இன்றைய இளைஞர்களுக்கு இதில் பாதி ஸ்கூட்டர்களின் பெயரே தெரியாது! காலம் கடந்து நிற்கும் 5 ஸ்கூட்டர்ஸ்!

இந்தியர்களின் போக்குவரத்தில், ஸ்கூட்டர்கள் (Scooters) மிக முக்கியமான இடத்தை கடந்த காலங்களில் இருந்தே பிடித்துவந்துள்ளன. 1970, 80களில் கூட கதாநாயகன் ஸ்கூட்டர் ஓட்டியப்படி வருவதை பல சினிமா திரைப்படங்களில் பார்க்க முடியும். அதுவும் இப்போதுள்ள ஸ்கூட்டர்கள் போல் இல்லாமல், அப்போதைய ஸ்கூட்டர்கள் அளவில் நன்கு பெரியதாக இருந்தன. ஆனால் உண்மையில், அதுதான் பல தரப்பட்ட மக்களை கவர்ந்தது.

நன்கு சவுகரியமாக அமர்ந்துக் கொண்டும், காலடியில் அதிக பொருட்களை வைத்து எடுத்துச் செல்வதற்கும் ஸ்கூட்டர்கள் மிகவும் சவுகரியமாக இருப்பதால் அந்த காலத்தில் இருந்து இப்போது வரையில் பலரும் ஸ்கூட்டர்களை பயன்படுத்த விரும்புகிறோம். அவ்வாறு, மக்களின் பேரதரவில் சிறப்பாக விற்பனையாகி, தனித்துவமான ஸ்கூட்டர்களாக அமைந்த ஐந்து ஸ்கூட்டர் மாடல்களை பற்றி தான் இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.

iconic scooters of india

1. ஹோண்டா ஆக்டிவா (Honda Activa): முந்தைய காலங்களில் பல பிரபலமான ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டாலும், இப்போதும் விற்பனையில் இருக்கும் ஆக்டிவா தான் இந்திய மக்கள் அதிகம் விரும்பிய மற்றும் விரும்பும் ஸ்கூட்டர் என சொன்னால் அதில் மாற்றுக் கருத்து இல்லை. முதன்முதலாக 2001ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்ட ஹோண்டா ஆக்டிவா, இந்திய ஸ்கூட்டர் மார்க்கெட்டையே மொத்தமாக தலைகீழாக திருப்பிப் போட்டுள்ளது.

2. பஜாஜ் சேத்தக் (Bajaj Chetak): ஆக்டிவாவின் வருகைக்கு முன்பு வரையில் இந்திய ஸ்கூட்டர் மார்க்கெட்டை கட்டி ஆண்டுவந்த பஜாஜ் ஸ்கூட்டர் இதுவாகும். அந்த அளவிற்கு, பல வருடங்களுக்கு நீடித்து உழைக்கக்கூடிய உலோக உடலமைப்பு, நம்பகமான என்ஜின் மற்றும் அன்றாட நடைமுறை பயன்பாட்டிற்கு ஏற்ற டிசைன் உள்ளிட்டவற்றை சேத்தக் தன்னுள் கொண்டிருந்தது. அதன் காரணமாகவே, 2020இல் அறிமுகப்படுத்திய முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு சேத்தக் பெயரை பஜாஜ் சூட்டியது.

iconic scooters of india

3. லம்ப்ரேட்டா (Lambretta): லம்ப்ரேட்டா என சொன்னால் பலருக்கு தெரியாது; ஏனெனில் விஜய் சூப்பர் என்கிற பெயரில் இந்த ஸ்கூட்டர் பிரபலமாகியது. இத்தாலிய நிறுவனம் ஒன்றிடம் இருந்து உரிமத்தை பெற்று, உ.பி மாநிலத்தின் லக்னோவை சேர்ந்த ஸ்கூட்டர் இந்தியா லிமிடெட் (SIL) இந்த ஸ்கூட்டரை உருவாக்கியது. 1970, 80களில் வட இந்தியாவில் பிரபலமாக இருந்த இந்த ஸ்கூட்டர், 1983 கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியின் வீரர்கள் ஒவ்வொருவருக்கும் பரிசளிக்கப்பட்டது.

4. கைனெட்டிக் ஹோண்டா (Kinetic Honda): ஆக்டிவா போன்ற மாடர்ன் ஸ்கூட்டர்களின் அறிமுகத்திற்கு முன், 1990களில் இந்த ஸ்கூட்டர் பிரபலமாக இருந்தது. ஹோண்டாவின் ஜப்பானிய ஸ்டைலில் உருவாக்கப்பட்ட இது, ஓட்டுனர் கால் மற்றும் பொருட்களை வைப்பதற்கு தட்டையான ஃப்ளோர் போர்டை கொண்டிருந்தது. இதன் பின்னரே இந்தியாவில் ஸ்கூட்டர்களில் தட்டையான ஃப்ளோர் போர்டு ஸ்டாண்டர்ட் அம்சமாக மாறியது.

5. டிவிஎஸ் ஸ்கூட்டி (TVS Scooty): மிகவும் குறைவான எடையினாலும், எளிதாக ஹேண்ட்லிங் செய்யக் கூடியதாகவும் இருந்ததினாலேயே 2000ஆம் காலக்கட்ட துவக்கங்களில் இளம் தலைமுறை மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்ற ஸ்கூட்டர் இதுவாகும். குறிப்பாக, இந்தியாவில் பல பெண்கள் 2-வீலர் ஓட்ட கற்றுக் கொண்டதே டிவிஎஸ் ஸ்கூட்டியில் தான் என சொன்னால் அது மிகையில்லை.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: உலகின் மிக பெரும் 2-வீலர் சந்தையான இந்தியாவில் பைக்குகளுக்கு கிடைத்துவரும் அதே வரவேற்பு ஸ்கூட்டர்களுக்கும் கிடைத்து வருகிறது என கூறினால், அதில் மாற்றுக் கருத்து இல்லை. குறிப்பாக, போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகர்புறங்களில் வசிப்போரின் முதன்மையான சாய்ஸாக ஸ்கூட்டர்கள் விளங்குகின்றன. இன்னும் சொல்லப்போனால், எலெக்ட்ரிக் வாகனங்களில் அதிகமாக விற்பனையாகுவது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் (Electric Scooters) ஆகும். இந்த தொகுப்பில் நாம் பார்த்த ஐந்து ஐகானிக் ஸ்கூட்டர்களில் ஹோண்டா ஆக்டிவா இப்போதும் விற்பனையில் இருப்பது நாம் செய்த பாக்கியம் என்றுதான் சொல்ல வேண்டும்.

More from DriveSpark

Article Published On: Wednesday, March 25, 2026, 7:32 [IST]
English summary
Iconic scooters of india top 5 models that ruled indian roads honda activa to tvs scooty
மேலும்... #scooters #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+