இந்தியாவில் யமஹா வெளியிடும் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இதுவா

EC-06 என்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டரையே இந்தியாவில் தங்களது முதல் எலெக்ட்ரிக் வாகனமாக வெளியிட்டது யமஹா (Yamaha). ஏற்கனவே இந்தியாவில் விற்பனையில் இருக்கும் இன்டீ (Indie) என்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் அடிப்படையில் இந்த EC-06 உருவாக்கப்பட்டது. இன்டீ எலெக்ட்ரிக் ஸ்கூட்டரானது, பெங்களூருவைச் சேர்ந்த ரிவர் மொபிலிட்டி என்ற எலெக்ட்ரிக் வாகன ஸ்டார்ட்-அப் நிறுவனத்தினுடையது.

இந்த ஸ்டார்ட்-அப் நிறுவனத்தின் யமஹா முதலீடு செய்துள்ளது. அதனாலேயே அந்த நிறுவனத்தின் ஸ்கூட்டரை அடிப்படையாகக் கொண்டு புதிய ஸ்கூட்டர், யமஹாவின் முதல் எலெக்ட்ரிக் தயாரிப்பாக இந்தியாவில் வெளியிட்டப்பட்டது. EC-06 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரையும், யமஹாவிற்காக ரிவர் மொபிலிட்டி நிறுவனமே தயாரித்துக் கொடுப்பது குறிப்பிடத்தக்கது.

Yamaha Neo s EV

இந்தியாவில் ஏராக்ஸ் என்ற எரிபொருள் ஸ்கூட்டர் மாடலையும் யமஹா விற்பனை செய்து வருகிறது. இந்த ஏராக்ஸை அடிப்படையாகக் கொண்ட புதிய எலெகட்ரிக் ஸ்கூட்டர் மாடல் ஒன்றையும் அந்நிறுவனம் உருவாக்கி வருகிறது. 'ஏராக்ஸ் E' எனப் பெயரிடப்பட்டிருக்கும் இந்த மேக்ஸி எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை ஏற்கனவே யமஹா நிறுவனம் காட்சிப்படுத்தியிருக்கிறது. விரைவில் இந்த மேக்ஸி எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் வெளியீடும் இந்தியாவில் எதிர்பார்க்கப்படுகிறது.

இவற்றைத் தவிர்த்து சொந்தமாக குறைவான விலையில் விற்பனை செய்யப்படக்கூடிய புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒன்றையும் யமஹா உருவாக்கி வருவதாக முன்பே தகவல்கள் வெளியாகியிருந்தன. இதனை யமஹா நிறுவனமே முழுமையாக உருவாக்கி வருகிறது. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் எப்படி இருக்கும் என்பது குறித்த தகவல்கள் ஏதும் இப்போது இல்லை. ஆனால் வெளிநாடுகளில் அந்நிறுவனம் விற்பனை செய்து வரும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் அம்சங்கள் புதிய ஸ்கூட்டரில் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Yamaha Neo s electric scooter

இந்த நேரத்தில் தான் வெளிநாடுகளில் என்னென்ன எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை எல்லாம் யமஹா விற்பனை செய்து வருகிறது என்று அலசினோம். நியோஸ் (Neo's) என்ற கிளாஸியான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல் ஒன்றை ஐரோப்பாவிலும், பிரேசில் உள்ளிட்ட நாடுகளிலும் யமஹா விற்பனை செய்து வருகிறது. மிகவும் கிளாஸியான டிசைனுடன், ஸ்டைலாக இருக்கிறது இந்த நியோஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்.

இதன் டிசைன் மற்றும் அம்சங்கள் எல்லாம் சிறப்பாகவே இருக்கின்றன. ஸ்டாண்டர்டு மற்றும் எக்கோ என இரண்டு ரைடிங் மோடுகளைக் கொண்டுள்ளது. இரண்டு ரிமூவபிள் பேட்டரி செட்டப்பை இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் யமஹா கொடுத்துள்ளது. ஒரு பேட்டரியை வைத்தும் இதனை இயக்கலாம், இரண்டு பேட்டரிக்களை பொருத்தியும் இயக்கலாம். அது நமக்கு பூட் ஸ்பேஸ் எவ்வளவு வேண்டும் என்பதைப் பொறுத்து முடிவு செய்து கொள்ளலாம்.

இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் 3.1 hp பவர் மற்றும் 135.3 Nm டார்க்கை உற்பத்தி செய்யும் திறன் கொண்ட எலெக்ட்ரிக் மோட்டார் செட்டப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. முன்பக்க வீலில் டிஸ்க் பிரேக்கும், பின்பக்கம் டிரம் பிரேக்கும் கொடுக்கப்பட்டிருக்கிறது. சஸ்பென்ஷனுக்காக முன்பக்கம் டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் பின்பக்கம் மோட்டார் பேலன்ஸ் செட்டப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன.

இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் இருக்கும் ஒரேயொரு பிரச்சினை மிகவும் குறைவான ரேஞ்சு. ஒரே ஒரு பேட்டரியை மட்டும் பொருத்தி இந்த ஸ்கூட்டரை ஓட்டினால் 39 கிமீ வரை மட்டுமே செல்ல முடியும். இரண்டு பேட்டரிக்களைக் கொண்டு 71 கிமீ வரை செல்லலாம் என யமஹா குறிப்பிட்டுள்ளது. இது சான்றளிக்கப்பட்ட ரேஞ்சு தான். தினசரிப் பயன்பாட்டில் இதனை விடக் குறைவான ரேஞ்சே கிடைக்கும் எனத் தெரிகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: டிசைன் மற்றும் வசதிகள் அடிப்படையில் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை யமஹா இந்தியாவில் வெளியிட்டால் சிறப்பாக இருக்கும் என நினைத்தோம். ஆனால் இவ்வளவு குறைவான ரேஞ்சைக் கொண்ட எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்திய சந்தையில் சில நாட்கள் கூட தாக்குப்பிடிக்க முடியாது. குறைவான விலை, அதிக ரேஞ்சு, நல்ல வசதிகள் என்ற காம்போவையே இந்திய வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கிறார்கள். யமஹா இந்த தேவையை எப்படி பூர்த்தி செய்கிறது எனப் பார்க்கலாம்.

Article Published On: Friday, May 8, 2026, 21:10 [IST]
English summary
Is this the yamaha electric scooter that is going to launch in india check all details here
மேலும்... #yamaha #electric scooter
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+