எல்லாரும் எதிர்பார்த்த ஹோண்டாவின் புதிய ஸ்கூட்டர் வெளியாகியுள்ளது

இப்போது இந்தியாவில் ஸ்கூட்டர் தயாரிப்பு நிறுவனங்கள் அதிகம் ஆர்வம் காட்டி வருவது மேக்ஸி-ஸ்கூட்டர்களில் தான். 150 சிசிக்கும் மேலாக, குறிப்பாக 160 சிசி இன்ஜினுடன் கூடிய புதிய மேக்ஸி ஸ்கூட்டர்களை இந்தியாவில் வெளியிடுவதிலேயே, ஹோண்டா, டிவிஎஸ் மற்றும் யமஹா எனப் பல்வேறு நிறுவனங்களும் ஆர்வம் காட்டி வருகின்றன. யமஹா ஏற்கனவே ஒரு மேக்ஸி ஸ்கூட்டரை இந்தியாவில் விற்பனை செய்து வரும் நிலையில், புதிதாக மற்றொரு 155 சிசி ஸ்கூட்டரை வெளியிடவும் திட்டமிட்டு வருகிறது.

இப்போ ஹோண்டாவின் மேட்டருக்கு வருவோம். இந்தியாவில் புதிதாக 160 சிசி ஸ்கூட்டர் ஒன்றை ஹோண்டா வெளியிடவிருப்பது ஏற்கனவே தெரிந்த செய்தி தான். அதேபோலவே இப்போது புதிய 160 சிசி ஸ்கூட்டர் ஒன்றை வெளியிட்டிருக்கிறது. ஆனால் இந்தியாவில் இல்லை, இந்தோனேஷியாவில். தற்போது அந்நிறுவனம் இருக்கும் நிலையில், இந்த ஸ்கூட்டரையும் கூட இந்தியாவில் ஹோண்டா வெளியிடுமோ என எதிர்பார்ப்புகள் எழுந்து வருகிறது.

Honda Vario Evo 160

புதிதாக வேரியோ இவோ 160 (Vario Evo 160) என்ற ஸ்கூட்டரையே தற்போது வெளியிட்டுள்ளது ஹோண்டா. இந்திய மதிப்பிற்கு 1.49 லட்சம் ரூபாய் என்ற விலையில் தொடங்கி இந்த ஸ்கூட்டரை இந்தோனேஷியாவில் விற்பனை செய்யவுள்ளது ஹோண்டா. ஒப்பீட்டிற்கு சொல்ல வேண்டும் என்றால், யமஹாவின் ஏராக்ஸ் 155 ஸ்கூட்டரும் இந்தோனேஷியாவில் ஏராக்ஸ் ஆல்ஃபா என்ற பெயரில் விற்பனையில் இருக்கிறது. அதனை 1.59 லட்சம் என்ற விலையில் தொடங்கி யமஹா விற்பனை செய்து வருகிறது.

இந்தியாவில் ஏராக்ஸ் 155 ஸ்கூட்டரானது 1.43 லட்சம் ரூபாய் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் தொடங்கி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்திய ஏராக்ஸ் 155 ஸ்கூட்டரை விட இந்தோனேஷிய ஏராக்ஸ் ஆல்ஃபா ஸ்கூட்டரானது சற்று மேம்பட்ட வசதிகளைக் கொண்டது. எனவே இந்தியாவில் வெளியாகும் பட்சத்தில் ஏராக்ஸ் 155 ஸ்கூட்டருக்கு இணையான விலையிலேயே ஹோண்டா வேரியனோ இவோ 160 வெளியாகலாம்.

Honda Vario Evo 160

இந்த ஸ்கூட்டர் இந்தியாவில் வெளியாகுமா? வாய்ப்புகள் இருக்கிறது. ஏனெனில் 2022ம் ஆண்டே வேரியோ 160 ஸ்கூட்டரின் டிசைனை இந்தியாவில் காப்புரிமைக்குப் பதிவு செய்திருக்கிறது ஹோண்டா. இந்த வேரியோ இவோ 160, அதனை விட மேம்பட்ட வெர்ஷன் என்றாலும், வேரியோ சீரிஸ் ஸ்கூட்டரை இந்தியாவில் வெளியிடுவது தொடர்பாக ஹோண்டா பரிசீலனை செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

ஏராக்ஸ் 155 ஸ்கூட்டரை விட கொஞ்சமே கொஞ்சம் அதிகமாக, 15 hp பவர் மற்றும் 14 Nm டார்க்கை உற்பத்தி செய்யும் திறன் கொண்ட, 160 சிசி, சிங்கிள் சிலிண்டர், லிக்விட்-கூல்டு இன்ஜினை இந்த ஹோண்டா வேரியயோ இவோ 160 ஸ்கூட்டர் கொண்டிருக்கிறது. அதிகபட்சமாக மணிக்கு 109 கிமீ வேகத்தில் செல்லும் திறனைக் கொண்டிருக்கும் இந்த மேக்ஸி ஸ்கூட்டரில், ABS, காம்பி பிரேக் மற்றும் ஐடிலிங் ஸ்டார்ட்/ ஸ்டாப் உள்ளிட்ட வசதிகளை ஹோண்டா கொடுத்திருக்கிறது.

CBS, CBS நைட்ரோ மற்றும் ABS என மூன்று வேரியன்ட்களாக இந்த மேக்ஸி ஸ்கூட்டரை இந்தோனேஷியாவில் வெளியிட்டுள்ளது ஹோண்டா. இந்தியாவிலும் இந்த வேரியோ இவோ 160 மேக்ஸி ஸ்கூட்டரை வெளியிடும் முடிவை ஹோண்டா எடுக்குமா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: தற்போதைக்கு ADV 160 என்ற மேக்ஸி ஸ்கூட்டரையே இந்தியாவில் வெளியிட ஹோண்டா திட்டமிட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த ADV 160 மேக்ஸி ஸ்கூட்டரும் இந்தோனேஷியாவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆனால் வேரியோ இவோ 160-யை விட மிகவும் அதிகமாக, இந்திய மதிப்பிற்கு 1.97 லட்சம் ரூபாய் என்ற விலையிலேயே ADV 160 இந்தோனேஷியாவில் விற்பனை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் ADV 160-யுடன் ஒப்பிடும் போது வேரியோ இவோ 160 இந்திய சந்தைக்கு ஏற்ற விலை குறைவான மேக்ஸி ஸ்கூட்டராக இருக்கும். மேக்ஸி ஸ்கூட்டர் பிரிவில் அட்வென்சர் ஸ்கூட்டர் வடிவையே ஹோண்டா விரும்புவதாகத் தெரிகிறது. வேரியோ இவோ 160 கொஞ்சம் ஸ்போர்ட்டியான டிசைனைக் கொண்டுள்ளது.

Article Published On: Thursday, June 25, 2026, 13:00 [IST]
English summary
Honda vario evo 160 electric scooter launched in indonesia
மேலும்... #honda motorcycle #scooter #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out