கவாஸாகி கம்பெனிக்காரனுக்கு எப்படி கட்டுப்படி ஆகுது? ஒரேடியாக ரூ.2.87 லட்சம் குறைக்கப்பட்ட விலை!

கவாஸாகி நிறுவனம் அதன் பிரபலமான நிஞ்சா பைக்குகளுக்கு 2026 ஜூலை மாதத்தை முன்னிட்டு புதிய சிறப்பு சலுகைகளை அறிவித்துள்ளது. கடந்த ஜூன் மாதத்தில் இருந்து அப்படியே தொடரப்பட்டுள்ள இந்த சலுகையின்படி, இந்த ஜூலை மாதத்தில் எந்த கவாஸாகி பைக் மாடல்களை எவ்வளவு குறைவான விலையில் வாங்கலாம் என்பதை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.

இந்தியாவில் அவ்வப்போது சலுகைகளை அறிவிக்கும் நிறுவனங்களுள் முக்கியமானது கவாஸாகி ஆகும். குறிப்பாக, பழைய ஸ்டாக்குகளை விற்றுத் தீர்க்க வருடத்தின் இரண்டாம் பாதியில் இந்த நிறுவனத்தில் இருந்து நிறைய சலுகைகளையும், தள்ளுபடிகளையும் எதிர்பார்க்கலாம். அந்த வகையில், கடந்த ஜூன் மாதத்தில் சில கவாஸாகி பைக்குகளுக்கு சலுகைகள் அறிவிக்கப்பட்டன.

kawasaki announced july month offers

அந்த வரிசையில் தற்போது மீண்டும் கவாஸாகி நிறுவனத்தில் இருந்து சலுகைகள் & தள்ளுபடிகள் இந்த ஜூலை மாதத்தை முன்னிட்டும் அறிவிக்கப்பட்டுள்ளன. கடந்த ஜூன் மாதத்தில் நான்கு கவாஸாகி பைக்குகளுக்கு சலுகைகள் அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், தற்போது அதில் மூன்று பைக்குகளுக்கு மட்டும் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

கவாஸாகியின் விலை குறைவான அட்வென்ச்சர் வகை மோட்டார்சைக்கிளான வெர்சிஸ்-எக்ஸ் 300-க்கு கடந்த மாதத்தில் ரூ.81,000 மதிப்பிலான சலுகைகள் அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், அது ஜூலை மாதத்திற்கு தொடரப்படவில்லை. மற்ற மூன்று நிஞ்சா பைக்குகளிலும் சலுகைகள் அப்படி அப்படியே தொடரப்பட்டுள்ளன. இருப்பினும், இவை மூன்றுமே விலையுயர்ந்த கவாஸாகி நிஞ்சா பைக்குகள் ஆகும்.

kawasaki announced july month offers

அவையாவன, நிஞ்சா 1100SX, நிஞ்சா ZX-6R மற்றும் நிஞ்சா ZX-10R பைக்குகள் ஆகும். இதில், அதிகப்பட்சமாக நிஞ்சா ZX-10R பைக்கிற்கு கடந்த ஜூன் மாதத்தை போன்று சுமார் ரூ.2.89 லட்சம் பணம் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, பைக்கின் விலை நேரடியாக ரூ.2.89 லட்சம் குறைக்கப்பட்டுள்ளது.

ரூ.20.79 லட்சம் என்கிற எக்ஸ்-ஷோரூம் விலையை கொண்ட இந்த 1000சிசி நிஞ்சா பைக் இந்த ஜூலை மாதம் முடியும் வரையில் ரூ.17.90 லட்சத்தில் கிடைக்கும். இதேபோன்று 1100சிசி நிஞ்சா பைக்கான நிஞ்சா 1100SX -ஐ இந்த ஜூலை மாதத்தில் வாங்குவோருக்கு ரூ.1.25 லட்சம் மதிப்பிலான பெட்டிகள் இலவசமாக பைக்கின் இரு பக்கங்களிலும் கிடைக்கும்.

அதிகளவிலான பொருட்களை வைத்துக் கொண்டு செல்வதற்கான இந்த பெட்டிகள் உடன் நன்கு பெரியதான எதிர்காற்று தடுப்பு கண்ணாடியும் கிடைக்கும். இரண்டிற்கும் சேர்த்துதான் ரூ.1.25 லட்சம் மதிப்பாகும். ரூ.14.42 லட்சம் என்கிற எக்ஸ்-ஷோரூம் விலையில் கிடைக்கும் இந்த பைக்கும், மேலே கூறப்பட்ட நிஞ்சா ZX-10R பைக்கிலும் வெவ்வேறான என்ஜின் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

நிஞ்சா ZX-6R பைக்கை பொறுத்தவரையில், இதில் 636சிசி இன்லைன் 4-சிலிண்டர், லிக்யுடு-கூல்டு என்ஜின் வழங்கப்படுகிறது. இருப்பினும், இதன் எக்ஸ்-ஷோரூம் விலை ஆனது ரூ.12.49 லட்சத்தில் இருந்து துவங்குகிறது. இந்த பைக்கிற்கு ரூ.83,000 மதிப்பிலான ஹோலின்ஸ் ஸ்டீயரிங் டேம்பரை இந்த ஜூலை மாதத்தில் இலவசமாக பெறலாம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த சலுகைகள் குறித்த அறிவிப்புகள் கவாஸாகியின் அதிகாரப்பூர்வ இணையத்தள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளன. ஆதலால், இந்தியா முழுவதும் உள்ள அனைத்து கவாஸாகி டீலர்ஷிப் ஷோரூம்களிலும் இந்த சலுகைகளை பெறலாம். இருப்பினும், தற்போதைக்கு சலுகைகள் ஜூலை 31ஆம் தேதி வரையில் மட்டுமே கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Article Published On: Friday, July 10, 2026, 19:49 [IST]
English summary
Kawasaki announced july month offers for ninja motorcycles in india
மேலும்... #kawasaki #discount offer #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out