ராயல் என்ஃபீல்டுக்கு ஷாக்... ரூ.2.75 லட்சத்தில் ஹோண்டாவின் புதிய 500சிசி பைக் அறிமுகம்!

இந்தியாவின் பிரீமியம் மோட்டார்சைக்கிள் சந்தையில் தனக்கென தனி இடம் பிடித்துள்ள ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனம், தனது புதிய சிபி500 (Honda CB500) மோட்டார்சைக்கிளை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. ராயல் என்ஃபீல்டு சந்தையை குறிவைத்து பாரம்பரிய டிசைன் தாத்பரியங்களுடன் இந்த மோட்டார்சைக்கிள் களமிறக்கப்பட்டு இருக்கிறது.

இந்த புதிய மோட்டார்சைக்கிள் ரூ.2.75 லட்சம் ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்கு கிடைக்கும். இந்த புதிய மோட்டார்சைக்கிளுக்கான புக்கிஹ் நாடு முழுவதும் உள்ள ஹோண்டா பிங்விங் பிரிமீயம் ஷோரூம்கள் வாயிலாக தொடங்கப்பட்டு இருக்கிறது. இந்த மோட்டார்சைக்கிள் வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு தக்கவாறு தேர்வு செய்யும் வகையில் மூன்று வேரியண்ட்டுகளில் கிடைக்கும்.

Honda CB500

ஹோண்டா சிபி500 மோட்டார்சைக்கிளின் அலாய் சக்கரங்களுடன் (Alloy Wheels) கூடிய பேஸ் வேரியண்ட்டானது ரூ.2.75 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கும். இதற்கு அடுத்தபடியாக உள்ள மிட்-ஸ்பெக் மாடலானது ஸ்போக் சக்கரங்களுடன் (Spoke Wheels) வந்துள்ளது. இந்த வேரியண்ட்டிற்கு ரூ.3 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலை நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதில் குறுக்கு கம்பிகள் கொண்ட டியூப்லெஸ் ஸ்போக் வீல்கள் (Cross-spoke tubeless rims Wheels) சேர்க்கப்பட்டுள்ளன.

இந்த மாடலின் டாப்-எண்ட் வேரியண்ட்டான ஸ்போக் வித் ஸ்ட்ரைப் (Spoke with Stripe) மாடல் ரூ.3.02 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த மாடலில் பிரத்யேக நிறங்கள் மற்றும் சிறப்பு கிராபிக்ஸ் டிசைன்கள் வழங்கப்பட்டுள்ளன. இது மோட்டார்சைக்கிளுக்கு கூடுதல் கவர்ச்சியை சேர்க்கின்றன.

Also Read

புதிய சிபி500 மோட்டார்சைக்கிளில் சிங்கிள் சிலிண்டர் கொண்ட 501சிசி, ஏர் அண்ட் ஆயில் கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் ஹோண்டா நிறுவனம் தற்போது விற்பனை செய்யும் மோட்டார்சைக்கிள்களில் பெரிய ஏர்-கூல்டு சிங்கிள் சிலிண்டர் எஞ்சின் பொருத்தப்பட்ட மாடலாக இது வந்துள்ளது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 27.6 பிஎச்பி பவரையும், 43.3 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் வாய்ந்தது.

நகர்ப்புற நெரிசலில் பயணிக்கும் போதும், நீண்ட தூர நெடுஞ்சாலை பயணங்களின் போதும் மென்மையான ரைடிங் அனுபவத்தை வழங்கும் வகையில் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் உடன் அசிஸ்ட் அண்ட் ஸ்லிப்பர் கிளட்ச் வசதி கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் கியர்களை எளிதாக மாற்ற முடியும் என்பதோடு, வேகத்தைக் குறைக்கும் போது பின் வீல் லாக் ஆவதையும் தவிர்க்க இயலும்.

Also Read

பழமையான ரெட்ரோ தோற்றத்தைக் கொண்டிருந்தாலும், நவீன காலத்திற்கு தேவையான வசதிகள் இதில் தாராளமாக சேர்க்கப்பட்டுள்ளன. மூன்று வேரியண்ட்டுகளிலுமே பாதுகாப்புக்காக ஹோண்டா செலக்டபிள் டார்க் கன்ட்ரோல் (HSTC) அமைப்பு நிலையான பாதுகாப்பு அம்சமாக வழங்கப்பட்டுள்ளது. இது வழுக்கும் சாலைகளில் சக்கரங்கள் சறுக்குவதை தடுத்து ரைடருக்கு கூடுதல் பாதுகாப்பை உறுதி செய்கிறது.

மேலும், அனலாக் மற்றும் டிஜிட்டல் கலந்த இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் இதில் இடம்பெற்றுள்ளது. ஹோண்டாவின் ரோடு சின்க் (RoadSync) ஸ்மார்ட்போன் கனெக்டிவிட்டி வசதி மூலமாக போன் கால்கள், நேவிகேஷன் மற்றும் மெசேஜ் அறிவிப்புகளை இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டரிலேயே பார்த்துக் கொள்ள முடியும்.

ஹோண்டா இந்த புதிய சிபி500 மோட்டார்சைக்கிளை முழுமையாக இந்தியாவிலேயே உற்பத்தி செய்து விற்பனை செய்ய உள்ளது. தற்போது 350சிசிக்கு மேல் திறன் கொண்ட மோட்டார்சைக்கிள்களுக்கு இந்தியாவில் 40 சதவீத ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும் நிலையில், இங்கேயே உற்பத்தி செய்யப்படுவதால், மிக சவாலான விலையை நிர்ணயிக்க முடிந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 2020 ஆம் ஆண்டில் ராயல் என்ஃபீல்டு நிறுவனம் தனது 500சிசி யூசிஇ எஞ்சின் மோட்டார்சைக்கிள்களை விற்பனையில் இருந்து விலக்கியது. அந்த பிரிவில் உருவான காலி இடத்தைப் பூர்த்தி செய்யும் வகையில் இந்த புதிய ஹோண்டா மாடல் களமிறக்கப்பட்டுள்ளது. ஹோண்டாவின் சிபி350 மாடல்களுக்கு மேலாகவும், ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் 650சிசி இரட்டை சிலிண்டர் மோட்டார்சைக்கிள்களுக்கு கீழாகவும் இது நிலைநிறுத்தப்பட்டு உள்ளது.

Article Published On: Tuesday, September 22, 2026, 11:33 [IST]
English summary
Honda cb500 launched india price features engine details
மேலும்... #new launches #honda motorcycle
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out