ஹோண்டா வெளியிடும் புதிய பைக் இது தானா.. பார்க்கவே அட்டகாசமா இருக்கே!

பெரிய இன்ஜின் கொண்ட பைக்குகள், குறிப்பாக 1000 சிசி பைக்குகள் என்றால் அது ஸ்ட்ரீட்ஃபைட்டராகவோ அல்லது ஸ்போர்ட்டியான ஃபேர்டு பைக்காகவோ தான் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. ரெட்ரோ லுக்கில் மிகவும் கிளாஸியான ஒரு பைக்காகவும் இருக்கலாம். ஹோண்டாவின் புதிய CB1000F (Honda CB1000F) பைக் அப்படியான ஒன்று தான்.

பார்த்தவுடனே 90கள் அல்லது 2000களின் பைக் டிசைனைப் போலான தோற்றத்தைக் கொண்டிருக்கும் CB1000F பைக்கை ஐரோப்பாவில் ஏற்கனவே ஹோண்டா விற்பனை செய்து வரும் நிலையில், விரைவில் அமெரிக்காவிலும் வெளியிடவிருக்கிறது. இந்தியாவிலும் வெளியிட்டால் நன்றாகத் தான் இருக்கும். மிகவும் ஸ்போர்ட்டியான CBR1000RR-R SP மற்றும் CB750 ஹார்னெட் ஆகிய பெரிய இன்ஜின் கொண்ட பைக்குகளை எல்லாம் ஹோண்டா இந்தியாவிலும் விற்பனை செய்வது குறிப்பிடத்தக்கது.

Honda CB1000F

சரி இப்போது விஷயத்திற்கு வருவோம். பார்ப்பதற்கு பழைய காலத்து பைக் போலான தோற்றத்தைக் கொண்டிருக்கிறது இந்த CB1000F. ஆனால் இந்த பைக்கின் மிகவும் அட்ராக்டிவ்வான அம்சமும் இது தான். இதே போன்ற ஒரு லுக்கில் ஹோண்டா ஒரு 100 சிசி பைக்கை இப்போது வெளியிட்டால் கண்டிப்பாக அதனை போட்டி போட்டு வாங்க வாடிக்கையாளர்கள் குவிவார்கள் என்பது மட்டும் உறுதி.

டிசைன் மட்டும் தான் ரெட்ரோ லுக்கே தவிர, வசதிகள் மற்றும் இன்ஜின் கிடையாது. இப்போதைய பைக்குகளுக்கு டஃப் கொடுக்கும் வகையிலான பெர்ஃபாமன்ஸை தனக்குள்ளே வைத்திருக்கிறது இந்த CB1000F பைக். இந்த பைக்கில் 1000 சிசி, இன்லைன் 4 சிலிண்டர், லிக்விட்-கூல்டு இன்ஜினைக் கொடுத்துள்ளது ஹோண்டா. இந்த இன்ஜினானது 9,000 rpm-ல் 122 hp பவர் மற்றும் 8,000 rpm-ல் 103 Nm டார்க்கை உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டுள்ளது.

Honda CB1000F

அதிவேகத்தில் செல்வதற்காக இந்த பைக் உருவாக்கப்படவில்லை. ஒட்டுமொத்தமாக சிறப்பான ரைடிங் அனுபவத்தைக் கொடுப்பதற்காகவே வடிவமைக்கப்பட்டிருக்கிறது. மேலும் இதன் வடிவமைப்பும் அதிகபட்ச வேகத்தை எட்டும் வகையில் மிகவும் ஏரோடைனமிக்காக உருவாக்கப்படவில்லை. எனவே அதற்கேற்ற வகையில் ஹோண்டாவின் மற்ற 1000 சிசி பைக்குகளின் அளவிற்கு இல்லாமல் கொஞ்சம் மட்டும் பவர் மற்றும் டார்க் குறைவாகவே இருக்கிறது.

பிரேக்கிங்கிற்காக நிஸ்ஸின் காலிப்பர்களையும், சஸ்பென்ஷனுக்கு ஷோவா செட்டப்புகளையும் இந்த 1000 சிசி பைக்கில் பயன்படுத்தியிருக்கிறது ஹோண்டா. சிறப்பான ரைடிங் அனுபவம் மற்றும் பாதுகாப்பிற்காக 6 ஆக்சிஸ் IMU மூலம் நிர்வகிக்கப்படக்கூடிய எலெக்ட்ரானிக் வசதிகளை இந்த ரெட்ரோ பெர்ஃபாமன்ஸ் பைக்கில் ஹோண்டா கொடுத்திருக்கிறது. ஸ்டாண்டர்டு, ரெயின் மற்றும் ஸ்போர்ட் உடன் இரண்டு கஸ்டம் மோடுகளையும் இந்த பைக்கில் உருவாக்கி பயன்படுத்திக் கொள்ள முடியும்.

லீன் சென்சிட்டிவ் ABS, இன்ஜின் பிரேக்கிங், ட்ராக்ஷன் கண்ட்ரோல் இன்டர்வென்ஷன், ஸ்மார்ட்போன் கனெக்டிவிட்டியுடன் கூடிய 5 இன்ச் TFT டிஸ்பிளே, LED லைட்டிங், கீலெஸ் இக்னிஷனுக்கான வயர்லெஸ் கீ ஃபாப் உள்ளிட்ட அனைத்து விதமான மேம்பட்ட அம்சங்களையும் இந்த பைக்கில் ஹோண்டா கொடுத்திருக்கிறது. இந்திய மதிப்பிற்கு அமெரிக்காவில் சுமார் 10 லட்சம் ரூபாய் என்ற விலையில் இந்த 1000 சிசி பைக்கை ஹோண்டா விற்பனை செய்யவுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த பைக் இந்தியாவில் வெளியாவதற்கான வாய்ப்பு கிட்டத்தட்ட ஸீரோ தான். ஆனால் இந்தியாவில் வெளியாகும் பட்சத்தில் ரெட்ரோ பைக் பிரியர்களுக்கான விருந்தாக இது இருக்கும். ஆனால் எதிர்காலத்தில் இப்படியான ஒரு கிளாஸியான பைக்கை ஹோண்டா இந்தியாவிற்கு கொண்டு வரவே வராது என்று சொல்ல முடியாது. இப்போது அந்நிறுவனம் வெளியிட்டிருக்கும் 1000 சிசி பைக்குகளைப் போலவே, குறைவான அளவில் இறக்குமதி செய்து விற்பனை செய்யலாம். அதற்கு வாய்ப்பிருக்கிறது.

Article Published On: Thursday, June 18, 2026, 12:12 [IST]
English summary
Honda cb1000f 1000 cc bike to be launched in usa after its debut in europe
மேலும்... #honda motorcycle #bikes
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out