அடிமாட்டு விலையில் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை வெளியிட்டுள்ள நிறுவனம்

இந்தியாவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு தற்போது அதிக டிமாண்டு இருந்து வருகிறது. இதனால் நிறைய நிறுவனங்கள் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை அறிமுகப்படுத்தி வருகின்றன. அந்த வரிசையில் கோமாகி நிறுவனம் இரண்டு புதிய விலை குறைவான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை இந்தியாவில் வெளியிட்டுள்ளது. எம்ஜி ப்ரோ வி (MG Pro V) மற்றும் எம்ஜி ப்ரோ பிளஸ் (MG Pro+) ஆகிய இரண்டு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களையே கோமாகி வெளியிட்டுள்ளது.

இந்த இரண்டு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் விலை குறைவானது எம்ஜி ப்ரோ வி தான். இதனை 73,999 ரூபாய் என்க எக்ஸ்-ஷோரூம் விலையில் இந்தியாவில் வெளியிட்டுள்ளது கோமாகி. சற்று ப்ரீமியமான எம்ஜி ப்ரோ பிளஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு 79,999 ரூபாய் என விலை நிர்ணயம் செய்துள்ளது அந்நிறுவனம். இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் என்னென்ன சிறப்பம்சங்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன என்பதை இங்கே நாம் பார்க்கலாம்.

Komaki MG Pro V

இரண்டுமே எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கே உரிய நீட்டான சிம்பிளான டிசைனைக் கொண்டுள்ளது. பிளாக், ஃபிராஸ்ட் ஒயிட், கார்னெட் ரெட் மற்றும் மெட்டல் கிரே என நான்கு நிறங்களில் இந்த இரண்டு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களும் வெளியிடப்பட்டுள்ளன. இதில் மெட்டல் கிரே பார்ப்பதற்கு கொஞ்சம் கிளாஸியாக இருக்கிறது. LED விளக்குகளைக் கொண்டிருக்கும் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் இன்டிகேட்டரை பாடியுடன் சேர்த்தே வடிவமைத்திருக்கிறது கோமாகி.

இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் BLDC ஹப் மவுன்டட் எலெக்ட்ரிக் மோட்டார் செட்டப் கொடுக்கப்பட்டுள்ளது. இத்துடன் எம்ஜி ப்ரோ வி ஸ்கூட்டரில் 2.2 kWh லித்தியம் அயன் பாஸ்பேட் பேட்டரியும், எம்ஜி ப்ரோ பிளஸ் ஸ்கூட்டரில் 2.7 kWh பேட்டரி பேக்கும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பேட்டரி பேக்குகளை 4 மணி நேரத்தில் சார்ஜ் செய்ய முடியும் என கோமாகி தெரிவித்துள்ளது.

Komaki MG Pro Plus

சிறிய பேட்டரி கொண்ட எலெக்ட்ரிக் ஸ்கூட்டரானது 90-100 கிமீ வரையிலான சான்றளிக்கப்பட்ட ரேஞ்சையும், பெரிய பேட்டரி பேக் கொண்ட ஸ்கூட்டரானது 150 கிமீ வரையிலான ரேஞ்சையும் கொண்டிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளது கோமாகி. இரண்டு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் அதிகபட்ச வேகமும் மணிக்கு 60 கிமீ தான் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் பேட்டரி பேக் மற்றும் எலெக்ட்ரிக் மோட்டார் செட்டப் ஆகிய முக்கியமான இரண்டு பாகங்களுக்கும் 3 ஆண்டுகள் அல்லது 30,000 கிமீ வரையிலான வாரண்டியைக் கொடுப்பதாகத் தெரிவித்துள்ளது அந்நிறுவனம். இது ஒருவகையில் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் மீது வாடிக்கையாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் விதமாகவும் இருக்கிறது.

இந்த ஸ்கூட்டரில் முன்பக்கமும் பின்பக்கமும் 12 இன்ச்/ 10 இன்ச் வீல்கள், டெலிஸ்கோபிக் ஃபோர்க்/ ட்வின் ரியர் ஷாக் சஸ்பென்ஷன் செட்டப்புகள், டிஸ்க்/ டிரம் பிரேக் செட்டப்புகள் ஆகிய அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. மேலும் இந்த எலெக்டரிக் ஸ்கூட்டரில் டிஜிட்டல் ஸ்பீடோமீட்டர், ஓடோமீட்டர் ஆகிய அம்சங்களைக் கொடுத்துள்ளது கோமாகி.

மேலும், இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் கீலெஸ் எண்ட்ரி, ஆண்டி தெஃப்ட் லாக் மற்றும் பார்க் அசிஸ்ட் ஆகிய மேம்பட்ட வசதிகளையும் கோமாகி கொடுத்திருக்கிறது. ஜாய் இ-பைக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்குப் போட்டியாக இந்தப் புதிய எம்ஜி ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை கோமாகி வெளியிட்டுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் மிகவும் குறைவான விலை கொண்ட எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் பட்டியலில் ஒன்றாக கோமாகியின் இந்த எம்ஜி ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் சேர்ந்திருக்கின்றன. மிகவும் குறைவான தூரம் அல்லது அதிக பயன்பாடு இல்லாதவர்கள் மட்டும் இந்த கோமாகி எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை முயற்சி செய்யலாம். முக்கியமாக உங்கள் இருப்பிடத்திற்கு அருகில் கோமாகி ஷோரூம் இருந்தால் மட்டும் இந்த ஸ்கூட்டர்களை முயற்சி செய்வது பரிசீலனை செய்யப்படுகிறது.

Article Published On: Tuesday, July 7, 2026, 10:49 [IST]
English summary
Komaki mg pro electric scooters launched in india
மேலும்... #electric scooter #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out