ராயல் என்ஃபீல்டு கம்பெனியை மட்டும்தான் நம்மில் நிறைய பேருக்கு தெரியும்! ஜிஎஸ்டி சலுகை உடன் வாங்க ஏற்ற 5 பைக்ஸ்

இந்தியாவில் பழமையான தோற்றம் கொண்ட ரெட்ரோ (Retro) ஸ்டைல் பைக்குகளுக்கு எப்போதுமே நல்ல வரவேற்பு இருந்துள்ளது. இதனை நன்கு பயன்படுத்திக் கொண்டுள்ள பைக் நிறுவனம் என்றால், அது ராயல் என்ஃபீல்டு (Royal Enfield) என்றுதான் சொல்ல வேண்டும். இன்னும் சொல்லப்போனால், ரெட்ரோ பைக்குகள் என்றாலே இப்படிதான் இருக்கும் என்று ராயல் என்ஃபீல்டு நிறுவனம் தான் இந்தியாவில் இலக்கணம் எழுதியது.

அதன் தொடர்ச்சியாகவே இன்றைய மாடர்ன் காலக்கட்டத்திலும் நிறைய பைக் நிறுவனங்கள் ரெட்ரோ-ஸ்டைல் பைக்குகளை விற்பனை செய்கின்றன. குறிப்பாக, மத்திய அரசாங்கத்தின் ஜிஎஸ்டி (GST) குறைப்பிற்கு பிறகு 350சிசி என்ஜின் உடன் பல புதிய பைக்குகள் கிடைக்க ஆரம்பித்துள்ளன. அவ்வாறு, இந்தியாவில் ரெட்ரோ-ஸ்டைல் பைக்குகளை விற்பனை செய்யும் பைக் நிறுவனங்களை பற்றியும், அவற்றின் 350சிசி பைக்குகளை பற்றியும் இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

performance-oriented 350cc retro-style bikes

ராயல் என்ஃபீல்டின் 350சிசி பைக்குகள்: சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் 350சிசி பைக்குகள் அவற்றின் சிறந்த என்ஜினீயரிங் மற்றும் சவுகரியமான ரைடிங் பொசிஷனுக்காக பாராட்டப்படுகின்றன. ராயல் என்ஃபீல்டின் 350சிசி பைக்குகள் வரிசையில் தற்சமயம் ஹண்டர் 350 (Hunter 350), புல்லட் 350 (Bullet 350), கிளாசிக் 350 (Classic 350), கோன் கிளாசிக் 350 (Goan Classic 350) மற்றும் மீட்டியோர் 350 (Meteor 350) உள்ளிட்டவை அடங்குகின்றன.

இவற்றின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் (Ex-Showroom Prices) தற்சமயம் குறைவாக ரூ.1.37 லட்சத்தில் இருந்து துவங்குகின்றன. இவை அனைத்திலும் ஒரே மாதிரியான 349.34சிசி சிங்கிள்-சிலிண்டர் ஜே-சீரிஸ் என்ஜின் பொருத்தப்படுகிறது. அதிகப்பட்சமாக 20.2 பிஎச்பி மற்றும் 27 என்.எம் டார்க் திறனை வழங்கக்கூடிய இந்த என்ஜின் உடன் 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது.

performance-oriented 350cc retro-style bikes

ஹோண்டாவின் சிபி350 சீரிஸ் பைக்குகள் (Honda's 350cc Series Bikes): ஹோண்டா மோட்டார்சைக்கிள் & ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் அதன் 350சிசி பைக்குகளான சிபி350 சீரிஸ் பைக்குகளை அதன் பிரத்யேகமான பிக்விங் (BigWing) ஷோரூம்கள் வாயிலாக விற்பனை செய்கிறது. 348.5சிசி சிங்கிள்-சிலிண்டர் ஏர்-கூல்டு என்ஜின் உடன் உருவாக்கப்படும் இந்த ஹோண்டா பைக்குகளின் விலைகள் ரூ.1.97 லட்சத்தில் இருந்து துவங்குகின்றன.

ஜாவா 42 (Jawa 42): பெயரில் '42' என கொண்டிருந்தாலும் உண்மையில் இது 300சிசி பைக்குகள் ஆகும். ரெட்ரோ தோற்றத்தில் மிகவும் செயல்படுதிறன் மிக்கதாக விளங்கும் ஜாவா 42-இல் பல விதமான வேரியண்ட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. 294.7சிசி சிங்கிள்-சிலிண்டர் லிக்யுடு-கூல்டு என்ஜின் உடன் உருவாக்கப்படும் இந்த ஜாவா பைக்குகளின் விலைகள் ரூ.1.84 லட்சத்தில் இருந்து துவங்குகின்றன.

யெஸ்டி ரோட்ஸ்டர் (Yezdi Roadster): இந்த தொகுப்பில் நாம் பார்க்கும் பைக்குகளிலேயே மிகவும் பவர்ஃபுல்லான இரண்டாவது மோட்டார்சைக்கிள் இதுவாகும். இந்த பைக்கில் பொருத்தப்படும் 334சிசி ஆல்பா2 லிக்யுடு-கூல்டு என்ஜின் ஆனது அதிகப்பட்சமாக 29.1 பிஎஸ் மற்றும் 29.63 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக் கூடியதாக உள்ளது. இந்த என்ஜின் உடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது.

டிரையம்ப்பின் 400 சீரிஸ் பைக்குகள் (Triumph's 400 Series Bikes): இந்தியாவிலேயே தற்போதைக்கு பவர்ஃபுல்லான 350சிசி ரெட்ரோ-ஸ்டைல் பைக்குகளாக டிரையம்ப்பின் 400 சீரிஸ் பைக்குகள் விளங்குகின்றன. 400 சீரிஸ் பைக்குகள் என கூறப்பட்டாலும், உண்மையில் இவற்றில் 349சிசி சிங்கிள்-சிலிண்டர் லிக்யுடு-கூல்டு என்ஜின் பொருத்தப்படுகிறது. இவற்றின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் குறைவாக ரூ.1.95 லட்சத்தில் இருந்து துவங்குகின்றன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ரெட்ரோ-ஸ்டைலில் ஒரு பைக்கை வாங்க வேண்டும் என்கிற ஆசை நம்மில் பலருக்கு உள்ளது. ஆனால், நம்மில் நிறைய பேர் ராயல் என்ஃபீல்டு பைக்குகள் பக்கமே செல்கிறோம். ராயல் என்ஃபீல்டின் 350சிசி ரெட்ரோ-ஸ்டைல் பைக்குகள் சிறந்தவை தான்; அதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், அதேநேரம் அதற்கு இணையாக செயல்திறன்மிக்க மற்றும் ஸ்டைலிஷான பைக்குகளும் மார்க்கெட்டில் உள்ளன என்பதை இந்த தொகுப்பின் மூலமாக பார்த்துள்ளோம்.

More from DriveSpark

Article Published On: Saturday, April 18, 2026, 9:12 [IST]
English summary
Indias most performance oriented 350cc retro style bikes royal enfield to triumph motorcycles
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+