இப்போ இந்த ஹோண்டா பைக்க தான் லட்சக்கணக்குல மக்கள் வாங்குறாங்க.. விலையும் ரொம்ப கம்மி!
MSX125 குரோம் (MXS25 Grom) என்ற மினி பைக்கை 2026ம் ஆண்டிற்காக அப்டேட் செய்துள்ளது ஹோண்டா. இது இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படவில்லை. ஆனால் இந்த மினி பைக்கைப் பார்த்தவுடன் உங்களுக்கு வேறொரு பைக்கின் ஞாபகம் வர வேண்டுமே. சரி தான், ஹோண்டாவின் நவி (Honda Navi) தான் அது. இந்த குரோம் பைக்கின் அடிப்படையில் தான் நவியை உருவாக்கி இந்தியாவில் விற்பனை செய்தது ஹோண்டா.
2016ல் வெளியிடப்பட்ட போது இதன் வித்தியாசமான டிசைன் மற்றும் வடிவமைப்பு இந்தியா வாடிக்கையாளர்களிடையே ஒரு ஆர்வத்தை உண்டாக்கியது. ஆனால் இந்திய வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கும் அளவிற்கு மிகவும் பிராக்டிகலான பைக்காக நவியைக் கூற முடியாது. எனவே தொடர்ந்து விற்பனை குறைந்த நிலையில், 2020ல் BS6 விதிமுறைகளின் நடைமுறைப்படுத்தப்பட்ட போது நவியின் விற்பனையையும் ஹோண்டா நிறுத்திவிட்டது.

MSX125 குரோம் மினி பைக்கை சர்வதேச அளவிலேயே தற்போது ஹோண்டா அப்டேட் செய்துள்ளது. இந்தியாவில் இல்லையென்றாலும் மற்ற நாடுகளில் இந்த மினி பைக்கிற்கு நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. குறிப்பாக தாய்லாந்தில். 2012ம் ஆண்டு முதன்முதலில் இந்த குரோம் பைக்கை சர்வதேச அளவில் வெளியிட்டது ஹோண்டா. அப்போதில் இருந்து கடந்த 13 ஆண்டுகளில் மொத்தமாக 8.6 லட்சம் குரோம் பைக்குகளை உலகமெங்கும் அந்நிறுவனம் விற்பனை செய்துள்ளது.
உலகமெங்கும் விற்பனை செய்யப்பட்ட குரோம் பைக்குகளில் 6.18 லட்சம் பைக்குகள் தாய்லாந்தில் மட்டுமே விற்பனை செய்யப்பட்டிருக்கின்றன. அந்நாட்டைத் தவிர்த்து அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவிலும் கணிசமான அளவில் இந்த மினிபைக் விற்பனைாகியிருக்கிறது. எனினும் பெரிய பைக்குகள் அளவிற்கு இந்த மினி பைக்கின் விற்பனை ஒருபோதும் இருக்கவில்லை. மேலே கூறியது போல பிராக்டிகாலிட்டி குறைவாக இருப்பதும் அதற்கான முக்கியமான காரணங்களில் ஒன்று.

இந்த மினி பைக்கில் 125 சிசி, 2 வால்வு, ஏர்-கூல்டு இன்ஜினை ஹோண்டா பயன்படுத்தியிருக்கிறது. இந்த இன்ஜினானது 9.6 hp பவர் மற்றும் 10.4 Nm டார்க்கை உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டுள்ளது. மினி பைக்காக இருந்தாலும் கியர்டு பைக்காகவே இந்த MSX125 குரோம் இருக்கிறது. இந்த பைக்கின் 125 சிசி இன்ஜின் 5 ஸ்பீடு கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக மணிக்கு 94 கிமீ வேகத்தில் செல்லும் திறனை இந்த பைக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
பைக்கின் முன்பக்கம் 31 மிமீ USD ஃபோர்க் சஸ்பென்ஷன் செட்டப்பும், பின்பக்கம் மோனோஷாக் சஸ்பென்ஷன் செட்டப்பும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. 6 லிட்டர் எரிபொருள் டேங்குடன் முழுமையான LCD இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் இந்த மினி பைக்கில் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த அம்சங்களுடன் 103 கிலோ என்ற அளவில் மிகவும் எடை குறைவான பைக்காகவே இந்த ஹோண்டா குரோம் இருக்கிறது.
நவியின் வெளியீடே குரோம் இந்தியாவில் எப்படி விற்பனையாகும் என்பதைக் காட்டிவிட்டது. எனவே இந்த குரோம் மினிபைக்கை ஹோண்டா இந்தியாவிற்குக் கொண்டு வரும் வாய்ப்புகள் இல்லை. 2020ம் ஆண்டு விற்பனை நிறுத்தப்பட்ட போது டிவிஎஸ் XL100-ஐ விட கொஞ்சமே கொஞ்சம் அதிகமாக 48,000 ரூபாய் முதல் 53,000 வரையிலான எக்ஸ்-ஷோரூம் விலையிேயே நவி இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வந்தது இங்கே குறிப்பிடத்தக்கது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: நவி மற்றும் குரோம் போன்ற மினி பைக்குகள் ஃபன் டூ ரைடு வகையறாவைச் சேர்ந்தவை. இவற்றை தினசரிப் பயன்பாட்டிற்காக வாடிக்கையாளர்கள் வாங்க முடியாது. ஏனென்றால் மேலே கூறியது போல பிராக்டிகாலிட்டி தான். நல்ல பெர்ஃபாமன்ஸ் கொடுக்கும் பெரிய பைக்குகள் அல்லது மிகவும் பிராக்டிகலான ஸ்கூட்டர்களுக்கு இடையில் இந்த மினி பைக்கிற்கான தேவை மிகவும் குறைவு தான்.


Click it and Unblock the Notifications