ஹீரோ கம்பெனி மார்க்கெட்டை உடைப்பதுதான் மொத இலக்கு! கவாஸாகி இப்படி தர லோக்கலா இறங்கும்னு எதிர்பார்க்கல!

கவாஸாகி மோட்டார்ஸ் இந்தியா நிறுவனம் அதன் மை27 KLX230 மோட்டார்சைக்கிள்களை விற்பனைக்கு அறிமுகப்படுத்தி உள்ளது. மொத்தம் மூன்று விதமான KLX230 பைக்குகள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டு உள்ளன. ரூ.2.19 லட்சத்தில் இருந்து நிர்ணயிக்கப்பட்டுள்ள இந்த புதிய பைக்குகளை பற்றிய கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் காணலாம்.

ஜப்பானிய மோட்டார்சைக்கிள் நிறுவனமாக கவாஸாகி இந்தியாவில் சமீப காலமாக அட்வென்சர் ரக மோட்டார்சைக்கிள்களை அறிமுகம் செய்வதில் தீவிரம் காட்டி வருகிறது. குறிப்பாக, ஹீரோ மோட்டோகார்பின் எக்ஸ்பல்ஸ் 200 பைக்கிற்கு சிறப்பான வரவேற்பு கிடைக்க ஆரம்பித்ததை பார்த்து, KLX230 பைக்கை 2024ஆம் ஆண்டின் இறுதியில் கவாஸாகி அறிமுகம் செய்தது.

kawasaki introduced my27 klx230 motorcycles

ஆரம்பத்தில் ரூ.3.30 லட்சம் என்கிற விலையில் அறிமுகம் செய்யப்பட்டதால், கவாஸாகி KLX230 பைக்கை பலர் கண்டுக் கொள்ளவில்லை. அதனை தொடர்ந்து, கடந்த 2025ஆம் ஆண்டின் ஆகஸ்ட் மாதத்தில் மீண்டும் KLX230 பைக்கை கவாஸாகி நிறுவனம் அறிமுகப்படுத்தியது. இந்த முறை பெரும்பான்மையாக KLX230 பைக் இந்தியாவிலேயே உருவாக்கப்பட்டு, அறிமுகம் செய்யப்பட்டது.

இதனால், பைக்கின் விலையும் மிகவும் குறைவாக ரூ.1.99 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டது. இந்த நிலையில், அடுத்த 2027ஆம் ஆண்டிற்கான அப்கிரேட்கள் உடன் கவாஸாகி KLX230 பைக்குகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. ஸ்டாண்டர்ட், S மற்றும் R S என மூன்று விதமான மாடல்களில் புதிய மை27 KLX230 பைக்குகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

kawasaki introduced my27 klx230 motorcycles

இதில், ஸ்டாண்டர்ட் KLX230 மற்றும் KLX230 S மாடல்களின் அறிமுக எக்ஸ்-ஷோரூம் விலைகள் ஒரே மாதிரியாக ரூ.2.19 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளன. இதில் ஸ்டாண்டர்ட் மாடல் ஏற்கனவே விற்பனையில் இருக்கும் நிலையில், KLX230 S புதியதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது உயரம் குறைவானவர்களுக்காக, தாழ்வான ரைடர் சீட் உடன் கிடைக்கும்.

ஸ்டாண்டர்ட் KLX230 பைக்கின் விலை மை26 மாடலை காட்டிலும் ரூ.35,000 அதிகமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விலை அதிகரிப்பிற்கு ஏற்ப பைக்கின் தோற்றம், தொழிற்நுட்ப வசதிகள் மற்றும் மெக்கானிக்கல் பாகங்களில் எந்த அப்கிரேட்களும் வழங்கப்படவில்லை. இவற்றுடன் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள மை27 KLX230R S பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை ஆனது ரூ.1.89 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

புதிய KLX230R S பைக்கை பொது சாலையில் பயன்படுத்த முடியாது; மூடிய வளாகத்திற்குள் மற்றும் ஆஃப்-ரோடு ரைடிங்கிற்கு மட்டுமே பயன்படுத்த முடியும். மற்ற ஸ்டாண்டர்ட் KLX230 மற்றும் KLX230 S பைக்குகளும் பார்ப்பதற்கு சாலையில் அனுமதிக்கப்படாதவையாக தெரிந்தாலும், அவை பொது சாலையில் பயன்படுத்துவதற்கு அனுமதி பெற்றவை ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: சாதாரணமான சாலை மற்றும் ஆஃப்-ரோடு சாலைகள் என இரண்டிலும் பயன்படுத்தக்கூடிய கவாஸாகியின் KLX பைக்குகள் எடை குறைவானவை ஆக உருவாக்கப்படுவதால், அவற்றை ஹேண்ட்லிங் செய்வது எளிதாகும். KLX பைக்குகளின் நம்பகத்தன்மை ஆனது பல நாடுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது. அதற்கேற்ப கவாஸாகி KLX பைக்குகளை பயன்படுத்துவது எளிதாக உள்ளது மற்றும் அவற்றில் போதுமான ஆஃப்-ரோடு திறன்கள் வழங்கப்படுகின்றன.

இருப்பினும், KLX230 பைக்கின் விலை 2027ஆம் ஆண்டிற்காக ரூ.35,000 அளவிற்கு அதிகரிக்கப்பட்டு இருப்பது இந்த பைக்கை வாங்க விரும்புவோரின் எண்ணிக்கையை சற்று குறைக்கலாம். ஏனெனில், இந்த விலை அதிகரிப்பிற்கு ஏற்ப பைக்கில் எந்தவொரு அப்கிரேட்களையும் கவாஸாகி வழங்கவில்லை மற்றும் விலை அதிகரிப்புக்கான எந்தவொரு காரணத்தையும் தெரிவிக்கவில்லை.

Article Published On: Wednesday, June 24, 2026, 23:28 [IST]
English summary
Kawasaki introduced my27 klx230 motorcycles in india price features details
மேலும்... #kawasaki #new launches #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out