ஆரஞ்சு நிறத்தில் ஹோண்டா வெளியிட்டுள்ள புதிய பைக்

ஹோண்டா நிறுவனம் தங்களுடைய பெரிய இன்ஜின் பைக்குகளில் ஒன்றான CB650R பைக்கை புதிய நிறங்களுடன் அப்டேட் செய்து வெளியிட்டுள்ளது. இந்தியாவில் இல்லை மலேசியாவில். ஆனால் இந்தியாவிலும் இந்த மேம்படுத்தப்பட்ட பைக்கை ஹோண்டா வெளியிடுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. பெர்ஃபாமன்ஸும், கிளாஸினஸும் சேர்ந்த பைக்குகளில் ஒன்று இந்த CB650R. தற்போது இரண்டு புதிய நிறங்களை இந்த 650 சிசி பைக்கிற்கு கொடுத்துள்ளது ஹோண்டா.

ஏற்கனவே மேட் கண்பவுடர் பிளாக் மெட்டாலிக் என்ற நிறத்தில் இந்த 650 சிசி பைக் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், தற்போது புதிதாக கேண்டி எனர்ஜி ஆரஞ்சு மற்றும் மேட் ஜீன்ஸ் ப்ளூ மெட்டாலிக் ஆகிய இரண்டு புதிய நிறங்களைக் கொடுத்து ஹோண்டா அப்டேட் செய்துள்ளது. இனி இந்த பைக்கை இந்த மூன்று தனித்துவமான நிறங்களில் வாடிக்கையாளர்கள் வாங்கலாம்.

Honda CB650R

இந்த பைக் இந்தியாவில் வெளியிடப்படுமா? வாய்ப்புகள் இருக்கிறது. ஏற்கனவே இந்த CB650R பைக்கை குறிப்பிட்ட அளவில் மட்டும் இறக்குமதி செய்து 2021ல் ஒருமுறையும், கடந்த 2025ம் ஆண்டு ஒருமுறையும் என இருமுறை விற்பனை செய்துள்ளது. இது விலை உயர்ந்த பைக் என்பதால், குறிப்பிட்ட அளவு மட்டும் இறக்குமதி செய்து விற்பனை செய்வதை வாடிக்கையாகக் கொண்டுள்ளது ஹோண்டா.

தற்போது வேறு சில பெரிய இன்ஜின் கொண்ட பைக் மாடல்களை இந்தியாவில் விற்பனைக்கு வைத்திருக்கிறது அந்நிறுவனம். இந்தாண்டு ஏப்ரல் மாதம் தான் இந்த பைக்கின் விற்பனையை இந்தியாவில் நிறுத்தியது ஹோண்டா. இந்தியாவில் விற்பனை செய்யப்பட்ட போது இந்த பெரிய இன்ஜின் கொண்ட நேக்கட் பைக் 10.40 லட்சம் ரூபாய் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையைக் கொண்டிருந்தது.

Honda CB650R

தற்போது தான் விற்பனை நிறுத்தப்பட்டிருப்பதால் உடனடியாக மீண்டும் இந்த பைக்கை ஹோண்டா இந்தியாவில் வெளியிடும் என எதிர்பார்க்க முடியாது. எனினும் இப்போது இந்திய வாடிக்கையாளர்களுக்கு பெரிய பைக்குகளின் மீதும் ஆர்வம் இருப்பதால் 2027ன் இறுதியில் அல்லது 2028ல் மீண்டும் இதனை ஹோண்டா இந்தியாவில் வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மலேசியாவில் அப்டேட் செய்யப்பட்டிருக்கும் CB650R பைக்கில் புதிய நிறங்கள் கொடுக்கப்பட்டிருப்பதைத் தவிர்த்து வேறு எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. குறிப்பாக மெக்கானிக்கலாக அப்படியே தான் இருக்கிறது. இந்த அப்டேட் செய்யப்பட்ட பைக்கை இந்திய மதிப்பிற்கு 11.20 லட்சம் ரூபாய் என்ற விலையில் மலேசியாவில் விற்பனை செய்யவுள்ளது ஹோண்டா.

இந்த பைக்கில் 649 சிசி, இன்லைன்-ஃபோர் சிலிண்டர், லிக்விட்-கூல்டு இன்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. 6 ஸ்பீடு கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டிருக்கும் இந்த இன்ஜினானது 93.8 hp பவர் மற்றும் 64 Nm டார்க்கை உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டுள்ளது. இத்துடன் ஹோண்டாவின் மேம்பட்ட E-கிளட்ச் வசதியையும் இந்த பைக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அடுத்த முறை இந்த CB650R பைக் இந்தியாவிற்கு வரும் போது இந்த கேண்டி எனர்ஜி ஆரஞ்சு என்ற தனித்துவமான நிறத்தையும் சேர்த்தே கொண்டு வரும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இத்துடன் இன்னும் சில தனித்துவமான நிறங்களையும் கூட வெளியாகும் போது புதிய CB650R கொண்டிருக்கலாம். இந்த பைக்கிற்கு போதுமான அளவில் டிமாண்டு எழும் போது மீண்டும் இதனை ஹோண்டா இந்தியாவிற்குக் கொண்டு வரும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஹோண்டாவின் லைன்-அப்பில் உள்ள பவர்ஃபுல்லான பைக்குகளில் இந்த CB650R பைக்கும் ஒன்று. வெளிநாடுகளைப் போல இந்தியாவில் இது போன்ற பெரிய பவர்ஃபுல்லான இன்ஜின் கொண்ட பைக்குகளுக்கு தொடர்ச்சியாக டிமாண்டு இருப்பதில்லை. எனினும் அவ்வப்போது டிமாண்டிற்கு ஏற்ப குறிப்பிட்ட ப்ரீமியம் பைக்குகளை மட்டும் இந்தியாவிற்கு ஹோண்டா கொண்டு வருவது வரவேற்கத்தக்க ஒரு விஷயம் தான்.

Article Published On: Tuesday, July 7, 2026, 14:52 [IST]
English summary
Honda cb650r updated with two new colour options in malaysia
மேலும்... #honda motorcycle #bike
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out