இதைவிட கம்மியான விலையில் பைக்கை கொடுக்க முடியாது! கவாஸாகி பைக் வாங்கும் கனவை நிஜமாக்க நேரம் வந்தாச்சு!

கவாஸாகி நிறுவனம் அதன் வெர்சிஸ்-எக்ஸ் 300 பைக்கிற்கான புதிய சலுகைகளையும், இலவச ஆக்ஸசரீகளையும் இந்த ஜூன் மாதத்தை முன்னிட்டு அறிவித்துள்ளது. இந்த ஜூன் 30ஆம் தேதி வரையில் வழங்கப்பட உள்ள இந்த சலுகைகள் குறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.

கவாஸாகி நிறுவனத்தின் எடை மற்றும் விலை குறைவான அட்வென்ச்சர் வகையை சேர்ந்த பைக்காக வெர்சிஸ்-எக்ஸ் 300 விளங்குகிறது. கரடு முரடான பாதைகளுக்கு மட்டுமின்றி, தொலைத்தூர நெடுஞ்சாலை பயணங்களிலும் சவுகரியமான பயணத்தை வழங்கக்கூடிய வெர்சிஸ்-எக்ஸ் 300 பைக்கின் முக்கிய சிறப்பம்சமே அதன் டபுள்-சிலிண்டர் என்ஜின் ஆகும்.

kawasaki announced june month offers

300சிசி என்ஜின் பைக்குகளில் 2-சிலிண்டர் என்ஜின் வழங்கப்படுவது மிகவும் அரிதான ஒன்றாகும். இருப்பினும், மற்ற 300சிசி பைக்குகளுடன் ஒப்பிடுகையில் சற்று அதிகப்படியான விலையில் வெர்சிஸ்-எக்ஸ் 300 விற்பனை செய்யப்படுகிறது. இதனாலேயே இந்த பைக் அதிக எண்ணிக்கையில் விற்பனையாகுவது இல்லை. இதனாலேயே அடிக்கடி இந்த பைக்கிற்கு புதிய சலுகைகள் அறிவிக்கப்பட்ட வண்ணம் உள்ளன.

அந்த வகையில், இந்த ஜூன் மாதத்தை முன்னிட்டும் ரூ.35,000 மதிப்பிலான பணம் தள்ளுபடி வெர்சிஸ்-எக்ஸ் 300 பைக்கிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, இந்த பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.3.49 லட்சம் ஆகும். ஆனால், இந்த ஜூன் மாதத்தில் வெறும் ரூ.3.14 லட்சம் என்கிற எக்ஸ்-ஷோரூம் விலையில் இந்த பைக்கை வாங்கலாம்.

இதுமட்டுமின்றி, ரூ.46,000 வரையில் மதிப்பிலான ஆக்ஸசரீகளும் இந்த ஜூன் மாதத்தில் கவாஸாகி வெர்சிஸ்-எக்ஸ் 300 பைக்கை வாங்கும் கஸ்டமர்களுக்கு கிடைக்கும். இந்த ஆக்ஸசரீகளாக, பொருட்களை வைத்து எடுத்துச் செல்வதற்கான பெட்டிகள் அல்லது செண்டர் ஸ்டாண்டை வாடிக்கையாளர்கள் பெறலாம். மேலும், HDFC வங்கி, டாடா கேபிட்டல் மற்றும் L&T ஃபைனான்ஸ் மூலமாக இந்த பைக்கை வாங்குவதற்கான கடனுதவியும் பெற்றுத்தரப்படும் என கவாஸாகி தெரிவித்துள்ளது.

வெர்சிஸ்-எக்ஸ் 300 பைக்கை பற்றி சொல்ல வேண்டுமென்றால், இந்த பைக்கில் பொருத்தப்படும் 296சிசி லிக்யுடு-கூல்டு, இணையான-இரட்டை சிலிண்டர் என்ஜின் ஆனது அதிகப்பட்சமாக 11,500 ஆர்பிஎம் வேகத்தில் 38.8 பிஎச்பி மற்றும் 10,000 ஆர்பிஎம் வேகத்தில் 26 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக் கூடியதாக உள்ளது.

இதே என்ஜின் தான் கவாஸாகி நிஞ்சா 300 பைக்கிலும் பொருத்தப்படுவது குறிப்பிடத்தக்கது. வெர்சிஸ்-எக்ஸ் 300 பைக்கில் முன் சக்கரத்தில் 290மிமீ-லும், பின் சக்கரத்தில் 220மிமீ-லும் டபுள்-பிஸ்டன் காலிபர் உடன் டிஸ்க் பிரேக்குகள் வழங்கப்படுகின்றன. இவற்றுடன், ABS-உம் வழங்கப்படுகிறது. ஆனால், ஹேண்டில்பாருக்கு மத்தியில் சாதாரணமான அனலாக்-டிஜிட்டல் மீட்டர் திரை தான் வழங்கப்படுகிறது.

இந்த அட்வென்ச்சர் பைக்கில் 17 லிட்டர்கள் கொள்ளளவில் பெட்ரோல் டேங்க் வழங்கப்படுகிறது. இது நீண்ட தொலைவு பயணங்களுக்கு போதுமான ஒன்றாகும். விற்பனையில் இந்த கவாஸாகி பைக்கிற்கு BMW மோட்டார்ராட் நிறுவனத்தின் ஜி310 ஜிஎஸ் பைக் நேரடி போட்டியாக விளங்குகிறது. 313சிசி, சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் இந்த BMW பைக்கில் வழங்கப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: கவாஸாகி நிறுவனம் கடந்த சில வருடங்களாகவே தொடர்ச்சியாக ஒவ்வொரு மாதமும் சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளை அறிவித்த வண்ணம் உள்ளது. ஆரம்பத்தில் விலைமிக்க கவாஸாகி பைக்குகளுக்கே இவ்வாறான சலுகைகள் அறிவிக்கப்பட்ட நிலையில், இப்போது வெர்சிஸ்-எக்ஸ் 300 போன்ற விலை குறைவான பைக்குகளுக்கும் வழங்கப்படுகிறது. இதன் மூலமாக, இந்த விலை குறைவான கவாஸாகி பைக்கை பலர் வாங்குவர் என எதிர்பார்க்கிறோம்.

Article Published On: Saturday, June 13, 2026, 16:58 [IST]
English summary
Kawasaki announced june month offers for versys x 300 motorcycle in india
மேலும்... #kawasaki #discount offer #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out