விலையோ கம்மி, பவரோ அதிகம்.. BSA ஸ்கிராம்பிளர் 650 பைக்கில் இத்தனை அம்சங்கள் இருக்கா!

இந்தியாவில் புத்தம் புதிய 650 சிசி பைக்காக BSA ஸ்கிராம்பிளர் 650 பைக்கை சமீபத்தில் வெளியிட்டது கிளாஸிக் லெஜெண்ட்ஸ். ராயல் என்ஃபீல்டின் 650 சிசி பைக்குகளுடன் போட்டியிடும் வகையில் இருக்கும் ஒரே பிராண்டு இந்த BSA தான். இந்த பிராண்டில் ஏற்கனவே கோல்டு ஸ்டார் 650 என்ற பைக் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது புதிதாக ஸ்கிராம்பிளர் 650 பைக்கும் வெளியிடப்பட்டிருக்கிறது.

கோல்டு ஸ்டார் 650 பைக்கின் அடிப்படையிலேயே இந்த ஸ்கிராம்பிளர் 650 பைக்கும் வெளியிடப்பட்டிருக்கிறது. விலையும் மிகவும் அதிகமாக இல்லாமல் வாடிக்கையாளர்கள் வாங்கக்கூடிய விலையிலேயே வெளியாகியுள்ளது. அனைவரும் வாங்கக்கூடிய வகையில் பெரிய சிங்கிள் சிலிண்டர் இன்ஜினைக் கொண்டிருப்பது BSA பைக்குகள் தான். சரி, புதிதாக வெளியாகியிருக்கும் ஸ்கிராம்பிளர் 650 பைக் குறித்து வாடிக்கையாளர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்களை இங்கே நாம் பார்க்கலாம்.

BSA Scrambler 650

என்ன விலையில் வெளியாகியுள்ளது?

எந்தவொரு புதிய பைக் வெளியானாலும் வாடிக்கையாளர்கள் முதலில் கேட்பது விலை என்ன என்பது தான். அதனைக் வைத்து தான் மேற்கொண்டு இந்த பைக் குறித்து விசாரிக்கலாமா வேண்டாமா என்ற முடிவையே எடுக்க முடியும். அந்த வகையில் இந்த ஸ்கிராம்பிளர் 650 பைக் மாடலை ரூ.3.25 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் வெளியிடப்பட்டுள்ளது. இது இதற்கு போட்டியான ராயல் என்ஃபீல்டு பியர் 650 பைக் மாடலை விட ரூ.50,000 குறைவான விலையாகும்.

இன்ஜின் திறன் என்ன?

ஏற்கனவே விற்பனையில் இருக்கும் கோல்டு ஸ்டார் 650 பைக்கில் பயன்படுத்தப்பட்டிருக்கும் அதே 652 சிசி, சிங்கிள் சிலிண்டர், லிக்விட்-கூல்டு இன்ஜின் தான் புதிய ஸ்கிராம்பிளர் 650 பைக்கிலும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த இன்ஜினானது 6,500 rpm-ல் 45 hp பவர் மற்றும் 4,000 rpm-ல் 55 Nm டார்க்கை உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டுள்ளது. இந்த இன்ஜினானது அசிஸ்ட் மற்றும் ஸ்லிப்பர் கிளட்ச் வசதியுடன் கூடிய 6 ஸ்பீடு கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது.

BSA Scrambler 650

ஸ்கிராம்பிளர் 650-க்கும் கோல்டு ஸ்டார் 650-க்கும் இடையேயான வேறுபாடுகள் என்ன?

இரண்டு 650 சிசி பைக்குகளுக்கும் இடையேயான வேறுபாடு பிரதானமாக ஸ்டைலிங் தான். கோல்டு ஸ்டார் 650 க்ரூஸர் வகையைச் சேர்ந்த கிளாஸிக் பைக்காகும். எனவே அதற்கு ஏற்ற வகையிலான ஸ்டைலிங் மற்றும் டிசைனை அது கொண்டிருக்கிறது. ஸ்கிராம்பிளர் 650 பெயரில் உள்ளது போலவே ஸ்கிராம்பிளர் வகை பைக்காகும். எனவே கொஞ்சம் ஸ்போர்ட்டியான டிசைனைக் கொண்டுள்ளது. இதனைத் தவிர்த்து ஸ்கிராம்பிளரின் முன்பக்கம் 1 இன்ச் அதிகமாக 19 இன்ச் வீலும் கொடுக்கப்பட்டுள்ளது.

சீட் உயரம் மற்றும் எடை ஹேண்டில் செய்யும் அளவிற்கு இருக்குமா?

ராயல் என்ஃபீல்டின் 350 சிசி பைக்குகளை விட சற்று அதிகமாக 208 கிலோ எடையைக் கொண்டுள்ளது புதிய ஸ்கிராம்பிளர் 650. சீட் உயரமும் 820மிமீ ஆக உள்ளது. ஸ்கிராம்பிளர் வகை பைக் என்பதால் கடினமான பாதைகளை எளிதாகக் கடக்க அதிக சீட் உயரமும், சற்று கூடுதலான கிரௌண்டு கிளியரன்ஸும் உள்ளது. ஒப்பீட்டளவில் கிளாஸிக் 350 பைக்கை விட 15 மிமீ வரை கூடுதலான சீட் உயரத்தை ஸ்கிராம்பிளர் 650 கொண்டிருக்கிறது.

என்னென்ன நிறங்களில் கிடைக்கிறது?

மூன்று விதமான நிறங்களில் இந்த BSA ஸ்கிராம்பிளர் 650 பைக்கை நாம் வாங்கலாம். ஒன்று தண்டர் கிரே, மற்ற இரண்டு ரேவன் பிளாக் மற்றும் விக்டர் யெல்லோ. இதில் குறைவான விலையைக் கொண்டிருப்பது ரேவன் பிளாக் தான், ரூ.3.25 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையைக் கொண்டுள்ளது. விக்டர் யெல்லோ மற்றும் தண்டர் கிரே ஆகிய நிறங்கள் முறையே ரூ.3.33 லட்சம் மற்றும் ரூ.3.41 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையைக் கொண்டுள்ளன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ராயல் என்ஃபீல்டின் 650 சிசி பைக்குகளுக்குப் பெரிய அளவில் இந்திய சந்தையில் போட்டி இல்லாமல் இருந்து வந்தது. அந்தக் குறையைத் தீர்க்க BSA பைக்குகள் வந்து கொண்டிருக்கின்றன. எனினும் இவை சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் பைக்குகள் தான் என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். ராயல் என்ஃபீல்டின் 650 சிசி பைக்குகளில் பேரலல் ட்வின் சிலிண்டர் இன்ஜின் கொடுக்கப்பட்டிருக்கும். விலை மற்றும் வசதிகளில் சிறப்பான ஒன்றாகவே இந்த BSA பைக்குகள் இருக்கின்றன.

Article Published On: Monday, April 27, 2026, 17:46 [IST]
English summary
Important things to know about bsa scrambler 650 bike
மேலும்... #BSA #bikes #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+