ஷைன்125 பைக்கிற்கு போட்டியாக விற்பனை செய்யப்பட்டு வரும் ரெட்ரோ பைக் மாடல்.. எல்லா அம்சமும் அசத்தலா இருக்கு

நியோ ரெட்ரோல் ஸ்டைலில் ஒரு பைக் வேண்டும் என்றால் நேராக 150 சிசி பிரிவிற்கு தான் செல்ல வேண்டும் என்று இல்லை, 125 சிசி பைக்கைக் கூட வாங்கலாம். அட ஆமாங்க, 125 சிசி பிரிவில் நியோ ரெட்ரோ டிசைனில் சூப்பரான ஒரு பைக் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த பைக்கைக் குறித்து தான் இங்கே நாம் பார்க்கப் போகிறோம்.

இங்கே நாம் பேசிக் கொண்டிருப்பது கீவே (Keeway) நிறுவனத்தின் SR 125 பைக் மாடலைப் பற்றித் தான். இந்தியாவில் கீவே விற்பனை செய்து வரும் மூன்று பைக் மாடல்களில் ஒன்று இந்த SR 125. பைக்கின் டிசைனை நியோ ரெட்ரோவாக கீவே மிரட்டியிருக்கும். கீவே என்பது சீனாவைச் சேர்ந்த இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனம். இந்தியாவில் ஆதிஷ்வர் ஆட்டோ ரைடு இந்தியா என்ற நிறுவனத்தின் மூலம் கீவே பைக்குகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

Keeway SR 125

பார்ப்பதற்கு ஒரு 125 சிசி பைக் போலவே இல்லாமல் இருக்கும் இந்த 125 சிசி பைக் ரூ.1.25 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனை செய்து வருகிறது அந்நிறுவனம். 2022ம் ஆண்டிலிருந்து இந்த பைக் மாடல் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதுவரை நிறைய பேர் வாங்காத, தனித்துவமான, அதேநேரம் விலை குறைவான பைக் மாடல் வேண்டும் என்பவர்கள் இந்த SR 125 நியோ ரெட்ரோ பைக் மாடலை வாங்கலாம்.

கிளாஸி ரெட், கிளாஸி ஒயிட் மற்றும் கிளாஸி பிளாக் ஆகிய மூன்று நிறங்களில் இந்த 125 சிசி பைக் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த பைக்கில் பயன்படுத்தப்பட்டிருக்கும் 125 சிசி, சிங்கிள் சிலிண்டர், ஏர்-கூல்டு இன்ஜினானது, 9,000 rpm-ல் 9.7 hp பவர் மற்றும் 7,500 rpm-ல் 8.2 Nm டார்க்கை உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டுள்ளது. இந்த இன்ஜினானது 5 ஸ்பீடு கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது.

Keeway SR 125

லுக்கில் மிரட்டினாலும் பவர் மற்றும் டார்க் அளவுகள் குறைவு தான். ஹோண்டா ஷைனை விட குறைவான பவர் மற்றும் டார்க்கையே இந்த SR 125-ன் இன்ஜின் உற்பத்தி செய்கிறது. ஹோண்டா ஷைன் 125 பைக் மாடலானது 10.7 hp பவர் மற்றும் 11 Nm டார்க்கை உற்பத்தி செய்யும் இன்ஜினைக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. அதிகபட்சமாக மணிக்கு 100 கிமீ வரையிலான வேகத்தில் செல்லும் திறனைக் கொண்டுள்ளது கீவே SR 125.

இந்த 125 சிசி பைக்கின் முன்பக்கம் டெலிஸ்கோபிக் ஃபோர்க மற்றும் பின்பக்கம் 5 ஸ்டெப் அட்ஜஸ்டபிள் ஷாக் அப்சார்பர்கள் சஸ்பென்ஷன் செட்டப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. பைக்கின் இரண்டு பக்கமும் 17 இன்ச் வயர் ஸ்போக் வீல்கள், டூயல் பர்பஸ் டயர்களுடன் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இத்துடன் 300 மிமீ டிஸ்க் பிரேக்கும் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஷைன் 125 பைக்கை விட குறைவான பவரைக் கொண்டிருக்கும் நிலையில், எடையும் அதிகமாக 120 கிலோவாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

ஹோண்டா ஷைன் 125, டிவிஎஸ் ரெய்டர், ஹோண்டா SP125 மற்றும் பஜாஜ் பல்சர் 125 உள்ளிட்ட 125 சிசி பைக்குகளுக்கு மாற்றான தனித்துவமான பைக் வேண்டும் என்பவர்கள் இந்த கீவே SR 125 பைக்கை முயற்சி செய்யலாம். 125 சிசி பைக் என்றாலும் விலை 150 சிசி பைக்குகளுக்கு இணையாக இருப்பதும் இங்கே குறிப்பிட வேண்டியது. மேலே கூறியது போல ரூ.1.25 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் இந்த பைக் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மேலே குறிப்பிட்டிருப்பது போல குறைவான பவர் என்றாலும், கூடுதல் விலை என்றாலும் பரவாயில்லை, தனித்துவமான லுக் வேண்டும் என்பவர்கள் இந்த கீவே SR 125 பைக்கை முயற்சி செய்யலாம். ஆனால், தமிழ்நாட்டில் மிகச்சில இடங்களில் மட்டுமே இந்த பைக்கை விற்பனை செய்யும் டீலர்ஷிப்கள் இருக்கின்றன. எனவே சர்வீஸ் காரணத்தினால் இதனை நிறைய வாடிக்கையாளர்கள் வாங்க முடியாது.

Article Published On: Wednesday, April 29, 2026, 8:29 [IST]
English summary
Keeway sr 125 bike design engine variant colour and other mechanical details
மேலும்... #keeway #bike #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+