180 கிமீ ரேஞ்சு கொண்ட புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்தியாவில் வெளியானது
இந்தியாவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் விற்பனை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், நிறைய புதிய நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளை வெளியிட ஆர்வம் காட்டி வருகின்றன. அந்த வரிசையில் புதிதாக இணைந்திருக்கிறது கீவே (Keeway). இதுவரை இந்தியாவில் எரிபொருள் பைக்குகளை மட்டுமே விற்பனை செய்து வந்த கீவே, முதல் முறையாக ப்ரீமியமான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது.
சீனாவைச் சேர்ந்த கீவே சீனாவில் விற்பனை செய்யப்படும் ஹைப்வோல்ட் (Hypevolt) என்ற ஸ்கூட்டரையே இந்தியாவில் வெளியிட்டுள்ளது. சீனாவில் EZI என்ற கீவேயின் துணை நிறுவனம் தான் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அந்நாட்டில் விற்பனை செய்து வருகிறது. தற்போது அதனை இந்தியாவில் தங்கள் பிராண்டின் கீழ் ஹைப்வோல்ட்-R என்ற பெயரில் வெளியிட்டுள்ளது கீவே.

இந்தியாவில் அதிக ரேஞ்சு கொண்ட எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் பட்டியலில் புதிய ஹைப்வோல்ட்-R எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் சேர்கிறது. ஆம், 180 கிமீ வரையிலான ரேஞ்சைக் கொண்ட ஸ்கூட்டராக இது இருக்கிறது. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் 5 kWh பேட்டரி பேக் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த பேட்டரி பேக்கானது ரிமூவபிள் வகையைச் சேர்ந்ததாக இருப்பதுடன், 180 கிமீ வரையிலான சான்றளிக்கப்பட்ட ரேஞ்சைக் கொடுக்கும் திறனையும் கொண்டிருக்கிறது.
இந்த ஸ்கூட்டரில் அதிகபட்சமாக 12 kW பவரை உற்பத்தி செய்யும் திறன் கொண்ட PMS எலெக்ட்ரிக் மோட்டார் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. எக்கோ, நார்மல் மற்றும் ஸ்போர்ட் என மூன்று ரைடிங் மோடுகளைக் கொண்டிருக்கும் இந்த ஸ்கூட்டரானது, ஸ்போர்ட் மோடில் அதிகபட்சமாக மணிக்கு 115 கிமீ வரையிலான வேகத்தில் செல்லும் திறனைப் பெற்றிருக்கிறது.

இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் இரண்டு பக்கமும் 14 இன்ச் வீல்கள் டியூப்லெஸ் டயர்களுடன் கொடுக்கப்பட்டிருக்கின்றன. சஸ்பென்ஷனுக்காக முன்பக்கம் டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் பின்பக்கம் 5 ஸ்டெப் அட்ஜஸடபிள் ஷாக் அப்சார்பர்கள் செட்டப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. பாதுகாப்பிற்கா டூயல் சேனல் ABS வசதி இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் கொடுக்கப்பட்டுள்ளது.
ப்ரீமியமான எலெக்ட்ரிக் ஸ்கூட்டரான இதில், LED முகப்பு விளக்குகள், LED லைட் ஸ்ட்ரிப், ப்ளூடூத் கனெக்டிவிட்டியுடன் கூடிய 5 இன்ச் TFT டிஸ்பிளே ஆகிய அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இத்துடன் ரிவர்ஸ் மோடு, டைப்-A மற்றும் டைப்-C சார்ஜிங் போர்ட்கள், 27 லிட்டர் அண்டர்ஸீட் ஸ்டோரேஜ் ஆகிய வசதிகளும் கொடுக்கப்பட்டுள்ளன. 770 மிமீ சீட் உயரத்துடன் அனைவரும் எளிதாக பயன்படுத்தும் வகையிலான ஒன்றாகவே இந்த ஹைப்வோல்ட-R எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இருக்கிறது.
டூயல் சேனல் ABS வசதி மட்டுமின்றி, ட்ராக்ஷன் கண்ட்ரோல், ஹில் ஹோல்டு அசிஸ்ட், ஹில் டிஸண்டு கண்ட்ரோல், க்ரூஸ் கண்ட்ரோல், பிளைண்டு ஸ்பாட் டிடெக்ஷன் மற்றும் ரிவர் கேமரா ஆகிய பாதுகாப்பு அம்சங்களும் இந்த கீவே எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த ப்ரீமியமான எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை 1.99 லட்சம் ரூபாய் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் இந்தியாவில் வெளியிட்டுள்ளது கீவே. 5,000 ரூபாய் செலுத்தி இப்போத இந்த ஹைப்வோல்ட்-R எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை நீங்கள் முன்பதிவு செய்யலாம். கிரிஸ்டல் ஒயிட் மற்றும் பிளாட்டினம் கிரே என இரண்டு தனித்துவமான நிறங்களில் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் கிடைக்கிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மேலே கூறியிருப்பது போல இந்தியாவில் அதிக ரேஞ்சைக் கொண்டிருக்கும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் வரிசையில் புதிதாக இணைகிறது இந்த கீவே ஹைப்வோல்ட்-R. ஆனால் விலை அதிகம் என்பதாலும், கீவே இந்தியாவில் பரீட்சயமில்லாத பிராண்டு என்பதாலும் அதிகளவில் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனையாகுமா என்பது சந்தேகம் தான். ஆனால், வேண்டும் என்று கேட்கும் வாடிக்கையாளர்களுக்கு ப்ரீமியமான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் சாய்ஸ் ஒன்று கிடைத்திருக்கிறது.


Click it and Unblock the Notifications