்புதான் இந்த செய்தி.

ஹீரோ எக்ஸ்பல்ஸ் 421 பைக்கில் ஹெட்லேம்ப் சற்று உயரமாக வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. அத்துடன் அட்வென்ஜர் ரகத்தை சேர்ந்த பைக் என்பதால், உயரமான விண்டுஸ்க்ரீன், கல் போன்றவற்றில் இருந்து கைகளுக்கு பாதுகாப்பு அளிக்கும் 'நக்கில் கார்ட்ஸ்' (Knuckle Guards) மற்றும் பின் பகுதியில் லக்கேஜ்களை வைத்து கொள்வதற்கான பெட்டி ஆகிய அம்சங்களை எல்லாம் நாம் உறுதியாக எதிர்பார்க்கலாம்.

Hero Xpulse 210

அத்துடன் ஹீரோ எக்ஸ்பல்ஸ் 421 பைக்கில் பெரிய எரிபொருள் டேங்க் வழங்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. ஒட்டுமொத்தத்தில் இதன் டிசைன், அமெரிக்கா போன்ற நாடுகளில் விற்பனையில் உள்ள யமஹா டெனேரே 700 (Yamaha Tenere 700) பைக்கின் டிசைனை நமக்கு நினைவுபடுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

வசதிகளை பொறுத்தவரையில், முழுமையாக எல்இடி லைட்கள், பெரிய கலர் டிஎஃப்டி டிஸ்ப்ளே, பல்வேறு ரைடிங் மோட்கள், ப்ளூடூத் கனெக்ட்டிவிட்டி, ஸ்விட்ச் செய்யக்கூடிய ஏபிஎஸ், டிராக்ஸன் கண்ட்ரோல் போன்ற அம்சங்களை எல்லாம் நாம் எதிர்பார்க்கலாம். அத்துடன் க்ரூஸ் கண்ட்ரோல் வசதியும் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Hero Xpulse 210 Side View

இது தொலை தூர பயணங்களின்போது பெரும் உதவியாக இருக்கும். அட்வென்ஜர் பைக் என்றாலே, சஸ்பென்ஸன் மிகவும் முக்கியமான ஒரு விஷயமாக இருக்கும். ஹீரோ எக்ஸ்பல்ஸ் 421 பைக்கை பொறுத்தவரையில் முன் பகுதியில் அப்-சைடு டவுன் ஃபோர்க்குகள் மற்றும் பின் பகுதியில் லிங்க்கேஜ் டைப் மோனோஷாக் உடன் லாங்-டிராவல் சஸ்பென்ஸன் வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

அதே நேரத்தில் 21/18 இன்ச் ட்யூப் டைப் ஸ்போக் வீல்கள் மற்றும் ட்யூயல்-பர்பஸ் டயர்களும் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கூடவே ட்யூப்லெஸ் டயர்கள் ஆப்ஷனையும் ஹீரோ மோட்டோகார்ப் வழங்கினால் நன்றாக இருக்கும். அது நடக்கும் என்றே நாங்கள் நம்புகிறோம். பிரேக்கிங்கை பொறுத்தவரை 2 சக்கரங்களிலும் சிங்கிள் டிஸ்க் பிரேக் வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

செயல்திறனை பொறுத்தவரையில் ஹீரோ எக்ஸ்பல்ஸ் 421 பைக்கில், புத்தம் புதிய 421 சிசி சிங்கிள் சிலிண்டர் லிக்யூட் கூல்டு இன்ஜின் ஆப்ஷன் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட புத்தம் புதிய இன்ஜின் ஆகும். இந்த இன்ஜினின் உருவாக்கத்தின்போது ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் பல்வேறு தடைகளை சந்தித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன் காரணமாக ஹீரோ எக்ஸ்பல்ஸ் 421 பைக்கின் அறிமுகம் தள்ளி போய் விட்டதாக கூறப்படுகிறது. இல்லாவிட்டால் இந்த பைக் சற்று விரைவாகவே விற்பனைக்கு வந்திருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஆனால் இந்த இன்ஜினின் பவர் அவுட்புட் பற்றி தற்போது எந்தவிதமான தகவலும் வெளியாகவில்லை.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: ஹீரோ எக்ஸ்பல்ஸ் 421 பைக் வரும் 2027ம் ஆண்டின் தொடக்கத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. ராயல் என்பீல்டு ஹிமாலயன் 450 (Royal Enfield Himalayan 450), கேடிஎம் அட்வென்ஜர் எஸ் (KTM 390 Adventure S) மற்றும் பிஎம்டபிள்யூ எஃப் 450 ஜிஎஸ் (BMW F 450 GS) ஆகிய பைக்குகளுக்கு எல்லாம், ஹீரோ எக்ஸ்பல்ஸ் 421 பைக்கின் வருகை, விற்பனையில் நெருக்கடிகளை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

Article Published On: Wednesday, June 17, 2026, 23:37 [IST]
English summary
Hero xpulse 421 launch in early 2027 engine features design
மேலும்... #hero motocorp #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out