ஹோண்டா, சுஸுகி ஸ்கூட்டர்னு எல்லாரும் சொல்வாங்க... ஆனால் இந்த விஷயத்தில் யமஹா பெஸ்ட்!

ஜப்பானிய நிறுவனங்களான சுஸுகி, ஹோண்டா மற்றும் யமஹா உள்ளிட்டவை இந்தியாவில் அவற்றின் முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை புதியதாக அறிமுகப்படுத்தி உள்ளன. அவையாவன, சுஸுகி இ-ஆக்ஸஸ், ஹோண்டா ஆக்டிவா-இ மற்றும் யமஹா இசி-06 ஆகும். இவை மூன்றிற்கும் இடையேயான ஒற்றுமை மற்றும் வேற்றுமைகள் என்னென்ன என்பதை பற்றி தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.

டிசைன் & தோற்றம்: சுஸுகியின் லேட்டஸ்ட் டிசைன் மொழியில் இ-ஆக்ஸஸ் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஹோண்டா ஆக்டிவா-இ ஆனது மிகவும் அட்வான்ஸான எதிர்கால டிசைனை கொண்டுள்ளது. யமஹா இசி-06 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை பொறுத்தவரையில் இது ரிவர் என்கிற நிறுவனத்தின் இண்டீ எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது ஆகும்.

honda activa-e vs suzuki e-access vs yamaha ec-06

பேட்டரி & ரேஞ்ச்: இ-ஆக்ஸஸ் மற்றும் ஆக்டிவா-இ ஸ்கூட்டர்களில் 3kWh பேட்டரி வழங்கப்படுகிறது. அதுவே, யமஹா மாடலில் 4kWh பேட்டரி பொருத்தப்படுகிறது. இதற்கேற்ப பேட்டரியை முழுவதுமாக சார்ஜ் நிரப்பினால் அதிகப்பட்சமாக ஸ்கூட்டரை இயக்கக் கூடிய தொலைவும் இந்த மூன்று எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களிலும் வேறுப்படுகிறது. இ-ஆக்ஸஸ் மற்றும் ஆக்டிவா-இ ஸ்கூட்டர்களில் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக 95கிமீ மற்றும் 102கிமீ வரையிலான ரேஞ்சை பெறலாம் என அவற்றை உருவாக்கும் நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.

அதுவே, இசி-06 ஆனது அதிகப்பட்சமாக சுமார் 169கிமீ தொலைவிற்கு இயங்கக்கூடியது என யமஹா நிறுவனம் தெரிவிக்கிறது. பேட்டரி பொருத்தப்படும் எலெக்ட்ரிக் மோட்டாரில் இருந்து அதிகப்பட்சமாக வெளிவரும் இயக்க ஆற்றல் மற்றும் டார்க் திறன் அளவுகள் இந்த மூன்று எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களிலும் வேறுப்படுவதை கீழேயுள்ள அட்டவணையில் காணலாம்.

Specification Suzuki e-Access Honda Activa-e Yamaha EC-06
Battery 3 kWh 3 kWh 4 kWh
Range 95 km 102 km 169 km
Top Speed 90 km/h 80 km/h 79 km/h
Power 4.1 kW 6 kW 6.7 kW
Torque 15 Nm 22 Nm 26 Nm
Charging Time (0-100%) - - 10 Hours
honda activa-e vs suzuki e-access vs yamaha ec-06

பரிமாண அளவுகள்: ரிவர் இண்டீ ஆனது அளவில் பெரியதான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் என்பதால், அதன் அடிப்படையில் உருவாக்கப்பட்ட யமஹா இசி-06 ஸ்கூட்டரும் தோற்றத்தில் பெரியதாக உள்ளது. நீளம், அகலம், உயரம் மற்றும் வீல்பேஸ் உள்ளிட்ட அனைத்து அளவுகளிலும் மற்ற இரு சுஸுகி, ஹோண்டா ஸ்கூட்டர்களை காட்டிலும் இசி-06 பெரியதாக உள்ளது. அதற்கேற்ப எடையும் அதில் அதிகம்.

