எலிமினேட்டர் மற்றும் நின்ஜா 500 பைக்குகளின் விற்பனையை இந்தியாவில் நிறுத்தும் கவாஸாகி

இந்தியாவில் ப்ரீமியமான பெர்ஃபாமன்ஸ் பைக்குகள் விற்பனை செய்து வரும் ஆட்டோமொபைல் நிறுவனங்களில் முக்கியமான ஒன்றாக இருந்து வருகிறது கவாஸாகி (Kawasaki). இந்நிலையில் இந்தியாவில் தாங்கள் விற்பனை செய்து வரும் சில பைக் மாடல்களின் விற்பனையை அந்நிறுவனம் நிறுத்தலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

கடந்தாண்டில் இருந்த E20 எரிபொருள் தான் இந்தியாவின் பிரதான எரிபொருளாக மாறிவிட்டது. 20 சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோல் தான் அனைத்து எரிபொருள் நிலையங்களிலும் விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனால் E20 எரிபொருளுக்கு ஏற்ப தயாரிக்கப்படாத பைக்குகளை அடிதுடியாக ஆட்டோமொபைல் நிறுவனங்கள் இந்த எரிபொருளுக்கு ஏற்ப அப்டேட் செய்தன.

Kawasaki Ninja 500

அந்த வரிசையில் கவாஸாகி நிறுவனமும் இந்தியாவில் தாங்கள் விற்பனை செய்து வந்த வல்கன் S, Z650RS, வெர்சிஸ் 650 ஆகிய பைக்குகளை E20 எரிபொருளில் பிரச்சினையில்லாமல் இயங்குவதற்கு ஏற்ப அப்டேட் செய்தது. ஆனால் சில பைக்குகளை இந்தப் புதிய எரிபொருள் கட்டுப்பாட்டிற்கு ஏற்ப அந்நிறுவனத்தால் மாற்ற முடியவில்லை, அல்லது மாற்ற விரும்பவில்லை எனக் கூறலாம்.

மேற்கூறிய பைக்குகள் அனைத்து CKD முறையில் இந்தியாவில் அசெம்பிள் செய்து விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இதனைத் தவிர்த்து எலிமினேட்டர் (Eliminator) மற்றும் நின்ஜா 500 (Ninja 500) ஆகிய பைக்குகளை இந்தியாவில் முழுவதுமாக இறக்குமதி செய்து விற்பனை செய்து வருகிறது கவாஸாகி. முழுவதுமாக இறக்குமதி செய்யப்படுவதால் சற்று கூடுதல் விலையையும் இந்த 500 சிசி பைக்குகள் கொண்டிருக்கின்றன.

Kawasaki Eliminator

அதிக விலை என்பதால் விற்பனையும் சற்று மந்தம் தான். எனவே இந்த பைக்குகளை E20 எரிபொருளில் இயங்குவதற்கு ஏற்ப அப்டேட் செய்வதைத் தவிர்த்துவிட்டு, ஒட்டுமொத்தமாக விற்பனையை நிறுத்தலாம் என கவாஸாகி முடிவெடுத்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகி வருகின்றன. புதிய வடிவிற்கு அப்டேட் செய்யப்படாமல், தற்போதைய வடிவிலேயே இந்த இரண்டு பைக்களும் இந்தியாவில் இருந்து விடைபெறவிருக்கின்றன.

இரண்டு பைக்குகளுமே ப்ரீமியமான 500 சிசி பிரிவிலேயே இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இரண்டு பைக்குகளிலுமே 451 சிசி, ட்வின் சிலிண்டர், லிக்விட்-கூல்டு இன்ஜின் தான் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த இன்ஜினானது 44.7 hp பவர் மற்றும் 42.6 Nm டார்க்கை உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டுள்ளது. மேலும் இந்த இன்ஜின் அசிஸ்ட் மற்றும் ஸ்லிப்பர் கிளட்ச் வசதியுடன் கூடிய 6 ஸ்பீடு கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது.

கவாஸாகி எலிமினேட்டர் பைக்கானது 6.16 லட்சம் ரூபாய் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கவாஸாகி நின்ஜா 500 பைக்கானது சற்று குறைவாக 5.66 லட்சம் ரூபாய் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

500 சிசி பிரிவில் இந்த இரண்டு பைக்குகளை மட்டுமே அந்நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. மேலும் இவை இரண்டும் மிக மிகக் குறைவாகவே விற்பனையாகி வருகின்றன. குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் கடந்த ஏப்ரல் மாதம் 1 யூனிட் கூட விற்பனையாகவில்லை, மற்ற மாதங்களில் 5 யூனிட்டுகளுக்கும் குறைவாகவே விற்பனையாகியிருக்கிறது. எனவே இந்த பைக்குகளின் விற்பனையை நிறுத்துவது இந்தியாவில் கவாஸாகியை எந்த வகையிலும் பெரிதாக பாதிக்காது என்றே தெரிகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: 2026ம் ஆண்டிற்காக இன்னும் இந்த இரண்டு பைக்குகளும் அப்டேட் செய்யப்படவில்லை. 2025 வெர்ஷனே இன்னும் விற்பனையில் இருக்கிறது. இந்த பைக்குகளின் விற்பனையை கவாஸாகி நிறுத்தும் பட்சத்தில் தற்போது ஸ்டாக்கில் இருக்கும் யூனிட்டுகளை பல்வேறு சலுகைகளுடன் வாடிக்கையாளர்கள் பெற முடியும். எனவே கவாஸாகி பைக் அல்லது ட்வின் சிலிண்டர் இன்ஜின் பைக் வாங்க விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு இது ஒரு சிறப்பான வாய்ப்பு.

Article Published On: Monday, June 15, 2026, 16:13 [IST]
English summary
Kawasaki may discontinue eliminator and ninja 500 bikes in india
மேலும்... #kawasaki #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out