ஹோண்டாவின் புதிய 125 சிசி ஸ்கூட்டர்.. லிக்விட்-கூல்டு இன்ஜினுடன் விரைவில் இந்தியாவில் வெளியீடு?

இந்தியாவின் ஸ்கூட்டர் கிங்காக அறியப்படும் நிறுவனம் ஹோண்டா தான். அதன் ஆக்டிவா ஸ்கூட்டர் தான் தற்போது இந்தியாவின் அதிகம் விற்பனை செய்யப்படும் ஸ்கூட்டர் மாடலாக இருந்து வருகிறது. பல்வேறு முன்னணி தொழில்நுட்ப அம்சங்களையும் ஆக்டிவாவிலேயே ஹோண்டா செக்மென்ட் ஃபர்ஸ்ட்டாக முதலில் கொடுத்து வருகிறது.

ஆக்டிவாவைத் தவிர்த்து டியோ என்ற மற்றொரு ஸ்போர்ட்டியான ஸ்கூட்டர் மாடலையும் இந்தியாவில் விற்பனையில் வைத்திருக்கிறது ஹோண்டா. இந்த இரண்டு ஸ்கூட்டர் மாடல்களும் 110 சிசி மற்றும் 125 சிசி என இரண்டு விதமான இன்ஜின்களுடன் இந்தியாவில் விற்பனையில் இருக்கின்றன. இந்த நிலையில் க்ளிக் 125 (Click 125) என்ற புதிய ஸ்கூட்டர் மாடலின் டிசைனை இந்தியாவில் காப்புரிமைக்காகப் பதிவு செய்துள்ளது ஹோண்டா.

Honda Click 125

பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட தெற்காசிய நாடுகளில் மிகவும் பிரபலமான ஸ்கூட்டர் மாடலாக இந்த க்ளிக் 125 விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தற்போது இதன் டிசைனை இந்தியாவில் ஹோண்டா காப்புரிமை செய்திருப்பதன் மூலம், இதனை இந்தியாவில் அந்நிறுவனம் வெளியிடுமா, எப்போது வெளியிடும், இதில் கொடுக்கப்பட்டிருக்கும் அம்சங்கள் என்ன என்ற பல்வேறு கேள்விகள் நமக்கு எழுகின்றன. அனைத்து கேள்விகளுக்குமான விடையை இங்கே தேடலாம்.

முதலில் டிசைன். பார்ப்பதற்கு மிகவும் அக்ரஸிவ்வான டிசைனைக் கொண்டுள்ளது இந்தப் புதிய ஹோண்டா ஸ்கூட்டர். இதன் முகப்புப் பக்கத்தை மட்டும் நேராகப் பார்த்தால், டிரான்ஸ்ஃபார்மர்கள் ஹாலிவுட் படத்தில் வரும் ஆட்டோபாட்ஸ்களின் முகங்களைப் போலவே தோன்றுகிறது. அந்தளவிற்கு அக்ரஸிவ்வாக இருக்கிறது இதன் டிசைன். ஸ்போர்ட்டியான ஸ்கூட்டராக இதனை வடிவமைத்திருக்கிறது ஹோண்டா.

Honda Click 125

இரண்டு பக்கமும் 14 இன்ச் வீல்களைக் கொண்டிருக்கும் நிலையில், நல்ல ஸ்டான்சைக் கொண்டுள்ளது க்ளிக் 125. இந்தியாவிலேயே இரண்டு 125 சிசி ஸ்கூட்டர்களில் தான் இரண்டு பக்கமும் 14 இன்ச் வீல்கள் கொடுக்கப்பட்டுள்ளன. ஒன்று ஹீரோவின் ஸூம் 125, மற்றொன்று ஏப்ரிலியாவின் SR 125. 14 இன்ச் வீல்கள் ஸ்கூட்டருக்கு நிலைத்தன்மையைக் கொடுக்கும். கரடு முரடான பாதைகளையும் நம்பிக்கையுடன் கடக்க வைக்கும். மேலும், ஸ்போர்ட்டியான ஸ்கூட்டர்களிலேயே இது போன்ற பெரிய வீல்களை நிறுவனங்கள் கொடுத்து வருகின்றன.

இதுதவிர, LED விளக்குகள், டூயல் டோன் நிறங்களுடன் ஸ்போர்ட்டியான கிராஃபிக்ஸ் கொண்ட டிசைன், சிங்கிள் பீஸ் ஸ்டெப்டு சீட், ஸ்போர்ட்டியான மற்றும் சங்க்கியான பின்பக்க கிராப் ரெயில், முன்பக்கம் டிஸ்க் பிரேக் மற்றும் பின்பக்கம் டிரம் பிரேக் செட்டப், காம்பி பிரேக்கிங் சிஸ்டம், முன்பக்கம் டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் பின்பக்கம் மோனோஷாக் சஸ்பென்ஷன் செட்டப்புகள் ஆகிய மேம்பட்ட அம்சங்கள் இந்த ஹோண்டா க்ளிக் 125 ஸ்கூட்டரில் கொடுக்கப்பட்டுள்ளன.

