டிவிஎஸ், சுஸுகியை கதற விடும் ஜப்பான் தயாரிப்பு! விலை இவ்ளோதானா! அடிச்சிக்க ஆளே இல்ல!

இந்திய சந்தையில் மிகவும் அதிகமாக விற்பனை செய்யப்படும் ஸ்கூட்டர் எது என கேட்டால், பச்சை குழந்தை கூட ஹோண்டா ஆக்டிவா (Honda Activa) என மிக சரியாக கூறி விடும். இதற்கு கடந்த 2025ம் ஆண்டு டிசம்பர் மாதமும் விதிவிலக்கு அல்ல.

கடந்த 2025ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் அதிகம் விற்பனை செய்யப்பட்ட டாப் 10 ஸ்கூட்டர்களின் பட்டியலில், (Top 10 Scooters Sold In December 2025) ஹோண்டா ஆக்டிவா முதல் இடத்தை பிடித்துள்ளது. அதே நேரத்தில் கடந்த 2025ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட டாப் 10 டூவீலர்களின் பட்டியலில் (Top 10 Two-Wheelers Sold In December 2025), ஹோண்டா ஆக்டிவா 2வது இடத்தை பிடித்துள்ளது.

Honda Activa 110

இந்த பட்டியலில் ஹோண்டா நிறுவனத்தின் முன்னாள் கூட்டாளியான ஹீரோ நிறுவனத்தின் ஸ்பிளெண்டர் (Hero Splendor) பைக் முதல் இடத்தை பிடித்துள்ளது. சரி, ஹோண்டா ஆக்டிவா விஷயத்திற்கு வருவோம். கடந்த 2025ம் ஆண்டு டிசம்பர் மாதம் 1,81,604 ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

ஆனால் கடந்த 2024ம் ஆண்டு டிசம்பர் மாதம் வெறும் 1,20,981 ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டிருந்தன. அதாவது கடந்த 2024ம் ஆண்டு டிசம்பர் மாதத்துடன் ஒப்பிடும்போது, கடந்த 2025ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் 60,623 ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன.

Suzuki Access 125

இதன் மூலம் ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர் விற்பனையில் 50.11 சதவீத வளர்ச்சியை பதிவு செய்து அசத்தியுள்ளது. ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர் தற்போதைய நிலையில் மொத்தம் 2 வெர்ஷன்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அவை ஹோண்டா ஆக்டிவா 110 (Honda Activa 110) மற்றும் ஹோண்டா ஆக்டிவா 125 (Honda Activa 125) ஆகியவை ஆகும்.

இதில், ஹோண்டா ஆக்டிவா 110 ஸ்கூட்டரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை 75,433 ரூபாயாக மட்டுமே உள்ளது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 89,806 ரூபாயாக இருக்கிறது. மறுபக்கம் ஹோண்டா ஆக்டிவா 125 ஸ்கூட்டரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை 89,256 ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 94,096 ரூபாயாக இருக்கிறது.

இவை அனைத்துமே ஹோண்டா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆகும். ஹோண்டா ஆக்டிவா 110 மற்றும் 125 என 2 ஸ்கூட்டர்களிலும் ஹெச்-ஸ்மார்ட் தொழில்நுட்பத்துடன் கூடிய ஸ்மார்ட் கீ, டிஎஃப்டி ஸ்க்ரீன் டிஸ்ப்ளே மற்றும் ஹோண்டா ரோடு சிங்க் (செல்போன் அழைப்புகள், நேவிகேஷன் மற்றும் மியூசிக் ஆகியவற்றுக்கான ஸ்மார்ட்போன் கனெக்ட்டிவிட்டி) ஆகிய வசதிகள் (Features) வழங்கப்பட்டுள்ளன.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய சந்தையில் டிவிஎஸ் ஜூபிடர் (TVS Jupiter) மற்றும் சுஸுகி ஆக்ஸஸ் (Suzuki Access) போன்ற ஸ்கூட்டர்களுக்கு எல்லாம் மிகச்சிறந்த மாற்று ஆப்ஷனாக ஹோண்டா ஆக்டிவா திகழ்கிறது. ஜப்பானை சேர்ந்த ஹோண்டா நிறுவனத்தின் ஆக்டிவா ஸ்கூட்டர், வாடிக்கையாளர்கள் வழங்கும் பணத்திற்கு மதிப்பு வாய்ந்த தயாரிப்பு என்பது எங்கள் கருத்து.

More from DriveSpark

Article Published On: Sunday, January 25, 2026, 23:18 [IST]
English summary
Honda activa sales report december 2025 50 11 per cent growth
மேலும்... #suzuki motorcycle #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+