கவாஸாகி பைக்குகளை இவ்வளவு கம்மியான விலையில் வாங்க முடியும்னு எப்போதாவது நினைத்தது உண்டா?
கவாஸாகி இந்தியா தனது புகழ்பெற்ற நின்ஜா மோட்டார்சைக்கிள்களுக்கு அதிரடி சலுகைகளையும், தள்ளுபடிகளையும் அறிவித்துள்ளது. ஜூன் 30 வரை மட்டுமே செல்லுபடியாகும் இந்த அரிய வாய்ப்பில், நின்ஜா 1100SX, நின்ஜா ZX-6R மற்றும் 1000சிசி சூப்பர் பைக்கான நின்ஜா ZX-10R ஆகிய பைக் மாடல்களுக்கு யாராலும் கற்பனை செய்ய முடியாத சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்த சலுகைகளில் அனைவரையும் வியப்பில் ஆழ்த்துவது கவாஸாகி நின்ஜா ZX-10R பைக்கிற்கு அறிவிக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட தள்ளுபடிதான். இந்த அதிவேக பைக்கிற்கு நேரடியாக ரூ.2.89 லட்சம் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், இந்த பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.20,79,000-இல் இருந்து வெறும் ரூ.17,90,000 ஆகக் குறைந்துள்ளது.

இதன் மூலமாக இந்தியாவில் தற்சமயம் விற்பனையாகும் மிகவும் மலிவான 1000சிசி சூப்பர் பைக்காக இது மாறியுள்ளது என்றால் அது மிகையல்ல. ஆனால், ஒரு முக்கிய குறிப்பு என்னவென்றால், இந்த பைக்கிற்கான இன்சூரன்ஸ் மற்றும் பதிவு கட்டணங்கள் பைக்கின் அசல் விலையான ரூ.20,79,000-இன் அடிப்படையிலேயே கணக்கிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அம்சங்களைப் பொறுத்தவரை, நின்ஜா ZX-10R பைக்கின் என்ஜினில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
இந்த பைக்கில் பொருத்தப்படும் 998சிசி, இன்லைன்-4 சிலிண்டர் என்ஜின் அதிகப்பட்சமாக 202 பிஎச்பி பவரையும் (RAM Air உடன்), 112 என்.எம் டார்க் திறனையும் வெளிப்படுத்துகிறது. அத்தோடு, TFT கன்சோல் திரை, மல்டிபிள் ரைடிங் மோடுகள், டிராக்ஷன் கண்ட்ரோல், லாஞ்ச் கண்ட்ரோல், என்ஜின் பிரேக் கண்ட்ரோல், பை-டைரக்ஷனல் குயிக் ஷிஃப்டர் மற்றும் க்ரூஸ் கண்ட்ரோல் போன்ற அதிநவீன தொழில்நுட்பங்கள் இந்த பைக்கை ஒரு சாலை அரக்கனாக நிலைநிறுத்துகின்றன.

நின்ஜா 1100SX மற்றும் நின்ஜா ZX-6R பைக்குகளுக்கான சலுகைகளை பொறுத்தவரையில், ஸ்போர்ட்-டூரர் ரக பைக் பிரியர்களின் விருப்பமான நின்ஜா 1100SX பைக்குக்கு இரண்டு பிரத்யேக இலவச ஆக்சஸரீஸ் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. அவையாவன, ரூ.1.25 லட்சம் மதிப்புள்ள பிரீமியம் பேனியர் கிட் (Pannier kit) மற்றும் ரூ.11,050 மதிப்புள்ள உயரமான விண்ட்ஸ்கிரீன் (Tall windscreen) ஆகும்.
இதில் பேனியர் கிட்டை தேர்வு செய்வது உங்கள் நீண்ட தூர பயணங்களை மேலும் சொகுசானதாகவும் வசதியானதாகவும் மாற்றும். மறுபுறம், மிடில்வெயிட் சாம்பியனான நின்ஜா ZX-6R பைக் வாங்குபவர்களுக்கு, ரூ.84,000 மதிப்புள்ள ஓஹ்லின்ஸ் ஸ்டீயரிங் டேம்பர் (Ohlins steering damper) முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது.
இது பைக்கின் ஹேண்ட்லிங்கையும், நிலைத்தன்மையையும் அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் என்பதில் சந்தேகமே இல்லை. இதே போன்ற சலுகைகளை கவாஸாகி நிறுவனம் கடந்த பிப்ரவரி மாதமும் வழங்கியிருந்தது. ஆனால், அப்போது ZX-10R பைக்குக்கு மட்டுமே வெறும் ரூ.1.43 லட்சம் தள்ளுபடி வழங்கப்பட்டது.
எனவே, தற்போதைய சலுகை உண்மையிலேயே ஒரு அரிய பொன்னான வாய்ப்பாகும். இந்த அதிரடி சலுகைகள் நாடு முழுவதும் உள்ள கவாஸாகி ஷோரூம்களில் கிடைக்கின்றன. உங்கள் அருகிலுள்ள கவாஸாகி டீலர்ஷிப்பை உடனே தொடர்புகொண்டு, ஸ்டாக் விவரங்கள் மற்றும் கூடுதல் டீலர்ஷிப் சலுகைகளை பற்றி தெரிந்துக் கொள்ளுங்கள்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த டாப்-ஸ்பெக் கவாஸாகி பைக்குகளை இவ்வளவு குறைந்த விலையில் வாங்க முடியும் என்று நீங்கள் எப்போதாவது நினைத்ததுண்டா? ஜூன் 30 வரை மட்டுமே செல்லுபடியாகும் இந்த வவுச்சர் தள்ளுபடி, பைக் பிரியர்களின் நீண்ட நாள் கனவை நனவாக்கப் போகிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இந்த தள்ளுபடி மூலம் நீங்கள் சேமிக்கும் தொகையை அதிநவீன ரைடிங் கியர்கள் மற்றும் மோட்டார்சைக்கிள் அப்கிரேடுகளுக்கு பயன்படுத்தலாம் அல்லவா?


Click it and Unblock the Notifications