இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை ஸ்டார்ட் பண்ண சாவி தேவையில்ல.. ஸ்மார்ட்போனே போதும்.. 130 கிமீ ரேஞ்சும் கொடுக்குது!
முன்னணி நிறுவனங்களைக் கடந்து பல்வேறு சிறிய மற்றும் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களும் இந்தியாவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்து வருகின்றன. அப்படி ஜாய் இ-பைக் இந்தியாவில் விற்பனை செய்து வரும் ஒரு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தான் மிஹோஸ் (Mihos). இந்தியாவில் கிளாஸியான லுக் கொண்ட ஸ்கூட்டர்கள் என்று ஒரு பட்டியலை எடுத்தால், அதில் முதலிடத்தையே இந்த மிஹோஸுக்குக் கொடுக்கலாம். அப்படி ஸ்டைலான டிசைனைக் கொண்ட ஒரு எலெக்ட்ரிக் ஸ்கூட்டராக இது இருக்கிறது.
இதனை நாம் சொல்லித்தான் தெரிய வேண்டும் என்று இல்லை. பார்க்கும் போதே உங்களுக்குத் தெரிந்திருக்கும், மிஹோஸ் கிளாஸியான, தனித்துவமான மற்றும் ஸ்டைலான டிசைனைக் கொண்டிருப்பதை. ஜாப் இ-பைக் பிராண்டின் ஃபிளாக்ஷிப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரும் இது தான். 1.13 லட்சம் ரூபாய் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அந்நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. இந்த விலைக்கேற்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டரா மிஹோஸ்? பார்க்கலாம் வாங்க.

இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் 2.8 kWh பேட்டரி பேக் மற்றும் 1.5 kW பவர் கொண்ட எலெக்ட்ரிக் மோட்டார் செட்டப்பைக் கொடுத்துள்ளது ஜாய் இ-பைக். இந்த பவர்ட்ரெயின் செட்டப்பின் மூலமாக அதிகபட்சமாக 130 கிமீ வரையிலான சான்றளிக்கப்பட்ட ரேஞ்சைக் கொண்டிருக்கிறது மிஹோஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர். மேலும் அதிகபட்சமாக மணிக்கு 65 கிமீ வேகத்தில் செல்லும் திறனையும் கொண்டுள்ளது. இதன் பேட்டரியை 5 மணி நேரத்தில் சார்ஜ் செய்ய முடியும்.
ஃபிளாக்ஷிப் என்பதற்கு ஏற்ப ப்ரீமியமான அம்சங்களைக் கொண்ட ஒரு எலெக்ட்ரிக் ஸ்கூட்டராகவே இந்த ஜாய் இ-பைக் மிஹோஸ் இருக்கிறது. ப்ரீமியமான டிசைனைக் கொண்டிருக்கும் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் 4.3 இன்ச் கலர் TFT டிஸ்பிளே கொடுக்கப்பட்டுள்ளது. விளக்குகள் அனைத்து LED-யாகவே கொடுக்கப்பட்டிருக்கும் நிலையில் இரண்டு பக்கமும் 12 இன்ச் அலாய் வீல்களுடன், அதில் டிஸ்க் பிரேக்குகளையே கொடுத்துள்ளது. கூடுதல் பாதுகாப்பிற்காக காம்பி பிரேக்கிங் சிஸ்டமும் கொடுக்கப்பட்டிருக்கிறது.

ஸ்மார்ட்போன் கனெக்டிவிட்டி வசதியைக் கொண்டிருக்கும் இந்த ஸ்கூட்டரில், வெஹிக்கிள் ட்ராக்கிங், ஜியோ ஃபென்சிங் மற்றும் ரிமோட் டிஸ்ஏபிளிங் ஆகிய வசதிகளும் கொடுக்கப்பட்டிருக்கின்றன. 189 கிமீ கிரௌண்டு கிளியரன்ஸுடன் கரடுமுரடான பாதைகளையும் எளிதாகக் கையாளும் வகையிலேயே இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் உருவாக்கப்பட்டிருக்கிறது. எலெக்ட்ரிக் ஸ்கூட்டராக இருந்தாலும் 110 கிலோ எடையையே கொண்டிருப்பதால், மற்ற ஸ்கூட்டர்களை விட இந்த மிஹோஸ் ஹேண்டில் செய்வதற்கு எளிதாகவே இருக்கும்.
தங்கள் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்குப் பயன்படுத்தும் வகையில் ஜாய் இ-கனெக்ட் என்ற செயலியை வழங்கி வருகிறது அந்நிறுவனம். இந்த செயலியின் மூலமாக சாவி இல்லாமல் ஸ்மார்ட்போன் மூலமாகவே மிஹோஸ் ஸ்கூட்டரை ஸ்டார்ட் செய்து பயன்படுத்த முடியும் என்பது சிறப்பான ஒரு அம்சமாகப் பார்க்கப்படுகிறது. இது மட்டுமின்றி ஸ்கூட்டர் எப்போதெல்லாம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது, எங்கெல்லாம் சென்றிருக்கிறது என்பதையும் மேற்கூறிய செயலியின் மூலமே ட்ராக் செய்து கொள்ள முடியும்.
ஸ்கூட்டரில் இருக்கும் ஜியோ பென்ஸிங் (Geo Fencing) வசதியை ஜாய் இ-கனெக்ட் செயலியின் மூலமே பயன்படுத்திக் கொள்ள முடியும். இதன் மூலம் மிஹோஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை குறிப்பிட்ட எல்லையைக் கடந்து யாரும் பயன்படுத்த முடியாத வகையில் பார்த்துக் கொள்ள முடியும். இது நமது ஸ்கூட்டர் திருடுபோவதைத் தடுக்கவும் மிகவும் உதவிகரமாக இருக்கும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: யாரிடமும் இல்லாத வகையில் தனித்துவமான ஒரு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர், தனித்துவமான லுக் கொண்ட ஒரு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வேண்டும் என்பவர்கள் இந்த ஜாய் இ-பைக் மிஹோஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரையும் பரிசீலனை செய்யலாம். ஈரோடு, திருப்பூர், மதுரை, சேலம், விருதுநகர் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட நகரங்களில் ஜாய் இ-பைக் டீலர்ஷிப்கள் செயல்பட்டு வருகின்றன.


Click it and Unblock the Notifications