ஜாவா, யெஸ்டி, பிஎஸ்ஏ பைக்குகள் வாங்க சூப்பர் ஆஃபர்! 100% கடன் வசதி, ஜீரோ டவுன் பேமெண்ட்!

பண்டிகைக் காலத்தில் புதிய பைக் வாங்கத் திட்டமிடுபவர்களை கவரும் வகையில், ஜாவா (Jawa), யெஸ்டி (Yezdi), பிஎஸ்ஏ (BSA) மோட்டார்சைக்கிளுக்கு கிளாசிக் லெஜென்ட்ஸ் நிறுவனம் சிறப்புச் சலுகைகளை அறிவித்துள்ளது. இதன்படி, தகுதியுள்ள வாடிக்கையாளர்கள் 100 சதவீதம் வரை கடன் வசதி, முன்பணம் இல்லாமல் பைக் வாங்கும் கடன் திட்டம், குறைந்த வட்டி விகிதம் உள்ளிட்ட பல்வேறு சலுகைகளைப் பெற முடியும்.

கிளாசிக் லெஜெண்ட்ஸ் (Classic Legends) நிறுவனத்தின் கீழ் செயல்படும் இந்த பிராண்டுகள், பைக் வாங்குவதற்கான ஆரம்பச் செலவைக் குறைக்கும் நோக்கில் இந்தத் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளன. குறிப்பாக, ஒரே நேரத்தில் அதிக தொகையை முன்பணமாகச் செலுத்த விரும்பாத வாடிக்கையாளர்களுக்கு இந்தச் சலுகைகள் உதவியாக இருக்கும்.

Classic Legends Festive Offer

குறைவான வட்டி விகிதம்

இந்தப் பண்டிகைக் கால சிறப்பு கடன் திட்டங்களின்படி, தகுதியுள்ள வாடிக்கையாளர்கள் பைக்கின் விலையில் 100 சதவீதம் வரை கடன் பெறலாம். இதன் மூலம் ஜீரோ டவுன் பேமெண்ட் (Zero Down Payment) திட்டத்தின் கீழ் முன்பணம் செலுத்தாமல் பைக்கை வாங்குவதற்கான வாய்ப்பு கிடைக்கிறது. இருப்பினும், கடன் ஒப்புதல் மற்றும் வாடிக்கையாளரின் தகுதியைப் பொறுத்தே இந்த வசதிகள் கிடைக்கும்.

மேலும், கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கு அதிகபட்சமாக 72 மாதங்கள் வரை கால அவகாசம் வழங்கப்படுகிறது. வட்டி விகிதம் 5.99 சதவீதம் முதல் தொடங்குகிறது. இதனால், வாடிக்கையாளர்கள் தங்களின் மாத வருமானம் மற்றும் செலவுகளுக்கு ஏற்ப கடன் திருப்பிச் செலுத்தும் திட்டத்தைத் தேர்வு செய்ய முடியும்.

Also Read

உடனடி கடன் ஒப்புதல், Buy Now Pay Later வசதி

பைக் வாங்கும் நடைமுறையை எளிமையாக்கும் வகையில் உடனடி கடன் ஒப்புதல் (Instant Approval) வசதியும் இந்தத் திட்டத்தில் இடம்பெற்றுள்ளது. இதன் மூலம் கடன் விண்ணப்பத்தை விரைவாகச் செயல்படுத்தி, பைக் வாங்குவதற்கான நடைமுறைகளை எளிதாக்க நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அதேபோல், தகுதியுள்ள வாடிக்கையாளர்களுக்கு Buy Now Pay Later (இப்போது வாங்கி, பின்னர் பணம் செலுத்தும்) வசதியும் வழங்கப்படுகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட கடன் திட்டங்களில் ஹைப்போதிகேஷன் (Hypothecation) பதிவு இல்லாத வசதியும் இடம்பெற்றுள்ளது.

Also Read

மஹிந்திரா குழும ஊழியர்களுக்குச் சிறப்புச் சலுகை

கிளாசிக் லெஜென்ட்ஸ் தாய் நிறுவனமான மஹிந்திரா குழுமத்தில் (Mahindra Group) பணிபுரியும் ஊழியர்களுக்காகவும் பிரத்யேக திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் ஜாவா, யெஸ்டி அல்லது பிஎஸ்ஏ மோட்டார்சைக்கிள்களை வாங்க விரும்பும் ஊழியர்கள், அவர்களுக்காக வடிவமைக்கப்பட்ட சிறப்பு கடன் திட்டச் சலுகைகளைப் பெறலாம்.

இதுகுறித்து கிளாசிக் லெஜெண்ட்ஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் அனுபம் தரேஜா கூறுகையில், ஜாவா, யெஸ்டி மற்றும் பிஎஸ்ஏ பைக்குகள் வாங்குவது என்பது வெறும் மோட்டார்சைக்கிளை வாங்குவது மட்டுமல்ல; அது ஒரு தனித்துவமான மோட்டார்சைக்கிள் கலாசாரத்தின் ஒரு பகுதியாக மாறும் அனுபவத்தை தரும். இந்தப் பண்டிகைக் காலத்தில், இந்த சிறப்பு நிதி திட்டங்கள் மூலம் அதிக வாடிக்கையாளர்கள் தங்களுக்குப் பிடித்த பைக்கை வாங்குவதை எளிதாக்குவதே நிறுவனத்தின் நோக்கம் எனத் தெரிவித்துள்ளார்.

பழமையும், பாரம்பரியத்தையும் கொண்ட ரெட்ரோ ஸ்டைல் பைக்கை வாங்கத் திட்டமிடுபவர்களுக்கு இந்த நிதித் திட்டங்கள் பயனுள்ளதாக இருக்கும். இருப்பினும், பைக்கின் விலை, கடன் தகுதி, செயலாக்கக் கட்டணம், காப்பீடு மற்றும் பிற செலவுகளைச் சரிபார்த்த பிறகே நிதித் திட்டத்தைத் தேர்வு செய்வது நல்லது. 5.99 சதவீத வட்டி என்பது தொடக்க விகிதம் மட்டுமே என்பதால், இறுதியாக வழங்கப்படும் வட்டி விகிதத்தை நிதி நிறுவனத்திடம் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.

Article Published On: Friday, October 16, 2026, 11:48 [IST]
English summary
Jawa yezdi bsa festive offers 2026 zero down payment 100 percent finance
மேலும்... #BSA #jawa #yezdi
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out