கணவன் மனைவி இருவரும் ஒரே வண்டியில் தினமும் ஆபீஸ் போறீங்களா? உங்களுக்கு சிறந்த 8 டூவீலர்கள் லிஸ்ட்!

தினமும் அலுவலகத்திற்குச் செல்ல கணவன் மனைவி இருவரும் ஒரே இருசக்கர வாகனத்தை பயன்படுத்துகிறீர்களா? குறிப்பாக சென்னை, பெங்களூரு போன்ற நகரங்களில் காலை மற்றும் மாலை நேரங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசலை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இத்தகைய சூழலில் மைலேஜ் மட்டும் பார்த்து வாகனத்தை தேர்வு செய்வதைவிட, இருவர் பயணிக்கும்போது கிடைக்கும் செயல்திறன், எடை, பிரேக்கிங், சஸ்பென்ஷன் மற்றும் இருக்கை வசதியையும் கவனிக்க வேண்டும்.

ஒருவர் மட்டும் தினசரி பயணம் செய்ய 100சிசி பைக் போதுமானதாக இருக்கலாம். ஆனால் கணவன் மனைவி இருவரும் தொடர்ந்து பயணம் செய்யும்போது கூடுதல் எடை காரணமாக எஞ்சினுக்கு அதிக சுமை ஏற்படும். சிக்னலில் இருந்து நகர்வது, மேம்பாலத்தில் செல்வது, நெரிசலில் முந்திச் செல்வது போன்ற நேரங்களில் 125சிசி பைக்குகள் மற்றும் ஸ்கூட்டர்கள் கூடுதல் செயல்திறனை வழங்குகின்றன. அந்த வகையில் தினசரி அலுவலகப் பயணத்திற்கு ஏற்ற நான்கு பைக்குகள் மற்றும் நான்கு ஸ்கூட்டர்களை பார்க்கலாம்.

Best 125CC Two Wheelers For Daily Commute

1. ஹோண்டா ஷைன் 125

கணவன் மனைவி இருவரும் தினசரி அலுவலகம் செல்ல ஹோண்டா ஷைன் 125 சிறந்த சமநிலையான தேர்வாக இருக்கிறது. இதில் உள்ள 123.94சிசி எஞ்சின் அதிகபட்சமாக சுமார் 10.6 எச்பி பவரையும், 11 என்எம் டார்க் திறனையும் வழங்குகிறது. 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் இருப்பதால் நகரப்புற போக்குவரத்தில் இருவர் பயணிக்கும்போதும் தேவையான செயல்திறன் கிடைக்கிறது. குறைவான எடை காரணமாக நெரிசலில் கையாள்வதும் எளிதாக இருக்கும்.

ஷைன் 125 பைக்கின் முக்கிய சிறப்புகளில்அதிர்வுகள் இல்லாமல் ஸ்டார்ட் செய்ய உதவும் ஏசிஜி சிஸ்டம் மற்றும் சிக்னல்களில் தானியங்கி முறையில் அணைந்து அதிக எரிபொருள் சிக்கனத்தை உறுதி செய்யும் ஐட்லிங் ஸ்டார்ட் ஸ்டாப் ஆகியவை உள்ளன. மேலும், 15 வாட் யூஎஸ்பி டைப் சி சார்ஜிங் வசதியும் உள்ளது. சென்னையில் ரூ.82,253 எக்ஸ்ஷோரூம் விலை முதல் கிடைக்கிறது.

Also Read

2. டிவிஎஸ் ரெய்டர் 125

இளம் வயது தம்பதிகளுக்கு அதிக செயல்திறனுடன் கூடிய தினசரி பயன்பாட்டு பைக் வேண்டும் என்றால் டிவிஎஸ் ரெய்டர் 125 சிறப்பான தேர்வாக இருக்கும். இதன் 124.8சிசி மூன்று வால்வு எஞ்சின் சுமார் 11.2 எச்பி பவரையும், 11.2 என்எம் டார்க் திறனையும் வழங்குகிறது. 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் இருப்பதால் இருவர் பயணிக்கும்போது சிக்னலில் இருந்து விரைவாக நகர்வதும், மேம்பாலங்களில் செல்வதும் எளிதாகிறது.

