இந்தியாவில் ஆக்டிவாவைப் போலவே ஹோண்டா வெளியிடும் புதிய 125 சிசி ஸ்கூட்டர் இது தான்

இந்தியாவில் ஸ்கூட்டர்களுக்குப் பெயர் பெற்ற ஹோண்டா, புதிய ஸ்கூட்டர் மாடல் ஒன்றை வெளியிடவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகி வருகின்றன. ரெட்ரோ ஸ்டைல் ஸ்கூட்டர்களுக்கு வாடிக்கையாளர்களிடம் நல்ல எதிர்பார்ப்பு இருக்கிறது. எனவே ஏற்கனவே விற்பனை செய்யப்பட்டு வரும் ஆக்டிவாவுடன், சர்வதேச சந்தைகளில் தாங்கள் விற்பனை செய்து வரும் புதிய 125 சிசி ஸ்கூட்டரை இந்தியாவிலும் ஹோண்டா வெளியிடவிருப்பதாகக் கூறப்படுகிறது.

ஏற்கனவே ஆக்டிவா மூலம் வெற்றி கண்டிருப்பதால், புதிய ஸ்கூட்டரும் வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பைப் பெறலாம். சர்வதேச அளவில் ஹோண்டா விற்பனை செய்து வரும் NS125 LA என்ற ஸ்கூட்டர் மாடலே இந்தியாவிலும் வெளியிடப்படலாம் எனக் கூறப்படுகிறது. இதற்கு முக்கியமான ஒரு காரணம் இந்த ஸ்கூட்டரின் டிசைனுக்கு இந்தியாவில் அந்நிறுவனம் காப்புரிமை பெற்றிருப்பது தான்.

Honda NS125 LA

NS125 LA ஸ்கூட்டரின் டிசைனை வேறு யாரும் பயன்படுத்தி விடக்கூடாது என்பதற்காக இந்தியாவில் இதனை காப்புரிமை செய்துள்ளது ஹோண்டா. மேலும், உடனடியாக இல்லையென்றாலும், இந்தியாவில் இந்த 125 சிசி ஸ்கூட்டர் வெளியிடப்படுவதற்கான வாய்ப்புகள் சற்று கூடுதலாகவே இருக்கின்றன. இந்தப் புதிய ஸ்கூட்டரின் சிறப்பம்சங்களை இங்கே நாம் பார்க்கலாம்.

ஆக்டிவா 125 மற்றும் புதிய NS125 LA ஆகிய இரண்டுமே 125 சிசி ஸ்கூட்டர்கள் தான் என்றாலும், ஆக்டிவாவை விட கொஞ்சமே கொஞ்சம் கூடுதல் பவரை உற்பத்தி செய்யும் இன்ஜினை இந்த NS125 LA கொண்டுள்ளது. ஆக்டிவாவில் பயன்படுத்தப்பட்டிருக்கும் 124 சிசி இன்ஜினானது, 8.4 hp பவர் மற்றும் 10.5 Nm டார்க்கை உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டுள்ளது.

Honda NS125 LA

ஆனால், NS125 LA ஸ்கூட்டரில் பயன்படுத்தப்பட்டிருக்கும் 124 சிசி, சிங்கிள் சிலிண்டர், ஏர்-கூல்டு இன்ஜினானது, சற்று கூடுதலாக 9.5 hp பவர் மற்றும் 10 Nm டார்க்கை உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டுள்ளது. டார்க்கின் அளவு 0.5 Nm ஆக்டிவாவை விடக் குறைவு தான்.

இந்த ஸ்கூட்டரிலும் முன்பக்கம் டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் பின்பக்கம் ஷாக் அப்சார்பர்கள் சஸ்பென்ஷன் செட்டப்புகளே பயன்படுத்தப்பட்டுள்ளன. ஸ்கூட்டரின் முன்பக்கம் 12 இன்ச் வீலையும், பின்பக்கம் 10 இன்ச் வீலையும் பயன்படுத்தியிருக்கிறது ஹோண்டா. ஆக்டிவா 125 ஸ்கூட்டரிலும் இதே வீல் செட்டப் தான் கொடுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

ஆக்டிவாவைப் போலவே மேம்பட்ட வசதிகள் கொண்ட ஸ்கூட்டராகவே இந்த NS125 LA இருக்கிறது. இதில் ப்ளூடூத் மூலம் ஸ்மார்ட்போன் கனெக்டிவிட்டியுடன் கூடிய TFT டிஸ்பிளே, வெஹிக்கிள் டிராக்கிங், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் மற்றும் ரைடு டேட்டா ஆகிய அம்சங்களை ஹோண்டா கொடுத்துள்ளது. இதன் சில விலை உயர்ந்த வேரியன்ட்களில் ABS வசதியும் கொடுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

சீனாவில் இந்திய மதிப்பிற்கு 1.45 லட்சம் ரூபாயை ஒட்டிய விலையில் இந்த 125 சிசி ஸ்கூட்டர் மாடல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆனால இந்தியாவில் வெளியாகும் பட்சத்தில் இந்திய சந்தைக்கு ஏற்ற வகையில் 1 லட்சத்திற்கும் உள்ளான விலையிலேயே வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை இந்தியாவில் வெளியிட ஹோண்டா திட்டமிட்டால், ஆக்டிவாவை விட கொஞ்சம் கூடுதல் விலையில் வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: பார்ப்பதற்கு இந்தியாவிற்கு ஏற்ற ஸ்கூட்டர் மாடலாகவே இந்த NS125 LA ஸ்கூட்டர் இருக்கிறது. ரெட்ரோ லுக்கில் பார்த்தவுடனே பிடிக்கும் வகையிலான ஸ்கூட்டராகவும் இருக்கிறது. 125 சிசி தான் ஸ்கூட்டர்களின் ஹாட் செல்லிங் பிரிவு. அனைத்து அம்சங்களிலும் இந்த NS125 LA இந்திய சந்தைக்கு ஒத்துப் போகிறது. இதனை இந்தியாவில் வெளியிடுவது குறித்து ஹோண்டா என்ன முடிவு எடுக்கிறது என்பதை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Article Published On: Tuesday, June 23, 2026, 14:39 [IST]
English summary
Honda may launch this new ns125 la scooter in india soon to sell besides activa 125
மேலும்... #honda motorcycle #scooter
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out