கேடிஎம் 390 அட்வென்சர் X vs ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் 450.. இரண்டில் அதிக மைலேஜ் கொடுக்கக்கூடிய பைக் எது?

இந்தியாவில் தற்போது இளைஞர்கள் மத்தியில் அட்வென்சர் பைக் மாடல்களுக்கான ஆர்வம் அதிகரித்து வருகிறது. இந்த மாற்றத்தைப் புரிந்து கொண்ட ஆட்டோமொபைல் நிறுவனங்கள், இளைஞர்கள் விரும்பும் வகையிலான வசதிகள் மற்றும் விலையில் பைக்குகளை விற்பனை செய்து வருகிறது. தற்போது இளைஞர்களின் டாப் சாய்ஸாக இருக்கும் இரண்டு தொடக்க நிலை அட்வென்சர் பைக்குகள் என்றால் அது கேடிஎம்மின் 390 அட்வென்சர் X மற்ற ராயல் என்ஃபீல்டின் ஹிமாலயன் 450 தான்.

இரண்டுமே கிட்டத்தட்ட போட்டியாக விற்பனை செய்யப்படும் பைக்குகளாகவே இருந்து வருகின்றன. இந்திய வாடிக்கையாளர்களை பொறுத்தவரை, அனைத்து வகையான அம்சங்களுடன் மைலேஜும் மிகவும் முக்கியம். அந்த வகையில் இந்த இரண்டு 400 சிசி அட்வென்சர் பைக் மாடல்களும் நிஜ உலகப் பயன்பாட்டில் எவ்வளவு மைலேஜைக் கொடுக்கின்றன என்பதைப் பார்க்கலாம்.

KTM 390 Adventure X

முதலில் இந்த இரண்டு பைக்குகளின் ARAI மைலேஜ் விவரங்களைப் பார்க்கலாம். ARAI அமைப்பால் சோதனை செய்யப்பட்டு ஒரு மைலேஜ் அளவு தெரிவிக்கப்படும். இதனையே நிறுவனங்கள் நிறைய இடங்களில் பைக்கின் மைலேஜாகக் குறிப்பிடும். ஆனால், நிஜ உலகப் பயன்பாட்டின் போது நமக்குக் கிடைக்கும் மைலேஜானது, ARAI அமைப்பால் சோதனை செய்யப்பட்டு கிடைக்கும் மைலேஜ் அளவை விடக் குறைவாகவே இருக்கும்.

கேடிஎம் 390 அட்வென்சர் X மற்றும் ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் 450 ஆகிய இரண்டு பைக் மாடல்களக்கும் லிட்டருக்கு 30 கிமீ என்பதையே மைலேஜாகக் குறிப்பிட்டுள்ளது ARAI அமைப்பு. இந்த அமைப்பு குறிப்பிடும் மைலேஜே குறைவாக இருக்கும் நிலையில், நிஜ உலகப் பயன்பாட்டு மைலேஜ் இன்னும் குறைவாகவே இருக்கும். வாங்க அதுவும் எவ்வளவு என்று பார்த்து விடலாம்.

Royal Enfield Himalayan 450

கேடிஎம் 390 அட்வென்சர் X பைக் மாடலில் 398.63 சிசி, சிங்கிள் சிலிண்டர், லிக்விட்-கூல்டு இன்ஜின் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜினானது 46 PS பவர் மற்றும் 39 Nm டார்க்கை உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டுள்ளது. இந்த பைக்கானது நிஜ உலகப் பயன்பாட்டில் லிட்டருக்கு 24 கிமீ முதல் 25 கிமீ வரையிலான மைலேஜைக் கொடுக்கிறது. இந்த மைலேஜ் அளவானது நாம் பைக்கை ஓட்டும் வேகம், சாலைத் தரம் உள்ளிட்ட பல்வேறு காரணிகளின் கீழ் மாறக்கூடியது என்பது குறிப்பிடத்தக்கது.

ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் 450 பைக் மாடலில் 452 சிசி, சிங்கிள் சிலிண்டர், லிக்விட்-கூல்டு இன்ஜின் கொடுக்கப்பட்டுள்ளது. 38.5 hp பவர் மற்றும் 40 Nm டார்க்கை உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டுள்ளது. இந்த அட்வென்சர் பைக் மாடலானது நிஜ உலகப் பயன்பாட்டில் லிட்டருக்கு 27 கிமீ முதல் 28 கிமீ வரையிலான மைலேஜைக் கொடுக்கிறது. இதுவும் நாம் பைக்கை ஓட்டும் தன்மைக்கு ஏற்ப மாறக்கூடிது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த மைலேஜ் அளவுகளானது மேற்கூறிய இரண்டு பைக் மாடல்களையும் மணிக்கு 100 கிமீ-க்கு மேலான வேகத்தில் க்ரூஸ் செய்யும் போது கிடைத்த அளவுகள் என்பது குறிப்பிடத்தக்கது. குறைவான வேகத்தில் நிதானமாக ஓட்டும் போது இன்னும் சற்று கூடுதலான மைலேஜையும் வாடிக்கைாளர்களால் பெற முடியும். 390 அட்வென்சர் X பைக் மாடலானது இந்திாவில் ரூ.3.28 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையிலும், ஹிமாலயன் 450 பைக் மாடலானது ரூ.3.05 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையிலும் தொடங்கி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மைலேஜை மட்டும் எடுத்துக் கொண்டால் இடத்தில் வெற்றியாளர் ஹிமாலயன் 450 தான். சற்று குறைவான மைலேஜ் மற்றும் ஹிமாலயனை விட சற்று கூடுதலான விலை ஆகியவற்றுக் ஈடுகட்டும் விதமாக சில மேம்பட்ட தொழில்நுட்ப அம்சங்களை 390 அட்வென்சர் X கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அட்வென்சர் பைக்காக இரண்டுமே சிறப்பான பயன்பாட்டு அனுபவத்தைக் கொடுக்கக்கூடியவை தான்.

More from DriveSpark

Article Published On: Monday, March 30, 2026, 11:16 [IST]
English summary
Ktm 390 adventure x vs royal enfield himalayan 450 mileage comparison
மேலும்... #ktm #royal enfield #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+