ரெய்டரின் முக்கிய சிறப்புகளில் குறைந்த வேகத்தில் எளிதாக நகர உதவும் ஜிடிடி தொழில்நுட்பம், கூடுதல் டார்க் வழங்கும் ஐகோ அசிஸ்ட் மற்றும் ஐந்து நிலைகளில் மாற்றக்கூடிய பின்புற சஸ்பென்ஷன் அமைப்பு ஆகியவை உள்ளன. ஐகோ அசிஸ்ட் மோடில் செல்லும்போது அதிகபட்சமாக 11.75 என்எம் டார்க் வரை வழங்கும். உயர்தர வகைகளில் தொடுதிரை போன்ற நவீன டிஸ்ப்ளே மற்றும் வழிகாட்டுதல் வசதியும் கிடைக்கிறது. சென்னையில் ரூ.83,410 எக்ஸ்ஷோரூம் விலையிலிருந்து தொடங்குகிறது.

Hero Glamour 125

3. ஹீரோ கிளாமர் 125

ஹீரோ கிளாமர் 125 தினசரி குடும்பப் பயன்பாட்டையும் அலுவலகப் பயணத்தையும் சமாளிக்கக்கூடிய நடைமுறை பைக்காக இருக்கிறது. இதில் உள்ள 124.7சிசி எஞ்சின் அதிகபட்சமாக 10.4 எச்பி பவரையும், 10.4 என்எம் டார்க் திறனையும் வழங்குகிறது. 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் இருப்பதால் இருவர் பயணிக்கும் போது சிக்னலில் இருந்து நகர்வது மற்றும் மேம்பாலங்களில் செல்வது போன்ற சூழல்களில் போதுமான செயல்திறன் கிடைக்கிறது.

கிளாமரின் முக்கிய சிறப்புகளில் ஐ3எஸ் இயந்திர நிறுத்த தொடக்க தொழில்நுட்பம் மற்றும் ஐந்து நிலைகளில் மாற்றக்கூடிய பின்புற சஸ்பென்ஷன் அமைப்பு ஆகியவை உள்ளன. போக்குவரத்து சிக்னலில் நீண்ட நேரம் நிற்கும்போது எஞ்சின் தானாக நிறுத்தப்படுவதால் எரிபொருள் சேமிக்க உதவுகிறது. இருவர் பயணிக்கும் போது பின்புற அதிர்வுத் தடுப்பு அமைப்பை தேவைக்கேற்ப மாற்றிக்கொள்ள முடியும். சென்னையில் எக்ஸ் ஷோரூம் விலை ரூ.86,950 முதல் தொடங்குகிறது.

Also Read

4. பஜாஜ் பல்சர் 125

பொதுவான தினசரி பயன்பாட்டு பைக்கை விட சற்று அதிக செயல்திறன் மற்றும் வலுவான தோற்றம் வேண்டும் என்றால் பஜாஜ் பல்சர் 125 பொருத்தமான தேர்வாக இருக்கும். இதன் 124.4சிசி எஞ்சின் அதிகபட்சமாக 11.6 எச்பி பவரையும், 10.8 என்எம் டார்க் திறனையும் வழங்குகிறது. 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் இருக்கிறது. இந்த பைக் எஞ்சின் இருவர் பயணிக்கும் போதும் நகரப்புற சாலைகளில் தேவையான செயல்திறனை கொடுக்கிறது.

பல்சர் 125ன் முக்கிய சிறப்புகளில் முன்புறத்தில் 240 மிமீ டிஸ்க் பிரேக், முழுமையான மின்னணு திரையுடன் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் மற்றும் யூஎஸ்பி சார்ஜிங் வசதி ஆகியவை குறிப்பிடத்தக்கவை. 15 லிட்டர் எரிபொருள் தொட்டி இருப்பதும் நீண்ட தூர தினசரி பயணங்களில் பயனுள்ளதாக இருக்கும். இருவர் பயணிக்கும்போது இதன் நீளமான அமைப்பும் அதிக எடையும் சாலையில் நிலைத்தன்மையை வழங்குகின்றன. சென்னையில் ரூ.89,910 எக்ஸ்ஷோரூம் விலை முதல் தொடங்குகிறது.

