லட்சக்கணக்கான மக்கள் இந்த ஸ்கூட்டரை தான் ஒவ்வொரு மாசமும் வாங்குறாங்க.. ஏன் தெரியுமா?

இந்தியாவில் ஒவ்வொரு மாதமும் அதிகம் விற்பனை செய்யப்படும் ஸ்கூட்டர் எது தெரியுமா? கண்டிப்பாக தெரிந்திருக்கும், அது வேறெதுவும் இல்லை ஹோண்டாவின் ஆக்டிவா தான். பைக்குகளில் எப்படி ஹீரோவின் ஸ்ப்ளெண்டரை யாராலும் அசைக்க முடியவில்லையோ, அது போல ஸ்கூட்டர் பிரிவில் ஆக்டிவா. ஒவ்வொரு மாதமும் இந்தியாவில் விற்பனை செய்யப்படும் 3 ஸ்கூட்டர்கள் 1 ஆக்டிவா தான் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். இது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களையும் சேர்த்து.

ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு மாதமும் முன்பை விட அதிக ஆக்டிவா ஸ்கூட்டர்கள் இந்தியாவில் விற்பனையாகின்றன. கடந்த ஏப்ரல் மாதம் 2.20 லட்சம் ஆக்டிவா ஸ்கூட்டர்களை இந்தியாவில் விற்பனை செய்துள்ளது ஹோண்டா. இது கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடும் 13.34 சதவீதம், அதாவது 25,987 யூனிட்டுகள் அதிகமாகும். இந்த விற்பனை அளவுடன் கடந்த ஏப்ரல் மாதம் இந்திய ஸ்கூட்டர் சந்தையின் 37.14 சதவீதம் சந்தைப் பங்குகளைக் கைப்பற்றியிருக்கிறது ஆக்டிவா.

Honda Activa 110

37 சதவீதம் என்னும் போது, மேலே கூறியது போல இந்தியாவில் விற்பனை செய்யப்படும் 3 ஸ்கூட்டர்களில் ஒன்று ஆக்டிவாவாக இருக்கும். இரண்டாவது இடத்தில் இருக்கும் டிவிஎஸ் ஜூப்பிட்டர் ஸ்கூட்டரானது 1.17 லட்சம் யூனிட்டுகளே கடந்தாண்டு விற்பனையாகியிருக்கிறது. ஆக்டிவாவை விட சுமார் 1 லட்சம் யூனிட்டுகள் குறைவு. இந்த விற்பனை அளவுடன் 19.75 சதவீதம் சந்தைப் பங்குகளைக் கைப்பற்றியிருக்கிறது டிவிஎஸ் ஜூப்பிட்டர்.

இந்த விற்பனை அளவுடன் இந்தியாவின் ஸ்கூட்டர் 'கிங்'காக ஹோண்டா ஆக்டிவாவை அதிகாரப்பூர்வமாகக் கூட அறிவிக்கலாம். இந்தியாவில் தற்போது இரண்டு ஆக்டிவா ஸ்கூட்டர்களை விற்பனை செய்து வருகிறது ஹோண்டா. ஒன்று 110 சிசி இன்ஜின் கொண்ட ஆக்டிவா 110, மற்றொன்று 125 சிசி இன்ஜின் கொண்ட ஆக்டிவா 125. இரண்டு ஸ்கூட்டர்களுக்குமே வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.

Honda Activa 125

ஆக்டிவா 110 ஸ்கூட்டரை, ஸ்டாண்டர்டு, டீலக்ஸ் மற்றும் ஸ்மார்ட் என மூன்று வேரியன்ட்களாக விற்பனை செய்து வருகிறது ஹோண்டா. இதில் அடிப்படையான ஸ்டாண்டர்டு வேரியன்டானது 75,583 என்க எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அனைத்து வசதிகளையும் கொண்ட டாப் எண்டான ஸ்மார்ட் வேரியன்டானது 90,332 ரூபாய் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையைக் கொண்டுள்ளது.

அதே போல், ஆக்டிவா 125 ஸ்கூட்டரானது டீலக்ஸ் மற்றும் ஸ்மார்ட் என இரண்டு வேரியன்ட்களாக இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதில் டீலக்ஸ் வேரியன்டானது 90,178 ரூபாய் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையையும், அனைத்து வசதிகளையும் கொண்ட ஸ்மார்ட் வேரியன்டானது 94,621 என்ற எக்ஸ்-ஷோரூம் விலையையும் கொண்டுள்ளது.

இரண்டு ஆக்டிவா ஸ்கூட்டர்களின் டாப் எண்டு வேரியன்டான ஸ்மார்ட் வேரியன்டில் இருக்கும் ஒரு குறிப்பிட்ட வசதியைப் பற்றி சொல்ல வேண்டும் என்றால், கீலெஸ் எண்ட்ரி வசதியைத் தான் சொல்ல வேண்டும். இந்தியாவில் விற்பனையில் இருக்கும் மிகச் சில ஸ்கூட்டர்களில் மட்டுமே இந்த வசதி இருக்கிறது. ஸ்கூட்டரின் சாவியை நம்முடைய பாக்கெட்டிலேயே வைத்துக் கொண்டு ஸ்கூட்டரை இயக்கும் சொகுசை இந்த வசதி வழங்குகிறது.

ஆம், கார்களில் இருப்பதைப் போலத் தான், ஸ்கூட்டரின் சாவி நம்முடைய பாக்கெட்டில் அல்லது அனைத்து நேரமும் ஸ்கூட்டரில் இருந்து 2 மீட்டர்கள் தூரத்திற்குள் இருந்தால் போதும். அதனை ஸ்கூட்டரில் இருக்கும் கீ ஹோலில் செலுத்திய பின்பு தான் அதனை ஸ்டார்ட் செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை. இந்த வசதியினால் பெரிய அளவில் நன்மைகள் இருக்கிறது என்று சொல்ல முடியாது என்றாலும், ப்ரீமியமான பயன்பாட்டு அனுபவத்தை இந்த வசதி அளிக்கிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மேலே கூறியது போல ஸ்கூட்டர் கிங் அறிவிப்பதற்கான அனைத்து தகுதிகளும் ஹோண்டா ஆக்டிவாவிற்கு இருக்கிறது. மேலும் ஒவ்வொரு மாதமும் லட்சக்கணக்கான வாடிக்கையாளர்கள் அதனை வாங்கி வருகிறார்கள். இது ஆக்டிவா மீது வாடிக்கையாளர்கள் எவ்வளவு நம்பிக்கை வைத்திருக்கிறார்கள் என்பதையே காட்டுகிறது. ஆக்டிவாவை விட அதிக நம்பிக்கையை கொடுக்கக்கூடிய இன்னொரு ஸ்கூட்டர் இப்போதைக்கு இந்திய சந்தைக்கு வராது என்பதே உண்மை.

Article Published On: Monday, May 18, 2026, 20:24 [IST]
English summary
Honda activa the best selling scooter in india why is it so
மேலும்... #honda motorcycle #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+