வெறும் 36,500 ரூபாய் என்ற விலையில் வெளியான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்.. உடனே வாங்கிப் போடுங்க!
இந்தியாவில் பல்வேறு நிறுவனங்கள் எவ்வளவு முடியுமோ அவ்வளவு குறைவான விலைக்கு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களைத் தயாரித்து விற்பனை செய்ய முயன்று வருகின்றன. அப்படி மிக மிகக் குறைவான விலையில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்து வரும் நிறுவனங்களில் ஒன்று கோமாகி (Komaki). அடிமாட்டு விலையில் என்று சொல்வோம் இல்லையா, அவ்வளவு குறைவான விலையில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களைத் தயாரித்து விற்பனை செய்து வருகிறது இந்த நிறுவனம்.
இந்தியாவில் கோமாகி நிறுவனம் விற்பனை செய்து வரும் மிகவும் விலை குறைவான ஸ்கூட்டர்களில் ஒன்று X-ஒன் (X-One). வெறும் 36,500 ரூபாய் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் தொடங்கி இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை நாம் வாங்கலாம். இவ்வளவு குறைவான விலையில் தொடங்கி 67,500 ரூபாய் வரையிலான எக்ஸ்-ஷோரூம் விலையில் X-ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை பல்வேறு வேரியன்ட்களாக கோமாகி நிறுவனம் விற்பனை செய்து வருகிறது.

GR, 1.5 kW, 1.75 kW, பிரைம் மற்றும் ஏஸ் என ஐந்து வேரியன்ட்களாக X-ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது கோமாகி. இதில் GR தான் நாம் பார்க்கும் விலை குறைவான வேரியன்ட். GR என்பது கிரஃபீன் என்பதைக் குறிக்கிறது. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வேரியன்டில் மிகவும் சிறிய 48 வோல்ட் 34 ஆம்பியர் பேட்டரி பேக்கை பயன்படுத்தியிருக்கிறது கோமாகி.
இவ்வளவு சிறிய பேட்டரி பேக்குடன் 60 கிமீ வரையிலான ரேஞ்சை இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் கொடுக்கும் எனக் குறிப்பிட்டுள்ளது அந்நிறுவனம். எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் என்று கூறினாலும், இதனை தற்போது விற்பனையில் இருக்கும் டிவிஎஸ், பஜாஜ் சேட்டர் மற்றும் ஏத்தர் உள்ளிட்ட நிறுவனங்களின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுடன் நாம் ஒப்பிட முடியாது. ஏனெனில் இது குறைவான வேகம் கொண்ட எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ரகத்தைச் சேர்ந்தது.

GR, 1.5 kW மற்றும் 1.75 kW ஆகிய மூன்று X-ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் எந்த வேரியட்களை வாங்கினால், அதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 25 கிமீ தான். அதற்கேற்ப தான் இந்த ஸ்கூட்டரில் எலெக்ட்ரிக் மோட்டார் கொடுக்கப்பட்டுள்ளது. நகரங்களில் மிகவும் குறைவான சுற்றளவுக்குள் மட்டுமே எலெக்ட்ரிக் ஸ்கூட்டரைப் பயன்படுத்துபவர்களுக்கு ஏற்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இது.
மேலும், மிகவும் குறைவான வேகத்தில் மட்டுமே இயங்கும் திறனைக் கொண்டிருப்பதால், வழக்கமாக ஒரு இருசக்கர வாகனத்திற்குப் பொருந்தும் எந்தவொரு சட்டதிட்டத்தையும் இந்த X-ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்குப் பின்பற்ற வேண்டும் என்ற அவசியம் இல்லை. உதாரணமாக, இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை RTO-வில் தனியாகப் பதிவு செய்ய வேண்டிதில்லை, இதனை இயக்குவதற்கு தனியாக லைசன்ஸ் வாங்கத் தேவையில்லை. இதனால் 16 வயது நிறைந்தவர்கள் கூட லைசன்ஸ் இல்லாமல் இந்த ஸ்கூட்டரை இயங்குவதற்கு அனுமதிக்கப்படுகிறார்கள்.
ஆனால் ஹெல்மெட் இல்லாமல் இந்த ஸ்கூட்டரை ஓட்டக் கூடாது. இந்த ஸ்கூட்டர் மட்டுமல்ல எந்த இருசக்கர வாகனத்தை இயக்கினாலும் ஹெல்மெட் இல்லாமல் இயக்கக்கூடாது. பாதுகாப்பு காரணங்களுக்காக அந்த விதிமுறையை மட்டும் தவறாமல் அனைத்து மக்களும் அனைத்து நேரங்களிலும் பின்பற்ற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலே குறிப்பிட்ட மூன்று வேரியன்ட்களைத் தவிர்த்து, X-ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் ஏஸ் மற்றும் பிரைம் ஆகிய வேரியன்ட்கள் அதிகபட்சமாக 60 கிமீ வேகத்தில் செல்லும் திறன் கொண்ட எலெக்ட்ரிக் மோட்டாரைப் பெற்றிருக்கின்றன. எனவே இந்த வேரியன்ட்களை வாங்கினால் இருசக்கர வாகன விதிமுறைகளுக்கு கட்டுப்பட்டு அனைத்தையும் செய்ய வேண்டும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: உங்கள் வீட்டிற்கு அருகில் கோமாகி நிறுவனத்தின் ஷோரூம்கள் அல்லது டீலர்ஷிப்கள் இருந்தால் இந்த X-ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை ஒருமுறை டெஸ்ட் டிரைவ் செய்து பாருங்கள். ஒருவேளை உங்களுக்கான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இதுவாகக் கூட இருக்கலாம். குறைவான விலையிலேயே வாங்கி வீட்டிற்கு ஓட்டி வரலாம்.


Click it and Unblock the Notifications