ரூ.2.22 லட்சத்தில் புதிய ஹோண்டா ரெபல் 300 பைக் அறிமுகம்... ராயல் என்ஃபீல்டு மீட்டியோர் 350க்கு நேரடி போட்டி!!

இந்தியாவின் நடுத்தர வகை க்ரூஸர் மோட்டார்சைக்கிள் மார்க்கெட்டில் புதிய மாடலை ஹோண்டா நிறுவனம் இன்று அறிமுகம் செய்துள்ளது. கடந்த மாதம் இந்தியாவில் காட்சிப்படுத்தப்பட்ட ரெபல் 300 க்ரூஸர் மோட்டார்சைக்கிளின் விலை உள்ளிட்ட முக்கிய விபரங்களையும் அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதன்படி, இந்த புதிய ரெபல் 300 மோட்டார்சைக்கிள் இரண்டு வேரியண்ட்டுகளில் விற்பனைக்கு கிடைக்கும்.

விலை விபரம்

அடிப்படையான அம்சங்கள் கொண்ட ஹோண்டா ரெபல் 300 ஸ்டான்டர்டு வேரியண்ட்டிற்கு ரூ.2.22 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையும், இ க்ளட்ச் வசதி கொண்ட உயர்வகை வேரியண்ட்டிற்கு ரூ.2.62 லட்சம் விலையும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய மோட்டார்சைக்கிளுக்கு ரூ.5,000 முன்பணம் செலுத்தி ஹோண்டாவின் பிக்விங் டீலர்களில் முன்பதிவு செய்து கொள்ளலாம். முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு வரும் அக்டோபர் மாத மத்தியில் இருந்து டெலிவிரி கொடுக்கும் பணிகள் துவங்கப்பட உள்ளது.

Honda Rebel 300

எஞ்சின்

புதிய ஹோண்டா ரெபல் 300 மோட்டார்சைக்கிளில் 286சிசி கொண்ட சிங்கிள் சிலிண்டர் லிக்யூடு கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 30 பிஎச்பி பவரையும், 27.4 என்எம் டார்க்கையும் வழங்கும். 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளதுடன், நீண்ட தூர பயணங்களின்போது ஓட்டுனருக்கு எளிதான கியர் மாற்ற வசதியை அளிக்கும் அசிஸ்ட் மற்றும் ஸ்லிப்பர் க்ளட்ச் தொழில்நுட்பமும் உள்ளது. உயர்நிலை வேரியண்ட்டில் E-Clutch வசதியும் அளிக்கப்படுகிறது. இந்த இ க்ளட்ச் வசதி மூலமாக க்ளட்ச்சை பிடிக்காமலேயே கியர் மாற்ற முடியும்.

Also Read

க்ரூஸர் ஸ்டைல்

புதிய ரெபல் 300 மோட்டார்சைக்கிளில் தாழ்வான இருக்கை அமைப்புடன் கூடிய உண்மையான க்ரூஸர் அனுபவத்தை தரும் வடிவமைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. உயர்த்தப்பட்ட அமைப்புடன் ஹேண்டில்பார், எல்இடி புரொஜெக்டர் ஹெட்லைட், அழகான டிசைனில் பெட்ரோல் டேங்க், அகலமான டயர்கள் என பார்த்தவுடனே க்ரூஸர் மோட்டார்சைக்கிள் பிரியர்களை கவர்ந்துவிடும்.

இந்த புதிய மோட்டார்சைக்கிளில் டிஎஃப்டி திரையுடன் கூடிய இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் உள்ளு. இதனுடன் டரன் பை டரன் நேவிகேஷன், இரண்டு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக்குகள் மற்றும் டியூவல் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் ஆகியவையும் முக்கிய அம்சங்களாக குறிப்பிடலாம். இந்த மோட்டார்சைக்கிளின் கூடுதல் விபரங்கள் வரும் அக்டோபரில் வெளியிடப்படும் என்றும் தெரிகிறது.

Also Read

நேரடி போட்டியாளர்

புதிய ஹோண்டா ரெபல் 300 மோட்டார்சைக்கிளானது நேரடியாக ராயல் என்ஃபீல்டு மீட்டியோர் 350 மோட்டார்சைக்கிளை குறிவைத்து நிலைநிறுத்தப்படும். இந்த மோட்டார்சைக்கிள் இந்தியாவிலேயே அசெம்பிள் செய்து விற்பனை செய்யப்படுவதால், விலையை சரியாக நிர்ணயிக்கும் வாய்ப்பு ஹோண்டாவுக்கு கிடைத்துள்ளது. லிக்யூடு கூல்டு எஞ்சின், டிஎஃப்டி டிஸ்ப்ளே மற்றும் இ க்ளட்ச் போன்ற அம்சங்கள் இதற்கு வலுசேர்க்கின்றன.

Article Published On: Tuesday, August 25, 2026, 14:57 [IST]
English summary
Honda rebel 300 launched india price 2 22 lakh e clutch features
மேலும்... #new launches #honda motorcycle
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out