இவற்றுடன் USB டைப்-C, 18 லிட்டர் அண்டர்சீட் ஸ்டோரேஜ், கீலெஸ் வசதியுடன் கூடிய ஸ்மார்ட் கீ, முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், பிராக்டிகாலிட்டிக்காக ஃபிளாட்டான ஃபுட்போர்டு ஆகிய அம்சங்கள் இந்த 125 சிசி ஸ்கூட்டரில் கொடுக்கப்பட்டுள்ளன. மெக்கானிக்கலாக இந்த ஸ்கூட்டரில் 125 சிசி, சிங்கிள் சிலிண்டர் இன்ஜினே கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இது ஏர்-கூல்டு இன்ஜின் இல்லை, லிக்விட்-கூல்டு இன்ஜின் என்பது தான் சிறப்பு.

லிக்விட்-கூல்டு இன்ஜின் என்னும் போதே அதிக பெர்ஃபாமன்ஸைக் கொண்ட ஸ்கூட்டராக இது இருக்கும் என்பதை நாம் கணித்து விட முடிகிறது. இதன் 125 சிசி இன்ஜினானது 11 hp பவர் மற்றும் 11 Nm டார்க்கை உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டுள்ளது. இந்தியாவில் விற்பனையில் இருக்கும் ஹோண்டாவின் 125 சிசி ஸ்கூட்டர்களானது 8.5 hp பவரையே உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

5.5 லிட்டர் எரிபொருள் டேங்கைக் கொண்டிருக்கும் இந்த ஸ்கூட்டரானது, 131 மிமீ கிரௌண்டு கிளியரன்ஸ் மற்றும் 111 கிலோ எடையையும் கொண்டுள்ளது. மற்ற அம்சங்கள் எல்லாம் ஓகே தான். ஆனால், கிரௌண்டு கிளியரன்ஸ் மிக மிகக் குறைவாக இருக்கிறது. எந்த வகையான இந்திய சாலையை எடுத்துக் கொண்டாலும் இதன் அடிப்பக்கம் அடிவாங்குவதைத் தவிர்க்க முடியாது. இந்தியாவில் விற்பனையில் இருக்கும் அனைத்து ஸ்கூட்டர்களுமே குறைந்தபட்சம் 160 மிமீ கிரௌண்டு கிளியரன்ஸையாவது கொண்டிருக்கின்றன.

நல்ல பெர்ஃபாமன்ஸைக் கொண்டிருக்கும் இன்ஜின் என்றாலும், குறைவான மைலேஜைக் கொடுக்குமோ என வாடிக்கையாளர்கள் கவலைப் படாத வகையில் லிட்டருக்கு 49.5 லிட்டர் மைலேஜைக் கொடுக்கும் ஒரு ஸ்கூட்டர் மாடலாக இதனைக் குறிப்பிட்டுள்ளது ஹோண்டா. இந்தியாவில் விற்பனையில் இருக்கும் 125 சிசி ஸ்கூட்டர் மாடல்களும் கிட்டத்தட்ட இதே அளவு மைலேஜையே கொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் இந்த ஸ்கூட்டர் மாடலை ஹோண்டா வெளியிடுமா? வாய்ப்புகள் குறைவு தான். இதுவரை இதுபோல வெளிநாடுகளில் தாங்கள் விற்பனை செய்து வரும் பல்வேறு ஸ்கூட்டர்கள் மற்றும் பைக் மாடல்களின் டிசைன்களை இந்தியாவில் காப்புரிமைக்காகப் பதிவு செய்துள்ளது ஹோண்டா. ஆனால் அவையெல்லாம் இந்தியாவில் வெளியிடப்பட்டுவிடவில்லை. மாறாக இந்திய சந்தைக்கேற்ப குறிப்பிட்ட சில மாடல்களை மட்டுமே ஹோண்டா வெளியிட்டிருக்கிறது.

இந்த 125 ஸ்கூட்டர் மாடலை இந்தியா வெளியிடுவதற்கான எந்தவொரு அறிகுறியும் இல்லை. வெளியிடும் நோக்கம் இருந்திருந்தால் இப்போதே தெரிந்திருக்கும். லிக்விட்-கூல்டு இன்ஜின் என்னும் போது பர்ஃபாமன்ஸுடன் விலையும் அதிகமாகவே இருக்கும். பிலிப்பைன்ஸில் இந்திய மதிப்பிற்கு ரூ.1.28 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் இந்த 125 சிசி ஸ்கூட்டர் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதிக விலை கொண்ட 125 சிசி ஸ்கூட்டரை அதிகளவில் வாங்க இந்திய சந்தை தற்போது தயாராக இருக்கிறதா என்னும் கேள்வியும் இருக்கிறது. எனவே இந்த ஸ்கூட்டரை தற்போதைக்கு ஹோண்டா இந்தியாவிற்குக் கொண்டு வராது.

More from DriveSpark

Article Published On: Saturday, April 11, 2026, 20:15 [IST]
English summary
Honda click 125 scooter design patented in india when will it launch
மேலும்... #honda #scooter
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+