இந்த பைக்கை சந்தையில அடிச்சுக்க ஆளே இல்லை.. ஹீரோ ஸ்ப்ளெண்டரை ஓடவிட்ட ஒரு பைக்!

எவ்வளவு விலை உயர்ந்த பைக் மாடல்கள் இந்தியாவில் விற்பனை இருந்தாலும், அதிகம் விற்பனையாகும் பைக்குகள் என்றால் அது விலை குறைவான 100 சிசி பைக்குகள் தான். 97.2 சிசி இன்ஜின் கொண்ட ஸ்ப்ளெண்டர் பிளஸ்ஸுக்கு இணையாக விற்பனையாகக் கூடிய பைக்கை இன்னும் எந்த நிறுவனமும் தயாரிக்கவில்லை. ஆனாலும், அதற்குப் போட்டியாக ஒரு பைக் இந்திய சந்தையில் விற்பனையாகி வருகிறது.

அது ஏற்கனவே உங்களுக்குத் தெரிந்த ஒரு பைக் மாடல் தான். அது வேறெதுவும் இல்லை ஹோண்டாவின் ஷைன் 100 தான். ஸ்ப்ளெண்டருக்குப் போட்டியாக, வாடிக்கையாளர்கள் விரும்பும் வகையில் சிம்பிளான டிசைன் மற்றும் அதிக மைலேஜுடன், மிகவும் குறைவான விலையில் விற்பனை செய்யப்படும் ஒரு பைக் மாடலாக ஹோண்டா ஷைன் 100 இருக்கிறது. இந்த பைக் மாடல் எத்தனை வேரியன்ட்களாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது, அதில் எந்த வேரியன்டை நீங்கள் வாங்கலாம் என்பதனை இங்கே நாம் பார்க்கலாம்.

Honda Shine 100

ஸ்டாண்டர்டு 'ஷைன் 100' மற்றும் 'ஷைன் 100 DX' என இரண்டு மாடல்களாக இந்த பைக்கை இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது ஹோண்டா. இந்த இரண்டு மாடல்களுக்கு இடையிலும் டிசைன் மற்றும் வசதிகள் என்ற வகையில் வேறுபாடுகள் இருந்தாலும், அடிப்படையில், பிளாட்ஃபார்ம், இன்ஜின் மற்றும் மற்ற மெக்கானிக்கல் அம்சங்கள் எல்லாம் ஒன்று தான்.

இந்த பைக்கில் 98.98 சிசி சிங்கிள் சிலிண்டர், ஏர்-கூல்டு இன்ஜின் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜினானது 7.4 hp பவர் மற்றும் 8.05 Nm டார்க்கை உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டுள்ளது. இந்த இன்ஜின் 4 ஸ்பீடு கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் மற்றும் அம்சங்கள் இரண்டு பைக்குகளிலும் ஒன்று தான். இந்த இன்ஜினானது லிட்டருக்கு 65 கிமீ முதல் 70 கிமீ வரையிலான மைலேஜையும் கொடுப்பது குறிப்பிடத்தக்கது.

Honda Shine 100 DX

இதனைத் தவிர்த்து ஸ்டாண்டர்டான ஷைன் 100 பைக்கில், 9 லிட்டர் எரிபொருள் டேங்க், ட்வின் பாடு அனலாக் டிஸ்பிளே, டியூப் டயர்கள் ஆகிய அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. ஐந்து டூயல் டோன் நிறங்களில் இந்த பைக்கை நாம் வாங்கலாம். 99 கிலோவுடன் மிகவும் குறைவான எடை கொண்ட பைக் மாடலாக இந்த ஷைன் 100 இருக்கிறது. மேலும், ரூ.65,243 என்ற மிகவும் குறைவான எக்ஸ்-ஷோரூம் விலையில் இந்த 100 சிசி கம்யூட்டர் பைக் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்த அடிப்படை வசதிகள் இல்லாமல் மேம்பட்ட வசதிகள் வேண்டும் என்னும் வாடிக்கையாளர்கள் ஷைன் 100 DX மாடலை வாங்கலாம். ஆனால், விலையும் சற்று கூடுதலாக இருக்கும். DX மாடலில் சற்று பெரிய 10 லிட்டர் எரிபொருள் டேங்க், முகப்பு விளக்கின் மேலே குரோம் கார்னிஷ், டியூப்லெஸ் டயர்கள் மற்றும் டிஜிட்டல் டிஸ்பிளே ஆகிய அம்சங்கள் ஸ்டாண்டர்டு மாடலை விட கூடுதலாகக் கொடுக்கப்பட்டுள்ளன.

இதன் காரணமாக பைக்கின் எடையும் 4 கிலோ வரை கூடுதலாக 103 கிலோவாக இருக்கிறது. ரெட், ப்ளூ, கிரே மற்றும் பிளாக் என நான்கு தனித்துவமான நிறங்களில், ஸ்டைலான கிராஃபிக்ஸ் மற்றும் ஸ்டிக்கரிங்கைக் கொண்டிருக்கும் இந்த கம்யூட்டர் பைக் மாடலை ரூ.71,746 என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் வாடிக்கையாளர்கள் வாங்க முடியும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: 100 சிசி பிரிவில் ஸ்ப்ளெண்டர் பிளஸ் இல்லாமல், ஆனால் அதே போல் சிறப்பான அம்சங்கள் மற்றும் பெர்ஃபாமன்ஸ் கொண்ட பைக்கை வாங்க வேண்டும் என்றால் ஹோண்டாவின் இந்த ஷைன் 100 மாடல்களில் ஒன்றைத் தேர்வு செய்யலாம். ஸ்ப்ளெண்டருடன் ஒப்பிடும் போது விலையும் குறைவு தான். ஹீரோ ஸ்ப்ளெண்டர் பிளஸ் பைக் மாடலானது ரூ.76,177 என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் தொடங்கி விற்பனை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

More from DriveSpark

Article Published On: Tuesday, April 7, 2026, 16:54 [IST]
English summary
Honda shine 100 commuter bike variants and prices check all details here
மேலும்... #honda motorcycle #bikes #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+