ஹீரோ ஸ்பிளெண்டருக்கு டஃப் குடுக்கும் ஜப்பான் தயாரிப்பு... விலை இவ்ளோதானா... மக்கள் கண்ண மூடிட்டு வாங்கறாங்க!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் பைக்குகளில் ஒன்று ஹீரோ ஸ்பிளெண்டர் (Hero Splendor). இதற்கு சரி நிகர் போட்டியாக ஹோண்டா ஷைன் (Honda Shine) இருந்து வருகிறது. இந்த சூழலில் ஹோண்டா ஷைன் பைக்கின் கடந்த 2025ம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report), ரஸ்லேன் தளத்தில் தற்போது வெளியாகியுள்ளது.

இதன்படி பார்த்தால் கடந்த 2025ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஒட்டுமொத்தமாக 1,41,602 ஹோண்டா ஷைன் பைக்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால் கடந்த 2024ம் ஆண்டு டிசம்பர் மாதம் 1,00,841 ஹோண்டா ஷைன் பைக்குகள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டிருந்தன. அதாவது கடந்த 2024ம் ஆண்டு டிசம்பர் மாதத்துடன் ஒப்பிடும்போது, 2025ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் 40,761 ஹோண்டா ஷைன் பைக்குகள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன.

Honda Shine 100

இதன் மூலம் ஹோண்டா ஷைன் பைக் விற்பனையில் 40.42 சதவீத வளர்ச்சியை பதிவு செய்து அசத்தியுள்ளது. அத்துடன் கடந்த 2025ம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்திய சந்தையில் மிகவும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட டாப் 10 மோட்டார்சைக்கிள்களின் பட்டியலில் (Top 10 Motorcycles December 2025), ஹோண்டா ஷைன் பைக் 2வது இடத்தை பிடித்துள்ளது.

இந்த பட்டியலில் ஹீரோ ஸ்பிளெண்டர் முதல் இடத்தை பிடித்துள்ளது. கடந்த 2025ம் ஆண்டு டிசம்பர் மாதம் 2,80,760 ஹீரோ ஸ்பிளெண்டர் பைக்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் கடந்த 2025ம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்தியாவில் மிகவும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட பைக் என்ற பெருமையை ஹீரோ ஸ்பிளெண்டர் தன்வசப்படுத்தியுள்ளது.

Honda Shine 100 DX

இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் ஹோண்டா ஷைன் பைக் மொத்தம் 3 வெர்ஷன்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அவை ஹோண்டா ஷைன் 100, ஹோண்டா ஷைன் 100 டிஎக்ஸ் மற்றும் ஹோண்டா ஷைன் 125 ஆகியவை ஆகும். இதில், ஹோண்டா ஷைன் 100 பைக்கின் ஆரம்ப விலை வெறும் 65,243 ரூபாயாக மட்டுமே உள்ளது.

அதே நேரத்தில் ஹோண்டா ஷைன் 100 டிஎக்ஸ் பைக்கின் ஆரம்ப விலை 71,746 ரூபாயாக மட்டுமே இருக்கிறது. மறுபக்கம் ஹோண்டா ஷைன் 125 பைக்கின் ஆரம்ப விலை 80,852 ரூபாயாக உள்ளது. இவை அனைத்துமே ஹோண்டா இந்தியா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எக்ஸ்-ஷோரூம் விலை (Ex. Showroom Price) ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: ஓரளவிற்கு குறைவான விலையில், நம்பகத்தன்மை வாய்ந்த, அதே நேரத்தில் நீண்ட வருடங்களுக்கு நீடித்து உழைக்க கூடிய ஒரு கம்யூட்டர் ரக பைக்கை எதிர்பார்க்க கூடிய வாடிக்கையாளர்களுக்கு ஹோண்டா ஷைன் மிகச்சிறந்த ஆப்ஷன் என்பது டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் கருத்து.

மற்ற ஒரு சில பைக்குகளை போல் அல்லாமல், 'ஸ்மூத்' ஆன இன்ஜினை கொண்டிருப்பது ஹோண்டா ஷைன் பைக்கின் மிகப்பெரிய ப்ளஸ் பாயிண்ட் ஆகும். ஜப்பானை சேர்ந்த ஹோண்டா நிறுவனத்தின் தயாரிப்பான ஷைன் பைக்கின் விற்பனை இந்திய சந்தையில் மிகவும் சிறப்பாக இருந்து வருவதற்கு இந்த மென்மையான இன்ஜினும் மிக முக்கியமான காரணங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Friday, January 30, 2026, 12:36 [IST]
English summary
Honda shine sales report december 2025 40 42 per cent growth
மேலும்... #honda motorcycle #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+