இந்தியா முழுவதும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்ட சர்வதேச ஜாவா யெஸ்டி தினம்
சர்வதேச ஜாவா யெஸ்டி தினம் நேற்று (ஜூலை 12) இந்தியாவில் கொண்டாடப்பட்டது. 24வது ஆண்டாக இந்த தினம் நேற்று கொண்டாடப்பட்டிருக்கிறது. இந்தியா முழுவதும் இருக்கும்.. இல்லை இல்லை, உலகம் முழுவதுதிலும் இருக்கும் ஜாவா மற்றும் யெஸ்டி (Jawa and Yezdi) பைக் உரிமையாளர்கள் மற்றும் ஆர்வலர்கள் ஒன்று திரண்டு இந்த தினத்தை மறக்க முடியாத ஒன்றாக மாற்றியிருக்கிறார்கள்.
வழக்கமாக இப்படியான சிறப்பு தினங்கள், அந்தந்த நிறுவனங்களினால் அங்கீகரிக்கப்பட்ட கொண்டாட்டமாக இருக்கும். ஆனால் இந்த ஜாவா யெஸ்டி தினத்திற்கு அது பொருந்ததாது. ஆம், இது ஜாவா யெஸ்டி பைக் உரிமையாளர்களால் தொடங்கப்பட்ட ஒரு கொண்டாட்டம் என்பது தான் இதன் சிறப்பம்சமே. 24 ஆண்டுகளுக்கு முன்னர் ஜாவா மற்றும் யெஸ்டி பைக் வைத்திருக்கும் ஒரு சிறிய குழுவால் தொடங்கப்பட்டது இன்று சர்வதேச அளவில் கொண்டாடப்படும் ஒரு தினமாக இது மாறியிருக்கிறது.

ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதத்தின் இரண்டாவது ஞாயிற்றுக் கிழமை சர்வதேச ஜாவா யெஸ்டி தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டும் ஜூலை மாதத்தின் இரண்டாவது ஞாயிற்றுக் கிழமையான ஜூலை 12ம் தேதியன்று வெகு விமரிசையாக இந்த நாள் கொண்டாடப்பட்டது. இந்தா முழுவதும் 150-க்கும் மேற்பட்ட நகரங்களில் 7,500-க்கும் மேற்பட்ட ஜாவா மற்றும் யெஸ்டி பைக் உரிமையாளர்கள் கலந்து கொண்டு இதனை ஒரு பிரம்மாண்ட திருவிழாவாக மாற்றியிருக்கின்றனர்.
இந்தியா மட்டுமின்றி சர்வதேச அளவில் 11 நகங்களில் அங்கங்கே இருக்கும் ஜாவா யெஸ்டி பைக் உரிமையாளர்கள் ஒன்று சேர்ந்து இதனை இன்னும் சிறப்பு மிக்க ஒன்றாக மாற்றியுள்ளனர். இந்தியாவில் 40-க்கும் மேற்பட்ட ஜாவா யெஸ்டி மோட்டார்பைக் கிளப்புகள் இணைந்து நேற்றைய தினத்தை ஒருங்கிணைத்திருந்தனர். இத்துடன் ஜாவா மற்றும் யெஸ்டி டீலர்ஷிப்களும் இணைந்து கொள்ள தினம் களைகட்டியது.

பெங்களூருவில் நடைபெற்ற விழாவில் சுமார் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று இதனை ஒரு மெகா திருவிழாவாக மாற்றினர். தற்போது விற்பனையில் இருக்கும் ஜாவா மற்றும் யெஸ்டி பைக்குகளுடன் சேர்ந்து, விண்டேஜ் பைக்குகளும் வரிசையில் நிற்க பார்க்கவே கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. பெங்ளூரு ஜாவா யெஸ்டி மோட்டார்சைக்கிள் கிளப்பே இதனை ஒருங்கிணைத்திருந்தது.
இந்தக் கொண்டாட்டம் குறித்து கிளாஸிக் லெஜெண்ட் நிறுவனத்தின் துணை நிறுவனரான அனுபம் தாரேஜா தன்னுடைய கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார். 24 ஆண்டுகளுக்கு முன்னதாக ஜாவா யெஸ்டி பைக் உரிமையாளர்கள் தங்களுடைய பைக்கின் மீதான காதலை வெளிப்படுத்தும் வகையில் தொடங்கப்பட்ட சிறிய நிகழ்வு இன்று இவ்வளவு பெரிய கொண்டாட்டமாக மாறியிருக்கிறது. என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த தினம், இந்தக் கொண்டாட்டம் உண்மையிலேயே ஜாவா மற்றும் யெஸ்டி பைக் ரைடர்களுக்கு சொந்தமானது. இது நீண்ட காலமாக இருக்கும் பாரம்பரியத்தை, மரபை எடுத்துக் கூறும் விதமாக இருக்கிறது. பைக்குகளுடன், நட்பு, சமூகம் மற்றும் நினைவுகளைக் கொண்டாடும் நிகழ்வாக இது இருக்கிறது. இந்த நிகழ்வின் ஒரு அங்கமாக இருப்பதை நினைத்துப் பெருமையாக உள்ளது எனவும் அவர தெரிவித்துள்ளார்.
மஹிந்திரா குழுமத்தின் ஒரு அங்கமாக கிளாஸிக் லெஜெண்ட்ஸ் (Classic Legends) செயல்பட்டு வருகிறது. ஜாவா மற்றும் யெஸ்டி ஆகிய பிராண்டுகளுக்கு மீண்டும் உயிர் கொடுத்த பெருமை கிளாஸிக் லெஜெண்ட்ஸையே சாரும். ஜாவா மற்றும் யெஸ்டி பிராண்டுகள் மட்டுமல்லாது, BSA பிராண்டு பைக்குகளையும் இந்தியாவில் கிளாஸிக் லெஜெண்ட்ஸ் நிறுவனமே தயாரித்து விற்பனை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications