புதிதாக அப்டேட் செய்யப்பட்ட 300 சிசி பைக்.. அசத்தலான அம்சங்களுடன் வெளியாகியுள்ளது!

2026ம் ஆண்டிற்கான மேம்படுத்தப்பட்ட V302C பைக்கை இந்தியாவில் வெளியிட்டுள்ளது கீவே (Keeway). சீனாவைச் சேர்ந்த இந்த பைக் தயாரிப்பு நிறுவனம் இந்தியாவில் சில பைக் மாடல்களை மட்டும் விற்பனை செய்து வருகிறது. ஆதிஷ்வர் ஆட்டோ ரைடு இந்தியா என்ற நிறுவனமே இந்தியாவில் கீவே பைக் மாடல்களை விநியோகம் செய்து வருகிறது. தற்போது புதிய V302C பைக்கில் என்னென்ன மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றன என்பதைப் பார்க்கலாம்.

2026ம் ஆண்டிற்கான அப்டேட்டாக இந்த பைக்கில் புதிய நிறத்தை மட்டும் கொடுத்துள்ளது கீவே. இதுவரை ரெட் மற்றும் பிளாக் ஆகிய இரண்டு நிறங்களில் மட்டும் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது யெல்லோ நிறமும் புதிதாக சேர்க்கப்பட்டிருக்கிறது. இந்தப் புதிய நிறம் கொடுக்கப்பட்டிருப்பதைத் தவிர்த்து புதிய V302C பைக்கில் வேறு எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

Keeway V302C

இந்த பைக்கில் 298 சிசி, V-ட்வின் இன்ஜின் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜினானது 8,500 rpm-ல் 29.5 hp பவர் மற்றும் 6,500 rpm-ல் 26.5 Nm டார்க்கை உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டுள்ளது. இத்துடன் பெல்ட் டிரைவ் டிரான்ஸ்மிஷன் சிஸ்டம் கொடுக்கப்பட்டிருக்கிறது. பைக்கின் முன்பக்கம் டெலிஸ்கோபிக் ஃபோர்க் சஸ்பென்ஷன் சிஸ்டமும், பைக்கின் பின்பக்கம் ட்வின் ஷாக் அப்சார்பர்கள் சஸ்பென்ஷன் சிஸ்டமும் கொடுக்கப்பட்டுள்ளது.

இரண்டு பக்கமும் கேஸ்ட் அலாய் வீல்கள் கொடுக்கப்பட்டிருக்கும் நிலையில், பைக்கின் முன்பக்கம் 300 மிமீ டிஸ்க் பிரேக்கும், பைக்கின் பின்பக்கம் 240 மிமீ டிஸ்க் பிரேக்கும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த 300 சிசி பைக்கில், முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், டூயல் சேனல் ABS, LED விளக்குகள், சிங்கிள் பீஸ் சீட் மற்றும் 15 லிட்டர் எரிபொருள் டேங்க் ஆகிய அம்சங்களையும் கீவே நிறுவனம் கொடுத்திருக்கிறது.

Keeway V302C

இது 350 சிசிக்கு கீழான இன்ஜின் கொண்ட பைக் மாடல் என்பதால் கடந்தாண்டு GST வரி மறுசீரமைப்பு செய்யப்பட்ட போது பைக்கின் விலை ரூ.3.99 லட்சமாகக் குறைக்கப்பட்டது. தற்போது இந்த அப்டேட்டுடன் பைக்கின் விலை ரூ.4.22 லட்சமாக உயர்த்தப்பட்டிருக்கிறது. GST வரி மறுசீரமைப்பிற்கு முன்னதாக இந்த V302C பைக் ரூ.4.29 லட்சம் என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. தற்போது மீண்டும் அதனையொட்டி விலைக்கு இந்த பைக் வந்திருக்கிறது.

இந்த V302C பைக்கைத் தவிர்த்து, SR 125 மற்றும் SR 250 ஆகிய சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் கொண்ட கீவே பைக் மாடல்களும் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த கீவே பைக்குகளை இந்தியாவில் விற்பனை செய்யும் ஆதிஷ்வர் ஆட்டோ ரைடு இந்தியா நிறுவனம், இந்த பிராண்டின் பைக்குகள் மட்டுமின்றி, ஸான்டெஸ், QJ மோட்டார் மற்றும் பெனல்லி ஆகிய நிறுவனங்களின் பைக் மாடல்களையும் இந்தியாவில் விற்பனை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் கீவே நிறுவனத்தின் விலை குறைவான பைக் என்றால் அது SR 125 தான். 125 சிசி, சிங்கிள் சிலிண்டர் இன்ஜினுடன், ரூ.1.25 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் அந்த பைக் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல் 223 சிசி இன்ஜின் கொண்ட SR 250 பைக் மாடலானது இந்தியாவில் ரூ.1.54 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இது ஒரு நல்ல பைக் மாடல் தான் என்றாலும், 300 சிசி, ட்வின் சிலிண்டர் இன்ஜினுக்கு குறைவான பவருடன் இருப்பதோடு, 450 சிசி பைக்கிற்கு இணையான விலையில் விற்பனையாகி வருகிறது. இதே விலையில் இதனை விட மிகச்சிறப்பான அம்சங்களைக் கொண்ட பைக்குகள் இந்தியாவில் விற்பனையில் இருக்கும் போது, இதனை ஏன் வாங்க வேண்டும் என்ற கேள்வி எழுவதைத் தடுக்க முடியவில்லை.

Article Published On: Thursday, April 30, 2026, 11:54 [IST]
English summary
Keeway updated v302 twin cylinder engine bike in india check all details here
மேலும்... #keeway #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+