Honda Activa 1125

5. ஹோண்டா ஆக்டிவா 125

கியர் மற்றும் கிளட்சை அடிக்கடி கையாள விரும்பாத கணவன் மனைவிக்கு ஹோண்டா ஆக்டிவா 125 மிகவும் நடைமுறையான தேர்வாக இருக்கும். இதில் உள்ள 123.92சிசி எஞ்சின் அதிகபட்சமாக 8.3 எச்பி பவரையும், 10.5 என்எம் டார்க் திறனையும் வழங்குகிறது. ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இருப்பதால் கடுமையான போக்குவரத்து நெரிசலில் அடிக்கடி கியர் மாற்ற வேண்டிய அவசியம் இல்லை.

ஆக்டிவா 125ன் முக்கிய சிறப்பாக 4.2 இன்ச் கலர் டிஸ்ப்ளே மற்றும் ஹோண்டா ரோடு சின்க் கனெக்ட்டிவிட்டி இணைப்பு வசதி உள்ளன. கைப்பேசியை இணைத்து கொண்டு வழிகாட்டுதல், அழைப்பு மற்றும் செய்தி உள்ளிட்ட பல்வேறு வசதிகளை பெற முடியும். யூஎஸ்பி டைப் சி சார்ஜிங் வசதியும் உள்ளது. குடும்பப் பயன்பாட்டிற்கு ஏற்ற சேமிப்பு இடமும் தினசரி அலுவலகப் பயணத்தில் கூடுதல் வசதியை வழங்குகிறது. சென்னையில் ரூ.93,177 எக்ஸ்ஷோரூம் விலை முதல் கிடைக்கிறது.

Also Read

6. டிவிஎஸ் ஜூபிட்டர் 125

கணவன் மனைவி இருவரும் தினமும் பயன்படுத்தும் ஸ்கூட்டரில் இருக்கை மற்றும் பொருட்களை வைக்கும் இடம் முக்கியம். இந்த விஷயத்தில் டிவிஎஸ் ஜூபிட்டர் 125 கவனம் பெறுகிறது. இதன் 124.8சிசி எஞ்சின் அதிகபட்சமாக சுமார் 8.0 எச்பி பவரையும், 10.5 என்எம் டார்க் திறனையும் வழங்குகிறது. தானியங்கி கியர்பாக்ஸ் அமைப்பு இருப்பதால் நெரிசலில் எளிதாக இயக்க முடிவதுடன், அகலமான இருக்கை இருவர் பயணத்துக்கும் வசதியாக உள்ளது.

ஜூபிட்டர் 125ன் முக்கிய தனிச்சிறப்பாக இதில் இருக்கைக்கு கீழாக 33 லிட்டர் பொருட்கள் வைப்பதற்கான இடவசதி உள்ளது. இரண்டு முழு முக தலைக்கவசங்களை வைத்துக்கொள்ளும் அளவுக்கு இடவசதி இருப்பது குடும்பப் பயன்பாட்டில் பெரிய பலம். உயர்தர வகையில் இணைப்பு வசதியுடன் கூடிய இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், வழிகாட்டுதல் மற்றும் அழைப்பு அறிவிப்புகளை பெறும் வசதிகளும் கிடைக்கின்றன. சென்னையில் ரூ.89,259 எக்ஸ்ஷோரூம் விலையிலிருந்து கிடைக்கிறது.

7. சுஸுகி ஆக்சஸ் 125

சுஸுகி ஆக்சஸ் 125 மென்மையான எஞ்சின் செயல்பாடு மற்றும் நகரப் போக்குவரத்தில் எளிதான கையாளுதலுக்காக கவனம் பெறுகிறது. 124சிசி எஞ்சின் அதிகபட்சமாக சுமார் 8.3 எச்பி பவரையும், 10.2 என்எம் டார்க் திறனையும் வழங்குகிறது. தானியங்கி கியர்பாக்ஸ் இருப்பதால் இருவர் பயணிக்கும் போது நெரிசலான சாலைகளிலும் அடிக்கடி நிறுத்தி இயக்குவது சிரமமாக இருக்காது.

ஆக்சஸ் 125ன் புதிய வகைகளில் இணைப்பு வசதியுடன் கூடிய கலர் டிஸ்ப்ளே முக்கிய சிறப்பாக உள்ளது. இதில் வழிகாட்டுதல், போக்குவரத்து மற்றும் வானிலை தகவல்கள், அழைப்பு மற்றும் செய்தி அறிவிப்புகள் உள்ளிட்ட பல தகவல்களைப் பெற முடியும். மேலும், உயர்தர வகைகளில் ஏபிஎஸ் வசதியும் உள்ளது. சென்னையில் ரூ.86,248 எக்ஸ்ஷோரூம் விலையிலிருந்து கிடைக்கிறது.

