அடிமாட்டு விலைக்கு பைக்கை மாற்றிய கவாஸாகி! இதுக்கு மேல் விலையை குறைக்க முடியாது!

கவாஸாகி (Kawasaki) நிறுவனம் இந்தியாவில் அதன் இரு 300சிசி பைக்குகளுக்கு சிறப்பு சலுகைகளை அறிவித்துள்ளது. இதன்படி, கவாஸாகி நிஞ்சா 300 (Ninja 300) மற்றும் வெர்சிஸ்-எக்ஸ் 300 (Versys-X 300) பைக்குகள் ரூ.28,000 வரையிலான சலுகைகளை பெறுகின்றன. மார்ச் 31ஆம் தேதி வரையில் மட்டுமே வழங்கப்பட உள்ள இந்த சலுகைகள் குறித்த கூடுதல் விபரங்களை இங்கே இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.

இந்தியாவில் குறுகிய கால இடைவெளியில் அவ்வப்போது சலுகைகளை அறிவிக்கக்கூடிய நிறுவனங்களுள் ஒன்று, கவாஸாகி ஆகும். ஸ்டாக்குகளை மிச்சம் வைக்காமல் விற்றுத் தீர்க்க சலுகைகளை அடிக்கடி கவாஸாகி அறிவிப்பது உண்டு. ஆனால், இந்த 2026ஆம் ஆண்டு துவங்கியதில் இருந்தே விலை குறைவான 300சிசி பைக்குகளுக்கு கவாஸாகி சலுகைகளை வழங்கி வருகிறது.

kawasaki india march month offers

கவாஸாகியின் விலை குறைவான 300சிசி பைக்குகளான நிஞ்சா 300 மற்றும் வெர்சிஸ்-எக்ஸ் 300 பைக்குகளுக்கு கடந்த ஜனவரி மாதத்தில் முறையே ரூ.28,000 மற்றும் ரூ.20,000 பணம் தள்ளுபடி சலுகை அறிவிக்கப்பட்டது. மேலும், வெர்சிஸ்-எக்ஸ் 300 பைக்கை வாங்குபவர்களுக்கு ரூ.46,000 வரையிலான சலுகைகளும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

ஆனால், இந்த சலுகைகள் அனைத்து நிஞ்சா 300 மற்றும் வெர்சிஸ்-எக்ஸ் 300 பைக்குகளுக்கும் வழங்கப்படவில்லை. நிஞ்சா 300 பைக்கை பொறுத்தவரையில், 2024 மற்றும் 2025ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட மை24 மற்றும் மை25 பைக்குகளுக்கும், வெர்சிஸ்-எக்ஸ் 300 பைக்கில் மை25 மற்றும் லேட்டஸ்ட் மை26 பைக்குகளுக்கும் அறிவிக்கப்பட்டன.

kawasaki india march month offers

ஜனவரி மாதத்தில் அறிவிக்கப்பட்ட இந்த சலுகைகளை அப்படியே பிப்ரவரி மாதத்திற்கும் கவாஸாகி அறிவித்தது. இந்த நிலையில், இந்த மார்ச் மாதத்திற்கும் இந்த சலுகைகள் நீட்டிக்கப்பட்டுள்ளன. ஆனால், 2024ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட நிஞ்சா 300 மற்றும் 2026ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட வெர்சிஸ்-எக்ஸ் 300 பைக்குகளுக்கு மட்டுமே மார்ச் மாத சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதன்படி, மார்ச் 31ஆம் தேதிக்கு உள்ளாக மை24 நிஞ்சா 300 பைக்கை வாங்குபவர்கள் ரூ.28,000 பணம் தள்ளுபடியை பெறலாம். இதன் மூலமாக, ரூ.3.17 லட்சம் மதிப்பிலான நிஞ்சா 300 பைக்கை வெறும் ரூ.2.89 லட்சத்தில் பெறலாம். அத்துடன், புதியதாக ரூ.8,888 மதிப்பிலான 'அலெக்ஸ் லோயிஸ் எடிஷன் கே.ஒய்.டி டிடி ரெவோ' (Alex Lowes Edition KYT TT Revo) ஹெல்மெட்டையும் இலவசமாக பெறலாம்.

இந்த சலுகைகள் மார்ச் 31ஆம் தேதி வரையில் மட்டுமே கிடைக்கும் என்பது மட்டுமின்றி, இந்த சலுகைகளை பெற கிரே நிறத்தில் நிஞ்சா 300 பைக்கை வாங்க வேண்டும். மறுப்பக்கம், கவாஸாகி வெர்சிஸ்-எக்ஸ் 300 பைக்கை பொறுத்தவரையில், ஜனவரி மற்றும் பிப்ரவரியில் 2025ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட வெர்சிஸ்-எக்ஸ் 300 பைக்குகளுக்கு இந்த சலுகைகள் வழங்கப்பட்டாலும், இந்த மார்ச் மாதத்தில் மை26 மாடலுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளன.

ஆனால், சலுகையில் எந்த மாற்றமும் இல்லை. மை26 வெர்சிஸ்-எக்ஸ் 300 பைக்கை வாங்குபவர்கள் ரூ.20,000 பணம் தள்ளுபடி மற்றும் ரூ.46,000 மதிப்பிலான இலவச ஆக்சஸரீகளை பெறலாம். இதன்படி, ரூ.3.49 லட்சம் மதிப்பிலான இந்த கவாஸாகி அட்வென்ச்சர் ரக பைக்கின் விலை ரூ.3.29 லட்சமாக குறைந்துள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: பழைய ஸ்டாக்குகளை குறிப்பிட்ட கால இடைவெளியில் விற்று தீர்ப்பது எந்தவொரு ஆட்டோமொபைல் நிறுவனத்திற்கும் முக்கியமான ஒன்றாகும். ஏனெனில், பழைய ஸ்டாக்குகளை காலி செய்தால்தான், வாகனங்களில் புது, புது அப்டேட்களை கொண்டுவர முடியும். இதனை புரிந்துக் கொண்டு கவாஸாகி நிறுவனம் தொடர்ந்து மூன்றாவது மாதமாக சலுகைகளை வழங்கினாலும், இந்த மார்ச் மாத சலுகைகளை பெற இன்னும் 6 நாட்கள் மட்டுமே உள்ளதை மறந்துவிடாதீர்கள்.

More from DriveSpark

Article Published On: Wednesday, March 25, 2026, 11:17 [IST]
English summary
Kawasaki india announced march month offers for ninja 300 and versys x 300
மேலும்... #kawasaki #offers #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+