140 கிமீ ரேஞ்சுடன் இந்தியாவில் வெளியிடப்படும் புத்தம் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இது தான்

இந்தியாவில் தற்போது வரை எரிபொருள் இருசக்கர வாகனங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறது கீவே (Keeway) என்ற சீனாவைச் சேர்ந்த இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனம். ஆனால் விரைவில் எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களிலும் அந்நிறுவனம் கவனம் செலுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் தங்களது முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டராக எந்த மாடலை அந்நிறுவனம் வெளியிடலாம் என்பது குறித்தும் தகவல் வெளியாகியுள்ளது.

கீவே நிறுவனத்தின் துணை நிறுவனமாக உலகளவில் எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களை விற்பனை செய்து வருகிறது EZI. இந்த பிராண்டின் ஹைப்வோல்ட் (Hypevolt) என்ற ப்ரீமியமான எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை தங்களது முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டராக இந்தியாவில் கீவே அறிமுகப்படுத்தலாம் எனத் தகவல்கள் கூறுகின்றன. இந்தியாவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் சந்தை வேகமாக வளர்ந்து வருவதைத் தொடர்ந்து இந்த பரிசீலனையில் அந்நிறுவனம் இறங்கியிருக்கலாம் எனத் தெரிகிறது.

EZI Hypevolt

இந்த EZI ஹைப்வோல்ட் என்பது 125 சிசி எரிபொருள் ஸ்கூட்டருக்கு இணையான ஒரு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆகும். இதன் பெர்ஃபாமன்ஸ் 125 சிசி ஸ்கூட்டருக்கு இணையாகவே இருக்கும். ஆனால் இதில் கொடுக்கப்பட்டிருக்கும் தொழில்நுட்ப மற்றும் பாதுகாப்பு அம்சங்களே இதனை ஒரு ப்ரீமியமான எலெக்ட்ரிக் ஸ்கூட்டராக மாற்றுகின்றன. இந்த ஸ்கூட்டர் குறித்த முழுமையான தகவல்களை இங்கே நாம் பார்க்கலாம்.

V1 மற்றும் V2 என இரண்டு வேரியன்ட்களாக இந்த ஹைப்வோல்ட் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை உருவாக்கியிருக்கிறது EZI. அடிப்படையான V1 வேரியன்டில் ஹப் மவுண்டட் எலெக்ட்ரிக் மோட்டாரும், V2 வேரியன்டில் மிட் மவுண்டட் மோட்டாரும் கொடுக்கப்பட்டிருக்கிறது. சீனாவில் தயாரிக்கப்படும் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை முழுவதுமாக இறக்குமதி செய்து இந்தியாவில் கீவே விற்பனை செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

EZI Hypevolt

ஹைப்வோல்ட் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் V1 வேரியன்டில் 72 Volts, 35 Ah லித்தியம் அயன் பேட்டரி கொடுக்கப்பட்டிருக்கிறது. இது 2.52 kWh-க்கு இணையான அளவாகும். இந்த பேட்டரி பேக்குடன் 65 கிமீ வரையிலான ரேஞ்சை மட்டுமே இந்த அடிப்படை வேரியன்ட் கொண்டிருக்கிறது. மேலும் 2000 Watts ரேட்டட் எலெக்ட்ரிக் மோட்டாருடன் மணிக்கு 80 கிமீ வேகத்தில் செல்லும் திறனையும் இந்த அடிப்படை வேரியன்ட் கொண்டிருக்கிறது.

டாப் எண்டு V2 வேரியன்டானது இதே பேட்டரி பேக்கின் இரண்டு யூனிட்டுகளைக் கொண்டிருக்கிறது. இதனால் ரேஞ்சும் 140 கிமீ ஆக உயர்கிறது. 5 kWh-க்கு இணையான பேட்டரி பேக் செட்டப்பாக இதனை நாம் கூறலாம். இந்த வேரியன்டில் 6,000 Watts ரேட்டட் எலெக்ட்ரிக் மோட்டார் செட்டப் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த பவர்ட்ரெயின் செட்டப்புடன் மணிக்கு 115 கிமீ வேகத்தில் செல்லும் திறனைக் கொண்டுள்ளது EZI ஹைப்வோல்ட் V2 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வேரியன்ட்.

இந்த ஸ்கூட்டரில் டூயல் LED முகப்பு விளக்குகள், 5 இன்ச் TFT டிஸ்பிளே, கீலெஸ் ஸ்டார்ட் மற்றும் லாக், இரண்டு வீல்களிலும் டிஸ்க் பிரேக்குகள், ட்ராக்ஷன் கண்ட்ரோல் சிஸ்டம், ஹில் டிஸண்டு கண்ட்ரோல், ஹில் ஹோல்டு கண்ட்ரோல், ரிவர்ஸ் கேமரா, இன்டலிஜன்ஸ்ட் க்ரூஸ் கண்ட்ரோல், ADAS, டூயல் சேனல் ABS உள்ளிட்ட மேம்பட்ட வசதிகளைக் கொடுத்துள்ளது EZI.

ஒரேயொரு பேட்டரியைக் கொண்டிருப்பதனால் V1 வேரியன்டானது 124 கிலோ எடையையும், இரண்டு பேட்டரிக்களுடன் V2 வேரியன்டானது 150 கிலோ எடையையும் கொண்டுள்ளது. 770 மிமீ சீட் உயரம் அனைத்து தரப்பினரும் பயன்படுத்தும் வகையிலேயே இருக்கிறது. 14 இன்ச் அலாய் வீல்கள், ஸ்பிளிட் சீட் செட்டப் மற்றும் ஷார்ப்பான பாடி பேனல்கள் ஆகிய டிசைன் அம்சங்களை இந்த ஹைப்வோல்ட் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் கொண்டிருக்கிறது.

அடுத்து இந்தியாவில் வெளியிடத் திட்டமிடப்பட்டிருக்கும் அல்ட்ராவைலட் டெஸராக்ட் எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்குப் போட்டியாக இந்த EZI ஹைப்வோல்ட் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை கீவே களமிறக்கலாம் எனத் தெரிகிறது. ப்ரீமியமான, ஷார்ப்பான மற்றும் முற்றிலும் வித்தியாசமான ஒரு எலெக்ட்ரிக் ஸ்கூட்டராக டெஸராக்டை அல்ட்ராவைலட் உருவாக்கி வருவது குறிப்பிடத்தக்கது. அடுத்த சில மாதங்களில் கீவேயின் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் வெளியீட்டை நாம் எதிர்பார்க்கலாம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: பேப்பரில் இந்தியாவிற்கு ஏற்ற மாதிரியான எலெக்ட்ரிக் ஸ்கூட்டராக இந்த ஹைப்வோல்ட் தோன்றவில்லை. CBU முறையில் இறக்குமதி, மேம்பட்ட அம்சங்கள் எல்லாம் சேர்த்து மிகவும் அதிக விலையிலேயே இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வெளியாக வழிவகுக்கும். அது எந்தளவிற்கு பட்ஜெட்டில் விரும்பும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் எனத் தெரியவில்லை. ஆனால் இந்த ஸ்கூட்டரை கீவே இந்தியாவில் வெளியிடவிருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை. எனவே பொறுத்திருந்து பார்க்கலாம்.

Article Published On: Thursday, May 28, 2026, 12:24 [IST]
English summary
Keeway may launch ezi hypevolt electric scooter in india soon
மேலும்... #keeway #electric scooter #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out