ராயல் என்பீல்டு பைக்குகளின் அதே 2 லட்ச ரூபாயில் புதிய டிரையம்ப் பைக்! டிசைன், என்ஜின் எல்லாம் இப்போ வேற மாதிரி
யெஸ்டி ஸ்க்ராம்ப்ளர் (Yezdi Scrambler) பைக் புதிய தோற்றத்தில் ஏப்ரல் 23ஆம் தேதியான நேற்று விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த யெஸ்டி பைக் ஏற்கனவே பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும். தற்போது கூடுதல் அழகாகி உள்ளது. ரூ.2 லட்சத்தில் இருந்து விலையை கொண்டுள்ள புதிய ஸ்க்ராம்ப்ளர் பைக்கின் டிசைன், என்ஜின் மற்றும் வசதிகளில் நிறைய மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.
தோற்றம்: பைக்கை பார்த்தவுடனே முதலாவதாக நம்மால் அடையாளம் காண முடிவது, புதிய ஸ்க்ராம்ப்ளரின் புதிய ரேடியேட்டர் ஆகும். என்ஜினை பாதுகாக்கும் வகையில் வழங்கப்படும் இது முன்பை விட எளிமையான டிசைனில் உள்ளது. இதனை மேலும் ஸ்டைலாக காட்டும் வகையில் பைக்கின் சைடு பேனலில் '69' என்கிற எண் பொறிக்கப்பட்டுள்ளது.

ராலி (Rally) பைக் பந்தயங்களில் யெஸ்டி நிறுவனம் பெற்ற வெற்றிகளை நினைவுக்கூறும் விதமாக இந்த 69 எண் வழங்கப்பட்டுள்ளது. இவற்றுடன், யெஸ்டி ஸ்க்ராம்ப்ளரின் இருக்கை டிசைனில் சில வேலைப்பாடுகள் நடந்துள்ளன. இதன் விளைவாக, தரையில் இருந்து ரைடர் அமரும் இருக்கையின் உயரம் 13மிமீ அதிகரித்து தற்போது 81.3 செ.மீ ஆக உள்ளது.
என்ஜின் & சேசிஸ்: புதிய ஸ்க்ராம்ப்ளரில் அதே 334சிசி லிக்யுடு-கூல்டு, சிங்கிள்-சிலிண்டர் என்ஜினை கொஞ்சம் ட்யூன் செய்து யெஸ்டி வழங்கியுள்ளது. இதனால், இந்த பைக்கில் லிட்டருக்கு 30கிமீ மைலேஜை பெறலாம் என்கிறது அந்த நிறுவனம். இருப்பினும், என்ஜின் அதிகப்பட்சமாக வெளிப்படுத்தக்கூடிய ஆற்றல் அளவுகளில் வித்தியாசம் இல்லை.

புதிய ஸ்க்ராம்ப்ளரின் அதிகப்பட்ச இயக்க ஆற்றல் 29.5 பிஎச்பி மற்றும் 30 என்.எம் டார்க் திறன் ஆகும். இந்த என்ஜின் உடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. என்ஜின் மட்டுமின்றி, பைக்கின் சேசிஸிலும் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. கூடுதல் சவுகரியமான ஹேண்ட்லிங்கிற்காக சேசிஸ் கூடுதல் வலிமையானதாக மாற்றப்பட்டுள்ளது.
புதிய வசதிகள்: புதிய ஸ்க்ராம்ப்ளரில் முக்கியமான அப்கிரேட், அதில் டிராக்ஷன் கண்ட்ரோல் (Traction Control) வழங்கப்பட்டு இருப்பது ஆகும். வெவ்வேறு விதமான பாதைகளில் ஓட்டுவதற்கு ஏற்ப இந்த பைக்கின் டிராக்ஷன் கண்ட்ரோலை சாலை, மழை அல்லது ஆஃப்-ரோடு என மூன்று விதமாக செட் செய்துக் கொள்ள முடியும். இருப்பினும், டிராக்ஷன் கண்ட்ரோலை செட் செய்தவற்கான எல்சிடி இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் திரையில் எந்த அப்டேட்டும் இல்லை.
பைக்கின் ஹேண்டில்பாருக்கு மத்தியில் வழங்கப்படும் இந்த திரையை போன்று, புதிய யெஸ்டி ஸ்க்ராம்ப்ளரில் வழக்கம்போல் ஸ்விட்ச் செய்யக்கூடிய ஏபிஎஸ் (ABS) தான் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல், பைக்கின் சஸ்பென்ஷன் செட்-அப்பிலும் எந்த மாற்றமும் இல்லை. வழக்கம்போல், டெலெஸ்கோபிக் ஃபோர்க்கை முன்பக்கத்திலும், இரு ஷாக் அப்சார்பர்கள் (Shock Absorbers) பின்பக்கத்திலும் சஸ்பென்ஷன் செட்-அப்களாக வழங்கப்பட்டுள்ளன.
முன்பக்க டெலெஸ்கோபிக் ஃபோர்க் 150மிமீ சஸ்பென்ஷன் டிராவல் உடனும், பின்பக்க ஷாக் அப்சார்பர்கள் 200மிமீ டிராவல் உடனும் உள்ளன. இதில் மாற்றம் இல்லாததை போன்று, தரையில் இருந்து பைக்கின் அடிப்பகுதியின் உயரமும் (கிரவுண்ட் கிளியரென்ஸ்) 200மிமீ -இல் மாற்றம் இல்லாமல் உள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: யெஸ்டி ஸ்க்ராம்ப்ளர் பைக் இந்த அப்கிரேடின் மூலமாக முன்பை விட மெருகேறியுள்ளது. இதனால் ராயல் என்ஃபீல்டு பைக்குகளுக்கு விற்பனையில் சரியான போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கிறோம். விலை சற்று அதிகம் என்றாலும், பிரிட்டிஷ் ஸ்டைலில் ஸ்க்ராம்ப்ளர் ரக பைக்கை எதிர்பார்ப்பவர்களுக்கு 2026 யெஸ்டி ஸ்க்ராம்ப்ளர் ஏற்றதாக இருக்கும்.


Click it and Unblock the Notifications