Dimension / Specification Suzuki e-Access Honda Activa e Yamaha EC-06
Length 1860 mm 1854 mm 1995 mm
Width 715 mm 700 mm 765 mm
Height 1135 mm 1125 mm 1153 mm
Wheelbase 1305 mm 1310 mm 1354 mm
Ground Clearance 160 mm 171 mm 145 mm
Seat Height 765 mm - -
Weight 122 kg 119 kg 132 kg
Boot Space - 24.5 L -

மெக்கானிக்கல் பாகங்கள்: அளவில் மட்டுமின்றி, யமஹா இசி-06 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் பெரிய அளவிலான அலாய் சக்கரங்கள், டிஸ்க் பிரேக்குகள், சிபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் மற்றும் சேசிஸ் உள்ளிட்டவை மற்ற இரு ஸ்கூட்டர்களை காட்டிலும் சிறப்பானதாக வழங்கப்படுகின்றன. அதேநேரம், இ-ஆக்ஸஸ் மற்றும் ஆக்டிவா-இ ஆனது போதுமான வசதிகளை வழங்குகிறது.

Chassis & Hardware Suzuki e-Access Honda Activa e Yamaha EC-06
Chassis Underbone Underbone Steel tubular
Front Suspension Telescopic coil Telescopic Telescopic
Rear Suspension Swingarm type 3 Step Adjust spring Coil spring
Brakes Disc / Drum 160mm Disc / 130mm Drum 200mm Disc
Tyres 90/90-12, 100/80-12 90/90-12, 110/80-12 110/80-14, 120/70-14
Wheels Alloys Diamond cut Alloy Alloy
honda activa-e vs suzuki e-access vs yamaha ec-06

தொழிற்நுட்ப வசதிகள்: மெக்கானிக்கல் அம்சங்கள் யமஹா இசி-06 ஸ்கூட்டரில் சிறப்பானதாக வழங்கப்பட்டாலும், தொழிற்நுட்ப அம்சங்களில் சுஸுகி மற்றும் ஹோண்டா மாடல்களின் கை ஓங்கியுள்ளது. இவற்றில் கனெக்டட் வசதிகள் உடன் ஒட்டுமொத்த ரைடிங் அனுபவம் மேம்பட்டதாக கிடைக்கிறது. யமஹா இசி-06 ஸ்கூட்டரில் குறைவான மாடர்ன் வசதிகளே வழங்கப்படுகின்றன.

Features & Technology Suzuki e-Access Honda Activa e Yamaha EC-06
Lighting All LED setup All LED setup LED headlamp
Instrument Cluster TFT colour display 7 inch TFT display Colour LCD console
Riding & Power Modes Suzuki Drive Mode Selector Riding Modes (Eco, Standard, Sport), Reverse Mode Riding Modes (eco, standard, power)
Connectivity & App Support Smartphone connect Honda Roadsync, Navigation, Live Tracking, Call and Music Control Y Connect Support
Safety & Braking Tip over sensor CBS Braking CBS braking
Key & Ignition Keyless system, Motor start/stop switch Smart key -
Charging & Power Source Front USB Charging USB Type C socket, Swappable Battery -
Additional Utilities Suzuki e tech, Hazard switch - -

விலை: விலையை பொறுத்தவரையில் நம்மை வசீகரிப்பது ஆக்டிவா-இ ஸ்கூட்டராகும். வழக்கமான பெட்ரோல் ஆக்டிவா ஸ்கூட்டரை போலவே அதன் எலெக்ட்ரிக் வெர்சனையும் குறைவான விலையில் ஹோண்டா வழங்கி வருகிறது. அதேநேரம், இ-ஆக்ஸஸ் மற்றும் இசி-06 ஸ்கூட்டர்களின் விலை அதிகமாக உள்ளது. குறிப்பாக, இ-ஆக்ஸஸ் ஆனது சுமார் ரூ.1.91 லட்சம் அளவிற்கு விலையை கொண்டதாக உள்ளது.

Model Price (Ex-Showroom)
Suzuki e-Access ₹ 1,91,432
Honda Activa e ₹ 1,19,912
Yamaha EC-06 ₹ 1,68,300

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த மூன்றில் எங்களது சாய்ஸ் எதுவென்று கேட்டால், யமஹா இசி-06 ஆகும். இதன் மிக பெரிய பலம் என்னவென்று கேட்டால், சிறந்த நடைமுறை தன்மை, அதிகமான ரேஞ்ச், தனித்துவமான டிசைன் மற்றும் சிறந்த அன்றாட பயன்பாடு ஆகும். விலையும் சுஸுகி இ-ஆக்ஸஸ் அளவிற்கு அதிகமாக இல்லை. அதேநேரம், குறைந்த விலையில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்க விரும்புபவர்கள் ஹோண்டா ஆக்டிவா-இ வாங்கலாம்.

Article Published On: Thursday, May 21, 2026, 11:14 [IST]
English summary
Honda activa e vs suzuki e access vs yamaha ec 06 electric scooters comparison
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X