புள்ளிங்கோ வண்டியில் புதிய வேரியன்ட்! ஸ்போட்டியா வேற ரெடி பண்ணிட்டாங்களே!

ஹோண்டா நிறுவனம் தனது டியோ 125 ஸ்கூட்டரில் புதிய வேரியன்டை அறிமுகப்படுத்தியுள்ளது. அதற்கு அந்நிறுவனம் டியோ 125 எக்ஸ் எடிசன் என பெயர் வைத்துள்ளுது. இந்த புதிய வேரியன்டில் ரெகுலர் வேரியன்டிலிருந்து பல்வேறு மாறுபாடுகள் உள்ளன. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

ஹோண்டா நிறுவனம் இந்த டியோ 125 எக்ஸ் எடிசனில் புதிய கலர் ஆபீ்ஷன்களை கொண்டு வந்துள்ளது. மேலும் அதன் லுக்கை சற்று அக்ரஸிவாக மாற்றியுள்ளது. இந்த ஸ்கூட்டர் தற்போது பியர்ல் சைரன் ப்ளூ, பியர்ல் டீப் கிரவுண்ட் கிரே ஆகிய கலர் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இதில் டுயல் டோன் டார்க் ப்ளூ மற்றும் கிரே கலர் ஸ்கீம்கள் உள்ளது. இதன் ரிம்கள் சிவப்பு நிற பெயிண்ட் செய்யப்பட்டுள்ளது. இது பாடி கலருக்க காண்ட்ராஸ்டாக உள்ளது. இந்த பெயிண்ட் ஸ்கிரீன் இதன் லுக்கை ஸ்போர்ட்டியாக மாற்றியுள்ளது.

Honda Dio 125 X Edition

இது போக புதிய எடிசன் டியோ 125 எக்ஸ் எடிசன் ஸ்கூட்டரில் அம்சங்கள் எல்லாம் அதே அம்சங்கள் கொண்டதாக தான் உள்ளது. இதில் டிஎஃப்டி கண்சோல் ஸ்மார்ட் போன் கனெக்டிவிட்டி,கால்/ எஸ்எம்எஸ் அலர்ட்கள், டர்ன் பை டர்ன் நேவிகேஷன், யூஎஸ்பி டைப் சி சார்ஜிங் போர்ட் உள்ளது. இதில் போனை சார்ஜ் செய்ய முடியாது.

இந்த டியோ 125 எக்ஸ் எடிசன் ஸ்கூட்டரில் மொத்தம் 123.9 சிசி ஏர் கூல்டு, சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 8.19 பிஎச்பி பவரையும் 10.5 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டர் ரூ93,000- ரூ93500 என்ற விலையில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Honda Dio 125 X Edition

இந்த 125 சிசி ஸ்கூட்டர் ஸ்போர்ட்டியான லுக், நவீன அம்சங்கள் மற்றும் ஹோண்டாவின் நம்பகமான கட்டுமானம் ஆகியவற்றை கொண்டு உருவாக்கப்ப்டடுள்ளது. இ்நத ஆப்ஷன்களுடன் ஸ்கூட்டரை தேடுபவர்களுக்கு இது ஒரு நல்ல ஆப்ஷனாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

இந்த ஸ்கூட்டரின் பிரேக்கிங் சிஸ்டத்தை பொருத்தவரை முன்பக்கம் 190 மிமீ டிஸ்க் பிரேக், பின்பக்கம் 130 மிமி டிரம் பிரேக் உள்ளது. டயர்கள் 90/90 -12 அளவில் டியூப்லெஸ் டயர் முன்பக்கமும், 90/100-10 அளவில் டியூப்லெஸ் டயர் பின்பக்கமும் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டரில் டெலஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் 3 ஸ்டெப் அட்ஜெஸ்டபிள் ஆப்ஷன் கொண்ட ஸ்பிரிங் லோடு சஸ்பென்சன் செட்டப் வழங்கப்பட்டுள்ளது.

இந்த ஸ்கூட்டரின் அளவுகளை பொருத்தவரை 1830 மிமி நீளம், 707 மிமீ அகலம், 1172 மிமீ உயரம், 1260 மிமீ வீல் பேஸ், 171 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ், 708 மிமி சீட் நீளம், ஆகிய அளவுகளில் 105 கிலோ எடை மறுஅறம் 5.5 லிட்டர் பெட்ரோல் டேங்க் உடன் இந்த ஸ்கூட்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் டூவீலர்களுக்கு செம டிமாண்ட் இருக்கிறது. தற்போது டியோ வாகனம் புதிய வேரியன்டில் வந்துள்ளது. அதன் ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது. இதனால் எதிர்காலத்தில் இந்த ஸ்கூட்டர் உயிர்ப்புடன் இருக்கும். இது குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.

More from DriveSpark

Article Published On: Friday, January 30, 2026, 11:05 [IST]
English summary
Honda dio 125 x edition unveiled fresh style
மேலும்... #honda motorcycle #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+