8. யமஹா ஃபசினோ 125 எஃப்ஐ ஹைபிரிட்

யமஹா ஃபசினோ 125 எஃப்ஐ ஹைபிரிட் குறைந்த எடையுடன் நகரப் போக்குவரத்தில் எளிதாக கையாளக்கூடிய ஸ்கூட்டராக உள்ளது. இதன் 125சிசி எஞ்சின் அதிகபட்சமாக சுமார் 8.1 ஹெச்பி பவரை வழங்குகிறது. அசிஸ்ட் செயல்பாட்டுடன் 10.3 என்எம் வரை டார்க் கிடைக்கிறது. சுமார் 98 கிலோ எடை மட்டுமே இருப்பதால் நெரிசலில் அடிக்கடி நிறுத்தி இயக்கும்போதும் எளிதாக கட்டுப்படுத்த முடியும்.

ஃபசினோவின் முக்கிய சிறப்புகளில் ஸ்மார்ட் மோட்டார் ஜெனரேட்டர் மற்றும் ஸ்டார்ட் ஸ்டாப் தொழில்நுட்பம் ஆகியவை உள்ளன. சிக்னலில் வாகனம் நிற்கும்போது எஞ்சினை தானாக நிறுத்தி எரிபொருள் பயன்பாட்டை குறைக்க இந்த அமைப்பு உதவுகிறது. இந்த ஸ்கூட்டரில் 21 லிட்டர் கொள்திறனுடன் இருக்கைக்கு அடியில் உள்ள சேமிப்பு இடம் உள்ளதுடன், 780 மிமீ இருக்கை உயரம் மற்றும் கைப்பேசி இணைப்பு வசதி ஆகியவையும் உள்ளன. சென்னையில் ரூ.82,870 எக்ஸ்ஷோரூம் விலை முதல் தொடங்குகிறது.

TVS Jupiter 125

எது உங்களுக்கு சிறந்தது?

கணவன் மனைவி இருவரும் தினமும் அலுவலகம் சென்று வருவதற்கு 100சிசி பைக், ஸ்கூட்டர்களைவிட இந்த 125சிசி மாடல்கள் கூடுதல் பாதுகாப்பை வழங்க உதவும். பல நேரங்களில் செயல்திறன் குறைவான பைக், ஸ்கூட்டர்களை வைத்துக் கொண்டு கணவன், மனைவி செல்லும்போது தடுமாற்றத்தை பார்க்க முடிகிறது. அதற்கு மேற்கண்ட சில முக்கிய மாடல்களை இங்கே தொகுத்து வழங்கி உள்ளோம். ஒவ்வொரு குடும்பத்தினரின் பயன்பாடு, பயண தூரம், இருவரின் எடை, பட்ஜெட் உள்ளிட்டவற்றை வைத்து இந்த தேர்வு மாறுபடலாம்.

பெரும்பாலானோருக்கு சிறந்த தேர்வாக கூற வேண்டும் என்றால், பைக்குகளில் நடுத்தர வயதை எட்டுபவர்களுக்கு ஹோண்டா ஷைன் 125 சிறந்ததாகவும், இளம் தம்பதியருக்கு டிவிஎஸ் ரெய்டர் 125 சிறந்ததாகவும் இருக்கும். ஸ்கூட்டரை பொறுத்தவரையில் ஹோண்டா ஆக்டிவா 125 அல்லது டிவிஎஸ் ஜூபிட்டர் 125 இரண்டில் ஒன்று சிறந்த தேர்வாக இருக்கும். விருப்பத்தின் அடிப்படையில் இந்த தேர்வுகள் மாறுபடலாம். எனவே, மேற்கண்ட வாகனங்களை வாங்குவதற்கு முன்னர் ஒருமுறை டெஸ்ட் டிரைவ் பார்த்து முடிவு செய்வது மிக மிக அவசியம்.

Article Published On: Tuesday, October 6, 2026, 12:18 [IST]
English summary
Husband wife daily office commute best 125cc bikes scooters india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out
X