தனித்துவமான லுக்குக்காகவே இந்த பைக்கை வாங்கலாம்.. என்ன பைக்குனு தெரியுமா?
தனித்துவமான பைக் ஒன்றை வாங்க வேண்டும், ஆனால் அது நம்பகத்தன்மை கொண்டதாகவும் இருக்க வேண்டும். ஒரு புதிய பைக்கை வாங்க முடிவெடுக்கும் போது அனைவருமே இதனை யோசித்திருப்போம். நம்பகத்தன்மை கொண்ட பைக் என்றால் அது சாலையில் பலரும் பயன்படுத்தும் ஒன்றாகவே இருக்கும். தனித்துவமானதாக, நிறைய பேர் வாங்காத பைக்காக இருக்கிறதென்றால் பெரும்பாலான நேரங்களில் அதில் ஏதாவது சிறிய குறை இருக்கும்.
அப்படி எதுவும் இல்லாமல் ஒரு பைக் இருக்கிறதா? நீங்கள் ஏன் ஹஸ்க்வர்னா ஸ்வர்ட்பிலன் 401 (Husqvarna Svartpilen 401) பைக்கை முயற்சி செய்யக்கூடாது. பல ஆண்டுகளாகவே இப்படியொரு பிராண்டின் கீழ் பைக்குகள் விற்பனை செய்யப்பட்டு வருவது நிறைய பேருக்குத் தெரியாது. கடந்த மார்ச் மாதம் வெறும் 13 ஸ்வர்ட்பிலன் 401 பைக்குகளையே இந்தியாவில் விற்பனை செய்துள்ளது ஹஸ்க்வர்னா. இதுவே கடந்தாண்டு மார்ச் மாதம் வெறும் 15 யூனிட்டுகளும், கடந்த பிப்ரவரி மாதம் வெறும் 12 யூனிட்டுகளும் மட்டுமே இந்த பைக் விற்பனையாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலே கூறியது போல மிகவும் குறைவான அளவு வாடிக்கையாளர்களே இந்த பைக்கை வாங்குகின்றனர். இந்தியாவில் கேடிஎம் டீலர்ஷிப்கள் மூலமாகே இந்த பைக்கை பஜாஜ் விற்பனை செய்து வருகிறது. சர்வீஸுக்கும் கேடிஎம் சர்வீஸ் செண்டர்களையே வாடிக்கையாளர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். நம்பகத்தன்மை குறித்த கவலையே வேண்டாம். கேடிஎம் பைக்குகளை நீங்கள் நம்புகிறீர்கள் என்றால், ஹஸ்க்வர்னா பைக்குகளையும் தாராளமாக நம்பலாம். இரண்டிலும் அடிப்படையான அம்சங்கள் மற்றும் பாகங்கள் ஒன்று தான்.
கேடிஎம் டியூக் 390 பைக்கில் பயன்படுத்தப்பட்டிருக்கும் அதே 398.63 சிசி, சிங்கிள் சிலிண்டர், லிக்விட்-கூல்டு இன்ஜினே ஹஸ்க்வர்னா ஸ்வர்ட்பிலன் 401 பைக்கிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இரண்டு பைக்கும் ஒரே பிளாட்ஃபார்மிலேயே தயாரிக்கப்படுகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த இன்ஜினானது 9,000 rpm-ல் 46 hp பவர் மற்றும் 7,000 rpm-ல் 39 Nm டார்க்கை உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டுள்ளது. மேலும், 6 ஸ்பீடு கியர்பாக்ஸுடனும் இணைக்கப்பட்டிருக்கிறது.

இந்த 400 சிசி பைக்கிஸ் ஸ்டீர் ட்ரெல்லிஸ் ஃபிரேம் மற்றும் சப்-ஃப்ரேம் கொண்ட கட்டமைப்பு பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அட்ஜஸ்ட் செய்து கொள்ளும் வகையிலான WP ஏபெக்ஸ் சஸ்பென்ஷன் செட்டப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. ட்ராக்ஷன் கண்ட்ரோல், ரைடு-பை-வயர், க்விக் ஷிப்டர் பிளஸ், சூப்பர்மோட்டோ ABS உள்ளிட்ட மேம்பட்ட எலெக்ட்ரானிக் அம்சங்களை இந்த பைக் கொண்டிருக்கிறது. ப்ளூடூத் கனெக்டிவிட்டி (ஆப்ஷனல்) வசதியுடன் கூடிய 5 இன்ச் TFT டிஸ்பிளேவும் இந்த பைக்கில் கொடுக்கப்பட்டிருக்கிறது.
சில்வர் கிரே என்ற ஒரேயொரு நிறத்தில் மட்டுமே இந்த ஸ்வர்ட்பிலன் 401 பைக் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த பைக்கை ரூ.3 லட்சத்தை ஒட்டிய எக்ஸ்-ஷோரூம் விலையில் வாடிக்கையாளர்கள் வாங்கலாம். சற்று குறைவான விலையில் ஹஸ்க்வர்னா பைக்கை வாங்க விரும்பும் வாடிக்கையாளர்கள் விட்பிலன் 250 (Vitpilen 250) என்ற ஹஸ்க்வர்னாவின் மற்றொரு பைக் மாடலை முயற்சி செய்யலாம். ரூ.2 லட்சத்திற்க சற்று கூடுதலான விலையில் இந்த பைக் மாடல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த ஹஸ்க்வர்னா பைக்குகள் தரமான பெர்ஃபாமன்ஸை வழங்குவதுடன், சாலையில் செல்பவர்களை ஒரு கணம் திரும்பிப் பார்க்க வைக்கும் என்பதும் உறுதி. சிறப்பான பெர்ஃபாமன்ஸ் என்னும் அதிக மைலேஜை எதிர்பார்க்க முடியாது. லிட்டருக்கு 29 கிமீ வரையிலான மைலேஜையே ஸ்வர்ட்பிலன் 401 பைக் வழங்கி வருவதும் குறிப்பிடத்தக்கது. யாரிடமும் இல்லாத, தனித்துவமான டிசைன் கொண்ட பைக்குகள் வேண்டும், பட்ஜெட் பிரச்சினையில்லை என்னும் வாடிக்கையாளர்கள் மட்டும் இந்த ஹஸ்க்வர்னா பிராண்டின் பக்கம் கரை ஒதுங்கலாம். ஐரோப்பிய மாடல் என்பதால் அனைத்துமே காஸ்ட்லி தான்.


Click it and Unblock the Notifications