இதைவிட கம்மியான விலையில கவாஸாகி பைக் தரமாட்டாங்க... 300சிசி என்ஜின் உடன் எல்லாமே இருக்கு!!

இந்தியா கவாசாகி மோட்டார்ஸ் பிரைவேட் லிமிடெட் (India Kawasaki Motors Private Limited), தங்கள் புதிய மை26 நிஞ்சா 300 (MY26 Ninja 300) மோட்டார்சைக்கிளை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. கவாசாகியின் மிகவும் பிரபலமான இந்த என்ட்ரி-லெவல் ஸ்போர்ட் மோட்டார்சைக்கிளின் சமீபத்திய பதிப்பு ஆனது பெரிய வின்ட்ஷீல்ட் உடன் கவாசாகி நிஞ்சா இசட்.எக்ஸ்-6ஆர் (ZX-6R) பைக்கில் இருந்து பெறப்பட்ட புதிய புரொஜெக்டர் ஹெட்லைட் மற்றும் மேம்படுத்தப்பட்ட சாலை நிலைத்தன்மைக்கான மாற்றியமைக்கப்பட்ட டயர் வடிவங்களுடன் அதன் ஸ்போர்ட்ஸ் பைக்கின் திறனை மேலும் உயர்த்துகிறது.

2026 நிஞ்சா 300, 'பெரிய முன்பகுதி, சிறிய பின்பகுதி' என்கிற ஐகானிக் வடிவமைப்புடன், அதன் தனித்துவமான நிஞ்சா ஸ்டைலிங்கை வெளிப்படுத்துகிறது. அலுமினிய ஃபுட்பெக்குகள், கூர்மையான ஃபேரிங்குகள், காற்றில் மிதக்கும் எஃபெக்ட் கொண்ட வின்ட்ஸ்கிரீன், புரொஜெக்டர் ஹெட்லேம்ப்கள் மற்றும் பல செயல்பாடுகளைக் கொண்ட இன்ஸ்ட்ரூமென்ட் பேனல் போன்றவை பைக்கின் செயல்திறன் பாரம்பரியத்திற்கு வலு சேர்க்கின்றன.

kawasaki launches my26 ninja 300

புதிய MY26 நிஞ்சா 300, "லைம் கிரீன்" மற்றும் "கேண்டி லைம் கிரீன்" ஆகிய இரண்டு வண்ணங்களில் கிடைக்கிறது. இதன் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.3,17,000/- ஆகும். MY26 நிஞ்சா 300 பைக்கின் என்ஜின் 296சிசி லிக்யுடு-கூல்டு, பேரலல் ட்வின்-சிலிண்டர் வகையைச் சேர்ந்தது. இது 11,000rpm-ல் 39PS ஆற்றலையும் (38.88 bhp), 10,000rpm-ல் 26.1Nm டார்க் திறனையும் உற்பத்தி செய்கிறது.

நிஞ்சா இசட்.எக்ஸ்-6ஆர் மற்றும் நிஞ்சா இசட்.எக்ஸ்-10ஆர் பைக்குகளைப் போலவே, இதில் இரட்டை த்ரோட்டில் வால்வுகள் உள்ளன. என்ஜினுடன் அசிஸ்ட் மற்றும் ஸ்லிப்பர் கிளட்ச் கொண்ட 6-ஸ்பீடு ரிட்டர்ன் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. சவுகரியமான பயணத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் விதமாக, பைக்கின் ஃபேரிங்கில் உள்ள பெரிய திறப்புகள் என்ஜின் வெப்பத்தை திறம்பட வெளியேற்ற உதவுகின்றன.

kawasaki launches my26 ninja 300

இந்த ஃபின் வடிவமைப்பு, சூடான காற்றை பயணிகளிடம் இருந்து விலக்கி கூடுதல் வசதியை வழங்குகிறது. ரேடியேட்டருக்குப் பின்னால் உள்ள புதிய ரேடியேட்டர் விசிறி கவர், சூடான காற்றை கீழே திசை திருப்பி, போக்குவரத்து நெரிசலில் பயணிகளின் வசதியை கணிசமாக மேம்படுத்துகிறது. இது பெட்ரோல் டேங்க் மற்றும் ஃபிரேம் போன்ற பாகங்களையும் குளிர்ச்சியாக வைத்திருக்க உதவுகிறது.

சஸ்பென்ஷனுக்கு முன்பக்கத்தில் 37 மிமீ டெலஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் பின்பக்கத்தில் 5-வழிகளில் அட்ஜஸ்டபிள் ப்ரீலோடு வசதியுடன் கூடிய பாட்டம்-லிங்க் யுனி-ட்ராக் கேஸ்-சார்ஜ்டு மோனோஷாக் சஸ்பென்ஷன் உள்ளது. வீல் டிராவல் ஆனது முன்புறத்தில் 120மிமீ ஆகவும், பின்புறத்தில் 132மிமீ ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. புதிய கவாசாகி நிஞ்சா 300 பைக்கின் டெலிவிரிகள் (Deliveries) 2026 பிப்ரவரி நடுப்பகுதியில் இருந்து தொடங்கவுள்ளன.

kawasaki launches my26 ninja 300

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவிலும் கடந்த பல ஆண்டுகளாக, கவாசாகி நிஞ்சா பிராண்ட் ஒரு முழுமையான செயல்திறன் இயந்திரங்களின் குடும்பமாக வளர்ந்துள்ளது. நிஞ்சா 250ஆர் மற்றும் நிஞ்சா 300 போன்ற சூப்பர்ஸ்போர்ட்ஸ் பைக்குகள் முதல், நிஞ்சா இசட்.எக்ஸ்-10ஆர் மற்றும் நிஞ்சா எச்2 போன்ற ஹைப்பர்ஸ்போர்ட் பைக்குகள் வரை, ஒவ்வொன்றும் கவாசாகியின் செயல்திறன், புதுமை மற்றும் ஆக்ரோஷமான ஸ்டைலிங் ஆகிய தனித்துவமான அடையாளத்தைத் தாங்கி நிற்கின்றன.

2012-ல் உலகளவில் அறிமுகப்படுத்தப்பட்டு, அதன் பிறகு விரைவில் இந்தியாவிலும் வெளியிடப்பட்ட நிஞ்சா 300, அதன் இரட்டை-சிலிண்டர் என்ஜின், ரேஸ் பைக்குகளை போன்றதான ஸ்டைல் மற்றும் நேர்த்தியான பயண அனுபவம் மூலம் 300சிசி பைக்குகள் பிரிவில் புதிய தரத்தை உருவாக்கியுள்ளது. அன்றாடப் பயன்பாட்டையும் கவாசாகியின் மோட்டார்ஸ்போர்ட் DNA-வையும் இது ஒருங்கிணைத்துள்ளது. MY26 நிஞ்சா 300 அப்டேட், இளம் தலைமுறையினர்களுக்காக இந்த பாரம்பரியத்தைத் தொடர்கிறது.

More from DriveSpark

Article Published On: Wednesday, January 21, 2026, 10:00 [IST]
English summary
Kawasaki india launches new my26 ninja 300 motorcycle check price features all details here
மேலும்... #kawasaki #new launches #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X