கவாஸாகியின் புதிய பைக்கை நாட்டிலேயே முதல் ஆளாக வாங்கிய பெண்! அப்படி என்ன இருக்கு இந்த பைக்கில்?

கவாஸாகி நிறுவனத்தின் புதிய KLX 230 மோட்டார்சைக்கிளை இந்தியாவில் முன்பதிவு செய்த வாடிக்கையாளர்களுக்கு டெலிவிரி வழங்கும் பணிகள் நாடு முழுவதும் துவங்கப்பட்டுள்ளன. இதனை உறுதிப்படுத்தும் விதமாக மும்பையில் கவாஸாகி ஷோரூம் ஒன்றில் வாடிக்கையாளர் ஒருவருக்கு பைக் டெலிவிரி செய்யப்பட்ட போது எடுக்கப்பட்ட வீடியோ 'அன்சென் கவாஸாகி மும்பை' என்கிற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

கவாஸாகியின் புதிய அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிளாக KLX 230 சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இது ஒரு ட்யூயல்-ஸ்போர்ட் மோட்டார்சைக்கிளாகும். அதாவது, கரடுமுரடான அட்வென்ச்சர் பயணங்களுக்கு பயன்படுத்துவது மட்டுமின்றி, சாதாரணமான சாலைகளிலும் இந்த மோட்டார்சைக்கிளை பயன்படுத்தலாம். பெரும்பாலும் இவ்வாறான தோற்றம் கொண்ட பைக்குகள் பொது சாலைகளில் சட்டப்படி அனுமதிக்கப்படுவது இல்லை.

kawasaki klx 230 deliveries start

அதாவது, சொந்த இடத்திற்குள், வளாகத்திற்குள் மட்டுமே பயன்படுத்த முடியும். கவாஸாகியிலும் கூட அவ்வாறான பைக்குகள் நிறைய உள்ளன. ஆனால், புதிய கவாஸாகி KLX 230 பைக்கை சாலையில் பயன்படுத்த அனுமதி உள்ளது. பொது சாலையில் பயன்படுத்த அனுமதிக்கப்படாத மற்ற பைக்குகளை முழுவதுமாக வெளிநாட்டில் உருவாக்கி இந்தியாவில் கவாஸாகி நிறுவனம் இறக்குமதி செய்கிறது.

ஆனால், KLX 230 பைக்குகள் வெளிநாடுகளில் இருந்து பாகங்களாக கொண்டுவரப்பட்டு, இந்தியாவிலேயே அசெம்பிள் செய்யப்படுகின்றன. இதன் மூலமாக பைக்கிற்கான செலவு குறையும் என்பதால், பைக் விலையை குறைவாக நிர்ணயிக்க முடியும். KLX 230 பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ. லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

kawasaki klx 230 deliveries start

மேலும், இவ்வாறு உள்நாட்டிலேயே அசெம்பிள் செய்வதால் விரைவாக வாடிக்கையாளர்களுக்கு டெலிவிரி செய்யவும் முடியும். அதன்படியே, அறிமுகம் செய்யப்பட்டு குறுகிய காலத்தில் கவாஸாகி KLX 230 பைக்குகள் வாடிக்கையாளர்களை விரைவாக சென்றடைய துவங்கியுள்ளன. இந்த பைக்கில் 233சிசி சிங்கிள்-சிலிண்டர், ஏர்-கூல்டு என்ஜின் உள்ளது. இந்த என்ஜின் உடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது.

அதிகப்பட்சமாக 8,000 ஆர்பிஎம் வேகத்தில் 18.1 பிஎச்பி மற்றும் 6,400 ஆர்பிஎம் வேகத்தில் 18.3 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக் கூடியதாக இந்த என்ஜின் உள்ளது. அதேநேரம், குறைந்த வேகத்தில் இயங்கும்போதும், மிட்-ரேஞ்ச் வேகத்தில் இயங்கும்போதும் கூட சிறந்த செயல்படுதிறனை வழங்கும் வகையில் இந்த என்ஜின் ட்யூன் செய்யப்பட்டுள்ளது.

ஆஃப்-ரோடு பயணங்களுக்கான தொழிற்நுட்பங்கள் இருக்கும் அதேவேளையில், இந்த பைக்கை நெடுஞ்சாலைகளிலும் எளிதாக ஹேண்ட்லிங் செய்யலாம் என கவாஸாகி கூறுகிறது. KLX 230 பைக்கின் முக்கிய சிறப்பம்சமே அதன் குறைவான எடையிலான உடலமைப்பு ஆகும். இந்த பைக்கின் எடை வெறும் 139 கிலோ ஆக உள்ளது. இதனால், எத்தகைய நிலப்பரப்பிலும் இந்த பைக்கை எளிதாக ஹேண்ட்லிங் செய்ய முடியும்.

இரும்பு குழாய் ஃபிரேமில் வடிவமைக்கப்படும் KLX 230 பைக்கில் சஸ்பென்ஷனுக்கு முன்பக்கத்தில் 240மிமீ டிராவல் உடன் 37மிமீ டெலெஸ்கோபிக் ஃபோர்க்குகளும், பின்பக்கத்தில் 250மிமீ டிராவல் உடன் சுமக்கும் சுமைக்கு ஏற்ப அட்ஜெஸ் செய்யக்கூடிய லிங்க்-டைப் மோனோஷாக் வழங்கப்பட்டுள்ளது. இந்த பைக்கின் முன் சக்கரம் 21 இன்ச்சிலும், பின் சக்கரம் சற்று சிறியதாக 18 இன்ச்சிலும் உள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மற்ற கவாஸாகி பைக்குகளுடன் ஒப்பிடுகையில், KLX 230 முற்றிலும் வேறுப்பட்டது என்றே சொல்ல வேண்டும். இன்னும் சொல்லப்போனால், இந்த பைக்கை சாலைக்கு கொண்டுச் சென்றால் மற்ற அனைத்து பைக்குகளில் இருந்தும் பெரியதாக வேறுப்பட்டு தெரிவீர்கள். இத்தகைய கவாஸாகி பைக்குகள் தான் தற்போது பொது சாலைகளுக்கு வர துவங்கியுள்ளன.

Article Published On: Thursday, June 11, 2026, 15:19 [IST]
English summary
Kawasaki officially commenced deliveries of new klx 230 dual sport motorcycle
மேலும்... #kawasaki #bike showroom #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out