ஆக்டிவா vs ஜூப்பிட்டர்.. ஹோண்டா vs டிவிஎஸ்.. எந்த ஸ்கூட்டரை வாடிக்கையாளர்கள் அதிகம் விரும்புகிறார்கள்?

இந்தியாவில் அதிகளவிலான ஸ்கூட்டர்களை விற்பனை செய்வது ஹோண்டா தான் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். ஆக்டிவா தான் ஹோண்டாவின் மிகப் பெரிய பலம். ஆனால், சத்தமில்லாமல் இன்னொரு நிறுவனம் ஹோண்டாவின் நிழலைப் பின்தொடர்ந்து வந்திருக்கிறது. கடந்த பத்தாண்டுகளில் ஸ்கூட்டர் விற்பனையில் ஹோண்டாவிற்கு அருகில் வந்து விட்டது அந்நிறுவனம். அது வேறெந்த நிறுவனமும் இல்லை, டிவிஸ் மோட்டார்ஸ் தான்.

சரியாக பத்தாண்டுகளுக்கு முன்பு ஸ்கூட்டர் விற்பனையில் ஹோண்டா எந்த இடத்தில் இருந்ததோ அதே இடத்தில் தான் இப்போதும் இருக்கிறது. ஆனால் டிவிஎஸ் இந்த பத்தாண்டுகளில் வேகமாக முன்னேறி, இரண்டு நிறுவனங்களுக்கும் இடையிலான ஸ்கூட்டர் விற்பனை இடைவெளியை வெகுவாகக் குறைத்துக் கொண்டே வந்துவிட்டது.

Honda Activa 125

2017ம் நிதியாண்டில், அதாவது 2016 ஏப்ரல் முதல் 2017 மார்ச் வரையிலான ஒரு ஆண்டில் 31.89 லட்சம் ஸ்கூட்டர்களை இந்தியாவில் விற்பனை செய்துள்ளது ஹோண்டா. அந்த நிதியாண்டில் மொத்தமாகவே 56.04 லட்சம் ஸ்கூட்டர்கள் தான் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. அப்போது இந்தியாவில் விற்பனை செய்யப்பட்ட இரண்டு ஸ்கூட்டர்களில் ஒன்று ஹோண்டாவுடையதாகத் தான் இருந்திருக்கிறது.

அதே 2017ம் நிதியாண்டில் (FY2017) டிவிஎஸ் நிறுவனமானது 8.26 லட்சம் ஸ்கூட்டர்களைத் தான் விற்பனை செய்திருக்கிறது. அதாவது அப்போதைய ஒட்டுமொத்த ஸ்கூட்டர் விற்பனையில் 14 சதவீதம் தான் டிவிஎஸ்ஸின் பங்கு. ஹோண்டாவின் பங்கோ சுமார் 56 சதவீதம். இரண்டு நிறுவனங்களுக்கும் இடையில் 23.62 லட்சம் ஸ்கூட்டர்கள் வித்தியாசம் இருந்தது.

TVS Jupiter 125

அப்படியே ஃபாஸ்ட் ஃபார்வர்டு செய்து 2026ம் நிதியாண்டிற்கு (FY2026) வருவோம், அதாவது 2025 ஏப்ரல் முதல் கடந்த 2026 மார்ச் வகையிலான ஒரு ஆண்டு. இப்போது கிட்டத்தட்ட அதே அளவிற்கு 31.62 லட்சம் ஸ்கூட்டர்களையே இந்தியாவில் விற்பனை செய்துள்ளத ஹோண்டா. ஆனால் ஒட்டுமொத்த ஸ்கூட்டர் விற்பனை அளவு 81.17 லட்சமாக உயர்ந்துவிட்டது. ஸ்கூட்டர் சந்தையில் விற்பனை உயர்ந்த நிலையில், ஹோண்டாவின் விற்பனையில் எந்த மாற்றமும் இல்லை.

ஆனால் டிவிஎஸ்ஸின் விற்பனை அளவு 8 லட்சத்தில் இருந்து 23 லட்சமாக தற்போது உயர்ந்திருக்கிறது. இப்போது ஹோண்டா மற்றும் டிவிஎஸ் ஆகிய இரண்டு நிறுவனங்களுக்கும் இடையிலான வித்தியாசம் 8.59 லட்சம் ஸ்கூட்டர்கள் மட்டுமே. மேலும் ஸ்கூட்டர் விற்பனையில் டிவிஎஸ்ஸின் பங்கு 27 சதவீதமாக உயர்ந்திருக்கும் நிலையில், ஹோண்டாவின் பங்கு 38.95 சதவீதமாகக் குறைந்துள்ளது.

2026 ஏப்ரலில் தொடங்கிய நடப்பு நிதியாண்டில் (FY2027) இந்த இரண்டு நிறுவனங்களும் இடையிலான ஸ்கூட்டர் விற்பனை இடைவெளி இன்னும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏப்ரல் மற்றும் ஆகிய இரண்டு மாதங்களில் மட்டும் ஹோண்டா 5.02 லட்சம் ஸ்கூட்டர்களை விற்பனை செய்திருக்கும் நிலையில், டிவிஎஸ் 4.07 லட்சம் ஸ்கூட்டர்களை விற்பனை செய்துள்ளது. நடப்பு நிதியாண்டின் முடிவில் விற்பனை இடைவெளி 5 லட்சம் முதல் 6 லட்சமாக மட்டுமே இருக்கும்.

கடந்த பத்தாண்டுகளில் ஹோண்டாவிற்கு ஆக்டிவா மட்டுமே நன்றாக விற்பனையாகி கைகொடுத்து வருகிறது. ஆனால் டிவிஎஸ்ஸிற்கு ஜூப்பிட்டரைக் கடந்து, என்டார்க், ஐக்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆகியவையும் கைகொடுக்கத் தொடங்கியிருக்கின்றன. எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் பிரிவில் டிவிஎஸ் வலுவாகக் கால்பதித்திருக்கும் நிலையில், ஹோண்டா இனிமேல் தான் புதிய தயாரிப்புகள் மூலம் வாடிக்கையாளர்களைக் கவர வேண்டிய நிலையில் இருக்கிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஆக்டிவா அளவிற்கு இல்லையென்றாலும், அதனை டிவிஎஸ்ஸின் ஜூப்பிட்டர் ஸ்கூட்டர்கள் விற்பனையில் நெருங்கி வருகின்றன. இந்தியாவிற்கென இன்னும் சில புதிய ஸ்கூட்டர் மாடல்களையும் டிவிஎஸ் திட்டமிட்டிருக்கிறது. அடுத்த சில ஆண்டுகளில் ஸ்கூட்டர் விற்பனையில் ஹோண்டாவை டிவிஎஸ் வீழ்த்தினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. என்ன நடக்கிறது, ஹோண்டா டிவிஎஸ்ஸை எப்படி எதிர்கொள்கிறது என்பதனைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.

Article Published On: Wednesday, June 17, 2026, 18:30 [IST]
English summary
Honda vs tvs activa vs jupiter how tvs closing honda in scooter sales
மேலும்... #honda motorcycle #tvs #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out