பைக் விக்குற விலையில இலட்சங்களில் விலையை குறைத்த கவாஸாகி! ரோடு ஃபுல்லா இந்த கம்பெனி பைக் தான் ஓட போகுது!

கவாஸாகி (Kawasaki) நிறுவனம் இந்தியாவில் அதன் பைக்குகளை விற்பனை செய்ய அவ்வப்போது சலுகைகளையும், தள்ளுபடிகளையும் அறிவிப்பது வழக்கம். அந்த வகையில், கடந்த மார்ச் மாதத்திலும் கவாஸாகி தனது பைக்குகளுக்கு சலுகைகளை அறிவித்ததை நாம் பார்த்திருந்தோம். அதன் தொடர்ச்சியாக தற்போது மீண்டும் இந்த ஏப்ரல் மாதத்திற்கும் சலுகைகளை கவாஸாகி அறிவித்துள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.

உலகளவில் பிரபலமான ஜப்பானிய பைக் நிறுவனமான கவாஸாகி இந்திய சந்தையில் பல தரமான மோட்டார்சைக்கிள்களை விற்பனை செய்கிறது. இருப்பினும், அவற்றின் விலைகள் நம் இந்திய மக்கள் எதிர்பார்ப்பதை காட்டிலும் சற்று அதிகமாக உள்ளதால், கவாஸாகி பைக்குகள் அதிக எண்ணிக்கையில் விற்பனையாகுவது இல்லை என்பதை அவற்றின் ஒவ்வொரு மாத விற்பனை எண்ணிக்கைகளை பார்த்தாலே தெரிய வருகிறது.

kawasaki april month offers

இதனாலேயே குறுகிய கால இடைவெளியில் அவ்வப்போது கவாஸாகி இந்தியா நிறுவனம் அதன் குறிப்பிட்ட மோட்டார்சைக்கிள்களுக்கு சலுகைகளை அறிவிக்கிறது. அந்த வகையில் இந்த ஏப்ரல் மாதத்தை முன்னிட்டும் சில குறிப்பிட்ட பைக்குகளுக்கு கவாஸாகி பணம் தள்ளுபடி சலுகையை அறிவித்துள்ளது. அவற்றை இனி கவாஸாகி பைக்குகள் வாரியாக பார்க்கலாம்.

கவாஸாகி வெர்சிஸ்-எக்ஸ் 300 (Versys-X 300): இந்தியாவில் கவாஸாகி நிறுவனத்தின் விலை குறைவான அட்வென்ச்சர் பைக்காக விளங்கும் இதன் மை2025 மற்றும் மை2026 மாடல்கள் இரண்டிற்கும் பணம் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, 2025ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட மை2025 வெர்சிஸ்-எக்ஸ் 300 பைக்கை வாங்குபவர்கள் அதிகமாக ரூ.30,000 வரையிலான பணம் தள்ளுபடியை பெறலாம். சலுகை இல்லாமல், வெர்சிஸ்-எக்ஸ் 300 பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ரூ.3.49 லட்சம் ஆகும்.

kawasaki april month offers

ஆனால், இந்த ஏப்ரல் 30ஆம் தேதிக்குள் மை25 வெர்சிஸ்-எக்ஸ் 300 பைக்கை வாங்குபவர்களுக்கு ரூ.30 ஆயிரமும், மை26 மாடல்களை வாங்குபவர்களுக்கு ரூ.20 ஆயிரமும் குறைவாக முறையே ரூ.3.19 லட்சம் மற்றும் ரூ.3.29 லட்சம் என்கிற எக்ஸ்-ஷோரூம் விலைகளில் இந்த பைக் கிடைக்கும். இது இல்லாமல், இந்த ஏப்ரலில் வெர்சிஸ்-எக்ஸ் 300 பைக்கை வாங்குபவர்களுக்கு ரூ.46,000 வரையில் மதிப்பிலான ஆக்ஸசரீகளும் இலவசமாக கிடைக்கும் என கவாஸாகி அறிவித்துள்ளது.

கவாஸாகி இசட்650 ஆர்.எஸ் (Kawasaki Z650 RS): கவாஸாகியின் நியோ-ரெட்ரோ ஸ்டைல் மிடில்வெயிட் ரோட்ஸ்டர் பைக்கான இதன் மை25 மாடல்களின் விலை ரூ.34 ஆயிரம் குறைக்கப்பட்டுள்ளது. இதனால், ரூ.7.83 லட்சத்தில் விற்பனை செய்யப்பட்டு வந்த இந்த மோட்டார்சைக்கிள் ரூ.7.49 லட்சத்தில் கிடைக்கும். மற்றப்படி இலவச ஆக்ஸசரீகள் எதுவும் அறிவிக்கப்படவில்லை.

கவாஸாகி நிஞ்சா 650 (Kawasaki Ninja 650): முழுவதும் பேனல்களால் நிரப்பப்பட்ட கவாஸாகியின் ஸ்போர்ட்ஸ் டூரிங் மோட்டார்சைக்கிளான இதில், மேற்கூறப்பட்ட இசட்650 பைக்கின் என்ஜின் தான் பொருத்தபடுகிறது. இதன் மை25 மாடல்களின் விலை ரூ.20 ஆயிரம் குறைக்கப்பட்டுள்ளது. இதனால், ரூ.7.91 லட்சத்தில் விற்பனை செய்யப்பட்டு வந்த இந்த மோட்டார்சைக்கிள் ரூ.7.71 லட்சத்தில் கிடைக்கும்.

கவாஸாகி நிஞ்சா இசட்.எக்ஸ்-10ஆர் (Ninja ZX-10R): கவாஸாகியின் பவர்ஃபுல்லான 1000சிசி மோட்டார்சைக்கிளான இது இந்தியாவில் விற்பனை செய்யப்படும் விலைமிக்க கவாஸாகி பைக்குகளுள் ஒன்றாகும். இதன் மை25 மாடல்களின் விலை சுமார் ரூ.2.89 லட்சம் குறைக்கப்பட்டுள்ளது. இதனால், ரூ.20.79 லட்சத்தில் விற்பனை செய்யப்பட்டு வந்த இந்த மோட்டார்சைக்கிள் ரூ.17.90 லட்சத்தில் கிடைக்கும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஏற்கனவே கூறியதுபோல், அவ்வப்போது சலுகைகளை அறிவிக்கும் கவாஸாகி நிறுவனம் அந்த வரிசையில் இந்த ஏப்ரல் மாதத்திற்கும் அதன் இந்த பைக்குகளுக்கு பணம் தள்ளுபடி சலுகையை அறிவித்துள்ளது. இவை மட்டுமின்றி, நிஞ்சா 1100 என்கிற தனது மற்றொரு 1000சிசி பைக்கிற்கும் பொருட்களை வைத்து எடுத்து செல்வதற்கான ரூ.1.25 லட்சம் மதிப்பிலான பெட்டியை இந்த ஏப்ரலில் இலவசமாக வழங்குவதாக கவாஸாகி அறிவித்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Monday, April 13, 2026, 16:38 [IST]
English summary
Kawasaki announces april month offers for selected bikes in india check all details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+