ஜப்பான் இன்ஜினியர்களை களத்தில் இறக்கி விட்ட ஹோண்டா! நம்ப முடியாத குறைவான விலையில் வருகிறது புதிய ஸ்கூட்டர்!

இந்தியாவின் ஸ்கூட்டர் (Honda) செக்மெண்ட்டின் கிங் என்றால், அது ஹோண்டா (Scooter) நிறுவனம்தான். இதற்கு ஹோண்டா ஆக்டிவா (Honda Activa) ஸ்கூட்டர்தான் மிகவும் முக்கியமான காரணமாக உள்ளது. இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் மிகவும் அதிகமாக விற்பனையாகும் ஸ்கூட்டராக ஹோண்டா ஆக்டிவா திகழ்கிறது.

ஒவ்வொரு மாதமும் லட்சக்கணக்கான ஆக்டிவா ஸ்கூட்டர்களை ஹோண்டா நிறுவனம் இந்திய சந்தையில் விற்பனை செய்கிறது. இதேபோன்றதொரு வெற்றியை, இந்தியாவின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் செக்மெண்ட்டிலும் (Electric Scooter), பெற வேண்டும் என ஹோண்டா நிறுவனம் விரும்பியது. இதற்காக 2 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை ஹோண்டா நிறுவனம் விற்பனைக்கு களமிறக்கியது.

Honda QC1 Front View

அவை ஹோண்டா ஆக்டிவா இ (Honda Activa e) மற்றும் ஹோண்டா க்யூசி1 (Honda QC1) ஆகியவை ஆகும். இவை இரண்டுமே இந்திய வாடிக்கையாளர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் விற்பனைக்கு வந்தன. எனவே இந்த 2 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களும் சரவெடியாய் வெடிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அதற்கு மாறாக இரண்டுமே புஸ்வானமாய் மாறி போயின. ஹோண்டா நிறுவனம் எதிர்பார்த்த அளவிற்கு இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனையாகவில்லை. எனவே ஒரு கட்டத்தில், இந்த 2 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் விற்பனையையும், ஹோண்டா நிறுவனம் நிறுத்தவுள்ளதாக தகவல்கள் வெளி வந்தன. ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை.

Honda QC1

மாறாக ஹோண்டா நிறுவனம் வேறு ஒரு முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. அதாவது ஹோண்டா ஆக்டிவா இ மற்றும் ஹோண்டா க்யூசி1 ஆகிய 2 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் என்னென்ன தவறுகள் நடந்தது? என்பதை ஹோண்டா நிறுவனம் ஆராய்ந்து வைத்துள்ளதாக தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த தவறுகளை எல்லாம் திருத்தி கொண்டு, புத்தம் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒன்றை விற்பனைக்கு அறிமுகம் செய்ய, ஹோண்டா நிறுவனம் முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து ஆட்டோகார் இந்தியா தளம் செய்தி வெளியிட்டுள்ளது. ஹோண்டா ஆக்டிவா இ மற்றும் ஹோண்டா க்யூசி1 ஆகியவை சர்வதேச சந்தைகளில் விற்பனையில் உள்ள மாடல்களை அடிப்படையாக கொண்டவை ஆகும்.

இந்திய சந்தைக்காக அவை ரீ-இன்ஜினியரிங் செய்யப்பட்டுள்ளன. ஆனால் ஹோண்டா நிறுவனம் புதிதாக விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ள எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பிரத்யேகமாக இந்திய சந்தைக்கு என உருவாக்கப்படும் என கூறப்படுகிறது. குறிப்பாக இந்த புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு கவர்ச்சிகரமான விலையை (Price) நிர்ணயம் செய்ய வேண்டும் என ஹோண்டா விரும்புவதாக தெரிகிறது.

எனவே ஹோண்டா நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை, நாம் மிகவும் குறைவான விலையில் எதிர்பார்க்கலாம். அத்துடன் சிறப்பான ரேஞ்ச் (Range), பேட்டரியை விரும்பிய இடத்தில் வேகமாக சார்ஜ் ஏற்றும் வசதி மற்றும் பொருட்களை வைத்து கொள்ள ஏதுவாக சிறப்பான இடவசதி போன்ற அம்சங்களையும் நாம் உறுதியாக எதிர்பார்க்க முடியும்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: ஜப்பானை சேர்ந்த ஹோண்டா நிறுவனத்தின் தயாரிப்புகள் உலகத்தரம் வாய்ந்தவையாக இருக்கும். ஆனால் எதிர்பாராதவிதமாக ஹோண்டா ஆக்டிவா இ மற்றும் ஹோண்டா க்யூசி1 ஆகிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனையில் தடுமாறி விட்டன. ஹோண்டா நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர், இந்த தோல்வியை மறக்க செய்யும் வகையில், பிரம்மாண்டமான வெற்றியை பெறும் என நாம் நம்பலாம்.

More from DriveSpark

Article Published On: Sunday, January 4, 2026, 5:39 [IST]
English summary
Honda to launch new affordable electric scooter in india check all details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+