அதிக ரேஞ்ச் வழங்கும் புதிய கைனெட்டிக் DX+ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்!

கைனெட்டிக் எலெக்ட்ரிக் நிறுவனம் தனது DX எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் அதிக திறன் வாய்ந்த பேட்டரி தேர்வுகளுடன் மேம்படுத்தி விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. இதில் DX மாடலில் 3 kWh பேட்டரியும், அதிக பிரீமியம் அம்சங்கள் கொண்ட DX+ மாடலில் 3.1 kWh பேட்டரியும் வழங்கப்பட்டுள்ளது. மேலும், புதிய DX+ 3.1 kWh வேரியன்ட்டின் முக்கிய சிறப்பம்சமாக முழு சார்ஜ் செய்யும்பட்சத்தில் 132 கிமீ தூரம் வரை பயணிக்கும் ரேஞ்ச் வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

புதிய DX 3 kWh வேரியண்ட்டிற்கு ரூ.1,18,599 எக்ஸ்ஷோரூம் விலையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், அதிக திறன் கொண்ட பேட்டரியுடன் வரும் DX+ 3.1 kWh வேரியண்ட்டிற்கு ரூ.1,27,650 என்ற எக்ஸ்ஷோரூம் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இரு வேரியண்ட்டுகளும் ஏற்கனவே விற்பனையில் இருக்கும் 2.6 kWh மாடலுடன் தொடர்ந்து விற்பனை செய்யப்படும்.

Kinetic DX EV Scooter

புதிய கைனெட்டிக் DX+ எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் 3.1 kWh LFP பேட்டரி பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் IDC சான்றுபடி 132 கி.மீ ரேஞ்ச் கிடைக்கும் என கைனெட்டிக் தெரிவித்துள்ளது. முந்தைய DX+ 2.6 kWh பேட்டரி கொண்ட வேரியண்ட் 105 கி.மீ ஐடிசி ரேஞ்ச் கொண்டிருந்த நிலையில், புதிய மாடலில் ரேஞ்ச் கணிசமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நடைமுறை பயன்பாட்டில் சுமார் 105-110 கி.மீ வரை ரேஞ்ச் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read

அதிக ரேஞ்சை வழங்கும் வகையில் பேட்டரி திறன் மட்டுமின்றி திறன் வாய்ந்த மோட்டாருடன் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. புதிய DX+ வேரியண்ட்டில் இருக்கும் 3.1 kWh பேட்டரி மாடலின் BLDC ஹப் மோட்டார் அதிகபட்சமாக 3.8 kW பவரை வழங்கும்.

ஏற்கனவே விற்பனையில் உள்ள DX+ 2.6 kWh பேட்டரி மாடலின் மோட்டார் 4.78 kW அதிகபட்சமாக பவரை வழங்கும். ஆனால், புதிய வேரியண்ட்டில் பவர் குறைக்கப்பட்டுள்ளதால், ரேஞ்சுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு இருப்பது தெரிகிறது. புதிய மாடலில் Range மற்றும் Power என இரண்டு ரைடிங் மோடுகள் மட்டுமே உள்ளன. இதில், Turbo மோடு வழங்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Also Read

புதிய கைனெட்டிக் DX+ எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் 3.1 kWh பேட்டரி மாடலில் 0 முதல் 80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய சுமார் 3 மணி நேரம் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. K-Coast Tech எனப்படும் ரீஜெனரேட்டிவ் தொழில்நுட்பம் மூலம் ஸ்கூட்டர் வேகம் குறையும் நேரத்தில் ஆற்றலை மீட்டெடுக்கும் தொழில்நுட்ப வசதி கொடுக்கப்பட்டு இருக்கிறது.

மேலும் ரிவர்ஸ் பார்க்கிங் அசிஸ்ட், ஈஸி சார்ஜ் உள்ளிட்ட வசதிகளும் இடம்பெற்றுள்ளன. இந்த ஸ்கூட்டரில் 37 லிட்டர் கொள்திறன் கொண்ட பூட்ரூம் இடவசதி உள்ளது. இதில், 8.8 அங்குல எல்சிடி திரையுடன் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், எல்இடி விளக்குகள், பாஸ்வேர்டு அடிப்படையிலான இக்னிஷன், க்ரூஸ் கண்ட்ரோல் போன்ற அம்சங்களும் தொடர்கின்றன.

கைனெட்டிக் DX+ அதன் பாரம்பரிய தோற்றத்தை தக்கவைத்துள்ளது. அத்துடன், முழுமையான மெட்டல் பாடி அமைப்புடன் வருகிறது. முன்புறத்தில் 220 மிமீ டிஸ்க் பிரேக்கும், பின்புறத்தில் 130 மிமீ டிரம் பிரேக்கும் வழங்கப்பட்டுள்ளன. இரு சக்கரங்களிலும் 12 இன்ச் டியூப்லெஸ் டயர்கள் உள்ளன. இந்த ஸ்கூட்டர் 165 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் மற்றும் 1,315 மிமீ வீல்பேஸ் கொண்டுள்ளது. மேலும், IP67 தர பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளது.

புதிய கைனெட்டிக் DX+ எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் 3.1 kWh பேட்டரி வேரியண்ட்டானது சிவப்பு, நீலம், கருப்பு, சாம்பல் மற்றும் வெள்ளை ஆகிய வண்ணத் தேர்வுகளில் கிடைக்கும். புதிய வேரியண்ட்டுகளுடன் பண்டிகை கால சலுகைகளையும் கைனெட்டிக் அறிவித்துள்ளது. DX 3 kWh வேரியண்ட் வாங்குபவர்களுக்கு ரூ.2,000 வரையிலான சேமிப்பையும், DX+ வேரியண்ட் வாங்குபவர்களுக்கு ரூ.3,000 வரையிலான சேமிப்புச் சலுகைகளும் கிடைக்கும்.

மேலும், DX+ வேரியண்ட்டை தேர்வு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.8,999 மதிப்பிலான நீட்டிக்கப்பட்ட வாரண்டி, அமேஸான் தளத்தின் மூலம் வாங்கும்போது ரூ.5,000 கேஷ்பேக் சலுகை மற்றும் தகுதி நிபந்தனைகளுக்கு உட்பட்டு PM E-DRIVE திட்டத்தின் கீழ் ரூ.5,000 வரை கூடுதல் சேமிப்புகளை பெற முடியும். கூடுதல் தகவலாக இந்த புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை ஏழு வெளிநாடுகளில் விற்பனைக்கு கொண்டு செல்லவும் கைனெட்டிக் இவி நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

Article Corrections

This article has been updated with more information and relevant interlink articles.
Article Published On: Wednesday, September 9, 2026, 10:55 [IST]
English summary
Kinetic dx plus 3 1 kwh electric scooter launched price range features special offers details
மேலும்... #electric scooter #new launches #kinetic
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out