பொங்கல் என்றாலே ஆர்15 பைக் விற்பனை அதிகரிக்கும்... இதில் சலுகையை வேற அறிவிச்சிட்டாங்களா!!

ஜப்பானை சேர்ந்த யமஹா மோட்டார் (Yamaha Motor) நிறுவனத்தின் 70வது ஆண்டு கொண்டாட்டத்தையொட்டி, இந்தியா யமஹா மோட்டார் நிறுவனம் ஆர்15 (R15) சீரிஸ் பைக்குகளுக்கு ரூ.5,000 சிறப்பு விலை தள்ளுபடியை அறிவித்துள்ளது. தென்னிந்தியாவில் யமஹா தயாரிப்புகளுக்கு சிறப்பான வரவேற்பு உள்ளதால், பொங்கல் (Pongal) பண்டிகையையும் டார்க்கெட் செய்து கொண்டுவரப்பட்டுள்ள இந்த சலுகையை பற்றி தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.

கடந்த ஜனவரி 5ஆம் தேதியில் இருந்தே அமலுக்கு வந்துவிட்ட இந்தியா யமஹா மோட்டார் நிறுவனத்தின் இந்தச் சலுகையால், யமஹா ஆர்15 பைக்குகள் இப்போது ரூ.1,50,700 (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) என்கிற ஆரம்ப விலையில் இருந்து கிடைக்கின்றன. இந்த புதிய சலுகையின் மூலம், விலை குறைவான ஆர்15 பைக்கான ஆர்15எஸ் ரூ.1,50,700 விலையில் கிடைக்கிறது.

yamaha 70th anniversary special prices

ஆர்15 வி4 ரக பைக்குகள் ரூ.1.66 லட்சம் முதல் கிடைக்கின்றன. அதேசமயம், உயர்தர ஆர்15எம் வேரியண்ட்டின் விலைகள் ரூ.1.81 லட்சம் விலையில் தொடங்குகின்றன. 'ஐகான் பெர்ஃபார்மென்ஸ்' நிறத்துடன் கூடிய ஆர்15எம் பைக் ரூ.1.91 லட்சம் விலையில் கிடைக்கிறது. ஆர்15எஸ் என்பது சிங்கிள்-பீஸ் சீட் கொண்ட முந்தைய தலைமுறை ஆர்15 வி3 மாடலாகும்.

ஆர்15 வி4 இதற்கு ரூ.15,000 கூடுதல் விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த நான்காம் தலைமுறை ஆர்15 பைக்கில் யமஹா ஆர்7 பைக்கால்-ஈர்க்கப்பட்ட வடிவமைப்பு, மோனோ-புரோஜெக்டர் ஹெட்லைட், USD ஃபோர்க் மற்றும் இரண்டாக பிரிக்கப்பட்ட இருக்கை போன்ற அம்சங்கள் உள்ளன. உயர்தர ஆர்15எம் ஆனது வி4 மாடலை விட ரூ.10,000 விலைமிக்கது ஆகும்.

yamaha 70th anniversary special prices

கடந்த 2025 செப்டம்பர் மாதத்தில் மத்திய அரசாங்கத்தின் ஜிஎஸ்டி 2.0 (GST 2.0) அமலுக்கு வந்த பிறகு, 350சிசி-க்குள் உள்ள பைக்குகளுக்கான வரிகள் குறைந்த காரணத்தால், யமஹா நிறுவனம் ஆர்15 பைக்குகளின் விலையை ஏற்கெனவே ரூ.17,581 வரை குறைத்திருந்தது. அப்போது, ஆர்15எம் 'ஐகான் பெர்ஃபார்மென்ஸ்' பைக்கின் விலை ரூ.2.12 லட்சத்தில் இருந்து ரூ.1.94 லட்சமாகக் குறைந்தது.

இந்தியாவின் எண்ட்ரி-லெவல் செயல்திறன்மிக்க மோட்டார்சைக்கிளாக விளக்கும் யமஹா ஆர்15 அதன் பந்தயத்திற்கான வடிவமைப்பு, நவீன தொழில்நுட்பம், அன்றாடப் பயன்பாட்டிற்கு ஏற்ற சவுகரியத்தால் இந்திய இளைஞர்களிடையே பெரும் அங்கீகாரத்தையும் வரவேற்பையும் பெற்று வருகிறது. 10 இலட்சத்துக்கும் அதிகமான யூனிட்கள் இந்தியாவில் தயாரிக்கப்பட்டு, யமஹாவின் உற்பத்தித் திறனையும், இந்திய மோட்டார் சைக்கிள் கலாச்சாரத்துடனான அதன் ஆழமான பிணைப்பையும் ஆர்15 எடுத்துக்காட்டுகிறது.

இதற்கேற்ப, யமஹாவின் மேம்பட்ட 155சிசி லிக்யுடு-கூல்டு, டியாசில் (DiASil) சிலிண்டர் தொழில்நுட்பம் கொண்ட என்ஜினை ஆர்15 பைக்குகளில் யமஹா வழங்குகிறது. அத்துடன், புகழ்பெற்ற டெல்டா பாக்ஸ் ஃப்ரேம் (Deltabox Frame)-இல் ஆர்15 பைக்குகள் உருவாக்கப்படுவதால், அவற்றின் செயல்திறன் மற்றும் ஹேண்ட்லிங்கில் புதிய தரநிலைகளை அமைத்துள்ளது.

டிராக்‌ஷன் கண்ட்ரோல் சிஸ்டம் (TCS), அசிஸ்ட் & ஸ்லிப்பர் கிளட்ச் உள்பட, குறிப்பிட்ட ஆர்15 மாடல்களில் குயிக் ஷிஃப்டர், USD முன்பக்க ஃபோர்க்குகள், லிங்க்டு-டைப் மோனோக்ராஸ் சஸ்பென்ஷன் எனப் பல மேம்பட்ட அம்சங்களுடன் ஆர்15 பைக்குகள் வருகின்றன. இதன் ரேஸ் டிராக்கிற்கு உரிய வடிவமைப்பு, தனித்துவமான ரேசிங் DNA, யமஹா ஆர்15 சீரிஸை இந்தியாவில் மிகவும் விருப்பமான, செயல்திறன்மிக்க மோட்டார்சைக்கிள்களாகத் திகழச் செய்கின்றன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஏற்கனவே கூறியதுபோல், இந்தியாவின் விலை குறைவான ஸ்போர்ட்ஸ் ரக பைக்காக இருப்பதினாலேயே ஆர்15 பைக்குகளுக்கு நாடு முழுவதுமே வரவேற்பு உள்ளது. இந்த பைக்கை வாங்க முடியாமல் ஏக்கத்துடன் பார்ப்பவர்கள் தான் அதிகமாக உள்ளதால், ஆர்15 பைக்குகள் விற்பனை பெரிய அளவிற்கு இல்லாமல் உள்ளது. இருப்பினும், தற்போதைய சலுகையின் மூலமாக, யமஹாவின் புகழ்பெற்ற இந்த ஸ்போர்ட்ஸ் பைக்குகளை இந்திய பைக் ஆர்வலர்கள் எளிதாக வாங்குவதற்கான உறுதிப்பாடு மீண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

More from DriveSpark

Article Published On: Tuesday, January 6, 2026, 14:54 [IST]
English summary
India yamaha motor announces 70th anniversary special prices of r15 motorcycles
மேலும்... #yamaha #r15 #Pongal 2026 #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+