இந்தியாவில் ஹீரோ வெளியிடும் முதல் எலெக்ட்ரிக் பைக் இது தானா?

இந்தியாவில் புதிய எலெக்ட்ரிக் பைக்குகளை வெளியிட அமெரிக்காவைச் சேர்ந்த ஸீரோ (Zero) என்ற நிறுவனத்துடன் இந்தியாவைச் சேர்ந்த ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் இணைந்து வேலை செய்து வருவது நமக்குத் தெரிந்த விஷயம் தான். இந்த நிலையில் ஸீரோ நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் பைக்கின் டிசைன் ஒன்று இணையத்தில் கசிந்து பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

ஸீரோ நிறுவனம் லொம்பிகோ (Lompico) என்ற எலெக்ட்ரிக் பைக்கை உருவாக்கி வரும் நிலையில், அதன் டிசைனே தற்போது இணையத்தில் கசிந்திருக்கிறது. இந்த டிசைனைப் பார்க்கும் போது நிறைய அம்சங்கள் விடா VxZ கான்செப்ட் பைக்கில் இருந்ததைப் போலவே இருக்கிறது. இதனைக் கொண்டு சில முடிவுகளுக்கு நம்மால் வர முடிகிறது.

Zero Lompico

விடா VxZ கான்செப்ட் பைக்கின் பிளாட்ஃபார்ம் மற்றும் அடிப்படைக் கட்டமைப்புகளே இந்த ,ஸீரோ லொம்பிகோ பைக்கிற்கும் பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும். இதனைல் பேட்டரி, எலெக்ட்ரிக் மோட்டார் உள்ளிட்ட அம்சங்களும் இரண்டு பைக்குகளிலும் ஒன்றாகவே இருக்கும் எனவும் நாம் எதிர்பார்க்கலாம். VxZ பைக்கை இந்தியாவிற்காகவே ஹீரோ நிறுவனம் உருவாக்கி வருகிறது. எனவே இந்த ஸீரோ லொம்பிகோ பைக்கும் இந்தியாவில் விற்பனை செய்யப்படுவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது.

லொம்பிகோ மட்டுமின்றி ஸீரோ நிறுவனத்தின் வேறு சில பெர்ஃபாமன்ஸ் எலெக்ட்ரிக் பைக்குகளையும் கூட இந்தியாவில் நாம் எதிர்பார்க்கலாம். ஹார்லி டேவிட்சன் நிறுவனத்துடன் எப்படி கூட்டணி அமைத்து அதன் பைக்குகளையும் ஹீரோ இந்தியாவில் தயாரிக்கிறதோ, அதேபோல் ஸீரோ எலெக்ட்ரிக் பைக்குகளும் இந்தியாவில் ஹீரோவினால் தயாரிக்கப்பட வாய்ப்புகள் இருக்கின்றன.

Zero Lompico Design

விடா VxZ மற்றும் ஸீரோ லொம்பிகோ ஆகிய இரண்டு பைக்குகளிலும் அடிப்படையான கட்டமைப்பு முதல், தொழில்நுட்ப அம்சங்கள் வரை அனைத்தும் ஒன்றாகவே இருக்கலாம் எனத் தெரிகிறது. டிசைன் அடிப்படையில் மட்டும் இரண்டும் வெவ்வேறு பைக்குகளாக இருக்கும். VxZ-ஐ சற்று விலை குறைவான எலெக்ட்ரிக் பைக்காகவும், லொம்பிகோவை சற்று ப்ரீமியமான ஒன்றாகவும் அந்நிறுவனங்கள் விற்பனைக்குக் கொண்டு வராலம்.

VxZ-ன் அம்சங்கள் லொம்பிகோவில் பயன்படுத்தப்பட்டிருக்கிறதே தவிர, அது இந்தியவில் வெளியிடப்படுவது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் ஏதும் இதுவரை இல்லை. மேலும், இந்த பைக்கின் டிசைனை இந்தியாவில் ஸீரோ அல்லது ஹீரோ பேட்டன்ட் கூட செய்யவில்லை. எனவே இந்த பைக் இந்தியாவில் வெளியிடப்படலாம் என்பது தற்போது அனுமானம் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் ஒன்று, VxZ மற்றும் லொம்பிகோ ஆகிய இரண்டுமே 40 hp பவரை உற்பத்தி செய்யும் திறன் கொண்ட எலெக்ட்ரிக் மோட்டார் செட்டப் மற்றும் 8.8 kWh பேட்டரி பேக்குகளுடன் பெர்ஃபாமன்ஸை மையப்படுத்திய எலெக்ட்ரிக் பைக்குகளாகவே இருக்கும் என்பது மட்டும் உறுதி. இரண்டு பைக்குகளையும் ஹீரோ மற்றும் ஸீரோ ஆகிய இரண்டு நிறுவனங்களும் கூட்டணி அமைத்தே உருவாக்கி வருகின்றன. இரண்டுமே இந்தியாவில் ஹீரோவால் தயாரிக்கப்படுவதற்கு நிறையவே வாய்ப்புகள் இருக்கின்றன.

தற்போது ப்ரீமியமான எலெக்ட்ரிக் பைக்குகளை மட்டுமே ஸீரோ நிறுவனம் அமெரிக்காவில் விற்பனை செய்து வருகிறது. எனவே பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய விலை குறைவான எலெக்ட்ரிக் பைக்காகக் கூட இந்த லொம்பிகோவை ஸீரோ உருவாக்கி வரலாம். இரண்டு நிறுவனங்களும் என்ன திட்டமிட்டு வருகின்றன என்பது விரைவில் தெரியவரும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: பார்க்கும் போதே மிகவும் அக்ரஸிவ்வான டிசைனைக் கொண்டதாக இருக்கிறது லொம்பிகோ. எனவே இது தயாரிப்பு நிலை வடிவமாக இருப்பதற்கா சாத்தியக்கூறுகள் குறைவுதான். கான்செப்ட் வடிவமாக இருப்பதற்கே அதிக வாயப்புகள் இருக்கிறது. தயாரிப்பு நிலை வடிவமானது இதனை விட இன்னும் கொஞ்சம் சிம்பிளான டிசைனைக் கொண்டதாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இந்தியாவில் அதிகம் எதிர்பார்க்கப்படுவது விடா VxZ எலெக்ட்ரிக் பைக் தான்.

Article Published On: Thursday, June 4, 2026, 19:05 [IST]
English summary
Is this the first hero electric bike to be launched in india through vida
மேலும்... #hero motocorp #electric bike #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out